ஞாயிறு, 19 மார்ச், 2023

அரசாணிப் பானை

சோழர் கல்வெட்டு ஆவணங்களில் அரசுக்கு குடிமக்கள் செலுத்த வேண்டிய பல வரியினங்களில் 
ஒன்று. கண்ணால கானம் .

அதாவது திருமண வரி. கண்ணாலம் இன்னும் -பாமரர் வழக்கிலுள்ள தமிழ் சொல்.

முதற் பராந்தக சோழன் கல்வெட்டில் இந்த வரி அரைகால் பணம் என அறியப்படுகிறது. கல்யாணத்திற்கு கூடவா வரி...? இதென்ன அநியாயம் ..? சோழர் ஆட்சி அவ்வளவு மோசமானதா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் சோழ நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றர்கள் மாப்பிள்ளை என்ற பெயரில் சோழ மண்ணில் ஊடுருவுவதையும் தடுக்கவும் கண்காணிக்க்கவும்மே இப்படி ஒரு வரி நடைமுறையில் அன்று இருந்திருக்கிறது. அதுதானே நிருவாகம் !

அண்டை நாடுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்த காலம்.கல்யாண உறவு என்ற போர்வையில் பகை அரசர் குடிகள் தம் நாட்டில் ஊடுருவி வாழ்வது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லவா ? அரண்மனைக்கு வரி செலுத்தும்போது மணமகன், மணமகள் இரு வீட்டார் தகவல்கள் முழுமையாகப்ப் பதிவு செய்யப்படும் வரி செலுத்துவதன் மூலம். திருமணமும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் வேண்டாத பின் விளைவுகள் எதிர் காலத்தில் ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா ?

மணமகன்,மணமகள், இரு வீட்டு பெரியோர்களும் ,கிராம சபையில் கூடி , விவாதித்து விளக்கம் பெற்று,இக் கண்ணாலத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி செய்து,ஒப்புதல் பெற்று, இரு வீட்டார் மற்றும் கிராம சபையார் கையெழுத்துடன், வரியையும் பெற்று ,மன்னனின் அங்கீகாரம் பெற அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்படும்..

அரண்மனையில் வரி பொத்தகத்தில் பதிவு செய்து,கண்ணால விவரங்கள் மன்னனுக்குத் தெரியபடுதப்படும். கிராம சபையார் பரிந்துரையை ஏற்று மன்னனும் இக் கண்ணாலத்திற்கு ஒப்புதல் ஆணையில் கையொப்பம் இடுவான். உடன் வந்த ஊர் சபையாரும் சாட்சியாக கையழுத்திடுவார்கள். இது கண்ணாலதிற்கு அரசன் ஒப்புதல் அளித்து இட்ட ஆணை. அரசர் ஆணையை, அரசன் தன நாட்டு புது மணத் தம்பதிகளுக்கு பரிசாக வழங்கும் பானைகளுடனும்,பரிசு பொருள்களுடனும் மணப் பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்..

மணவிழா நாளன்று அரசன் ஆணையுடன் வரும் பரிசுப் பானைகளை மேளவாத்தியங்களுடன் எதிர் கொண்டு அழைத்து ஊர்வலம் வந்து, திருமணத்திற்கு அரசன் ஆணை கிடைத்து விட்ட தகவல் ஊராருக்கும் தெரியப்படுத்தப்படும். மணவிழா மேடையில் ஈசான்ய திசையில் வைக்கப்பட்டு ,மாவிலை, தர்ப்பையுடன் சிவப்பு வஸ்திரமும் கட்டி , மஞ்சள் குங்குமம் இட்டு சகல் மரியாதைகளும் அரசனுக்கு செய்வது போல் செய்யப்படும், இப்பானைகள் மூன்று கிளையாகப் பிரிந்த ஒரு ஒதியம் போத்துடன் சேர்த்து இணைக்கப்படும். இவற்றின் முன்னிலையில்தான் திருமண சங்குகள் நடைபெறும்.. 

மணப்பெண்ணிற்கு மங்கல நாண் பூட்டியதும் மணமக்கள் அரசன் தங்களுக்கு அனுப்பி வைத்த பரிசு பொருள்களை ,தண்ணீர் நிரம்பியுள்ள பெரிய பானையில் ஒரே நேரத்தில் கைகளைவிட்டு துழாவி எடுப்பார்கள்.இதன் பின்னர் மணப்பெண் அரசன் வழங்கிய பானையுடன் கணவனுடன் நீர் நிலைக்கு சென்று நீர் நிரப்பிக்கொண்டு வருவாள். 
இந்த அரசர் ஆணை பானையே சிதைந்து இன்று அரசாணி பானை ஆகிப்போனது..

இந்த முறை பெரும்பாலும் அரச கும்பதினருக்கும், போர்தொழிலில் ஈடுபடும் சமூகத்திற்கு மட்டுமே அன்று நடை முறையில் இருந்த தாக தெரிகிறது. தொண்டு தொட்டு வரும் இந்த பழக்கம் பொருளறியாது இன்றும் தமிழர் திருமணங்களில் நடைமோரியில் உள்ளது.

தன நாட்டின் குடி மக்களின் திருமணத்தை அரசன் அங்கீகரித்து ஆணையிடுவதுடன்,குடும்பம நடத்திட தேவையான பானைகளையும் பரிசு பொருட்களையும் சோழ மன்னர்கள் ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்கள் ,திருமணத்தை சிறப்பித்தார்கள் என்பது 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் நினைவாகப் போற்றப்படுகிறது என்பதே நம் பாரம்பர்யதிர்க்கு நாம் தரம் கெளரவம்.

ஒதியம் போத்தை மணமகள் தன கணவன் வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டின் கொள்ளையில் நட்டு அதனை வளர்த்து வரூவாள். வண்ணம் தீட்டிய பானைகளும் தானியங்கள் சேமித்து வைக்கும் கொள் கலனாகப் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இனிமேல் கல்யாணத்திற்கு போனால் அரசாணிபானை எடுப்பு சடங்குகளை கவனித்துப் பாருங்கள்...... அண்டை நாடுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்த காலம்.கல்யாண உறவு என்ற போர்வையில் பகை அரசர் குடிகள் தம் நாட்டில் ஊடுருவி வாழ்வது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லவா ? அரண்மனைக்கு வரி செலுத்தும்போது மணமகன், மணமகள் இரு வீட்டார் தகவல்கள் முழுமையாகப்ப் பதிவு செய்யப்படும் வரி செலுத்துவதன் மூலம் .திருமணமும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் வேண்டாத பின் விளைவுகள் எதிர் காலத்தில் ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா ?
மணமகன்,மணமகள், இரு வீட்டு பெரியோர்களும் ,கிராம சபையில் கூடி , விவாதித்து விளக்கம் பெற்று,இக் கண்ணாலத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி செய்து,ஒப்புதல் பெற்று, இரு வீட்டார் மற்றும் கிராம சபையார் கையெழுத்துடன் ,வரியையும் பெற்று ,மன்னனின் அங்கீகாரம் பெற அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்படும்..

அரண்மனையில் வரி பொத்தகத்தில் பதிவு செய்து,கண்ணால விவரங்கள் மன்னனுக்குத் தெரியபடுதப்படும் .கிராம சபையார் பரிந்துரையை ஏற்று மன்னனும் இக் கண்ணாலத்திற்கு ஒப்புதல் ஆணையில் கையொப்பம் இடுவான். உடன் வந்த ஊர் சபையாரும் சாட்சியாக கையழுத்திடுவார்கள்..இது கண்ணாலதிற்கு அரசன் ஒப்புதல் அளித்து இட்ட ஆணை.அரசர் ஆணையை, அரசன் தன நாட்டு புது மணத் தம்பதிகளுக்கு பரிசாக வழங்கும் பானைகளுடனும்,பரிசு பொருள்களுடனும் மணப் பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்..

மணவிழா நாளன்று அரசன் ஆணையுடன் வரும் பரிசுப் பானைகளை மேளவாத்தியங்களுடன் எதிர் கொண்டு அழைத்து ஊர்வலம் வந்து, திருமணத்திற்கு அரசன் ஆணை கிடைத்து விட்ட தகவல் ஊராருக்கும் தெரியப்படுத்தப்படும். மணவிழா மேடையில் ஈசான்ய திசையில் வைக்கப்பட்டு ,மாவிலை, தர்ப்பையுடன் சிவப்பு வஸ்திரமும் கட்டி , மஞ்சள் குங்குமம் இட்டு சகல் மரியாதைகளும் அரசனுக்கு செய்வது போல் செய்யப்படும், இப்பானைகள் மூன்று கிளையாகப் பிரிந்த ஒரு ஒதியம் போத்துடன் சேர்த்து இணைக்கப்படும். இவற்றின் முன்னிலையில்தான் திருமண சங்குகள் நடைபெறும்.. 

மணப்பெண்ணிற்கு மங்கல நாண் பூட்டியதும் மணமக்கள் அரசன் தங்களுக்கு அனுப்பி வைத்த பரிசு பொருள்களை ,தண்ணீர் நிரம்பியுள்ள பெரிய பானையில் ஒரே நேரத்தில் கைகளைவிட்டு துழாவி எடுப்பார்கள்.இதன் பின்னர் மணப்பெண் அரசன் வழங்கிய பானையுடன் கணவனுடன் நீர் நிலைக்கு சென்று நீர் நிரப்பிக்கொண்டு வருவாள். 
இந்த அரசர் ஆணை பானையே சிதைந்து இன்று அரசாணி பானை ஆகிப்போனது..

இந்த முறை பெரும்பாலும் அரச கும்பதினருக்கும், போர்தொழிலில் ஈடுபடும் சமூகத்திற்கு மட்டுமே அன்று நடை முறையில் இருந்த தாக தெரிகிறது. தொண்டு தொட்டு வரும் இந்த பழக்கம் பொருளறியாது இன்றும் தமிழர் திருமணங்களில் நடைமோரியில் உள்ளது.

தன நாட்டின் குடி மக்களின் திருமணத்தை அரசன் அங்கீகரித்து ஆணையிடுவதுடன்,குடும்பம நடத்திட தேவையான பானைகளையும் பரிசு பொருட்களையும் சோழ மன்னர்கள் ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்கள் ,திருமணத்தை சிறப்பித்தார்கள் என்பது 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் நினைவாகப் போற்றப்படுகிறது என்பதே நம் பாரம்பர்யதிர்க்கு நாம் தரம் கெளரவம்.

ஒதியம் போத்தை மணமகள் தன கணவன் வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டின் கொள்ளையில் நட்டு அதனை வளர்த்து வரூவாள். வண்ணம் தீட்டிய பானைகளும் தானியங்கள் சேமித்து வைக்கும் கொள் கலனாகப் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இனிமேல் கல்யாணத்திற்கு போனால் அரசாணிபானை எடுப்பு சடங்குகளை கவனித்துப் பாருங்கள்.

கட்டுரை
ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்