திங்கள், 9 மார்ச், 2020

பேய்காமன்


பேக்காமன் கள்ளர் நாட்டு தெய்வத்தின் பெருமை.

வயக்காட்டு பெரிய ஆம்பளை, வண்டிக்காரன் சாமி என்றெல்லாம், அன்பாக அழைக்கப்படும் பேய்காமன் சாமி. பேகாமன் சாமி கள்ளழகரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ஆதியிலே கொக்குளம் என்று கூறக்கூடிய எட்டு கள்ள நாடுகளிலே ஒரு நாடான வன பகுதியில் ஆட்சி பரிபாலனம் செய்து கொண்டிருந்த வன வீரன் தான் இந்த பேய்க்காமன். இந்தப் பகுதிக்கு புதிதாக வந்த பேச்சி எனும் தெய்வம் ஆரிய வழிபாடான யாகம் வளர்த்தல், சைவப் பொங்கல், சங்கு, சவுண்டி என்று வழிபாடுகளை மேற்கொள்ள, இதனால் எரிச்சலுற்ற பேக்காமன் அந்த யாகத்திற்கு இடையூறு செய்கிறார். அந்த யாகத்தின் குண்டங்களில் வேட்டையாடிய மாமிசங்களை வீசி எறிந்து கலகம் செய்கின்றார். 


கள்ளர் நாட்டு தெய்வமான பேக்காமன் வரலாற்றிலும் உள்ளது. இந்த பிரச்சனையில பேச்சி தனது அண்ணனான விருமாண்டியை வைத்தே தீர்க்க முயல்கிறார்.

பேக்காமன் கோயில் ஆதியில் உருவான காலத்தில் இருந்து பூஜை செய்யும் தகுதி உடையவர்களாக அந்த தெய்வத்தை தொட்டு அலங்கரித்து பராமரிக்கும் பூசாரிகளாக பறையர் குடியை சேர்ந்த மக்கள் மட்டுமே இன்றளவும் உள்ளனர். இன்றும் இந்த பேய்க்காமன குல தெய்வமாக வணங்கக் கூடிய கள்ளர் சமூகத்தவர் அவர்கள் எத்தகைய பெரிய நிலையில் அரசு பதவிகளில் இருந்தாலும் இந்த பறையரின பூசாரிகளின் பாதம் பணிந்தே அவர்களின் அருள் வாக்கு பெற்ற பிறகு தான் தங்களுடைய நல்லது கெட்டதுகளை செய்கிறார்கள். இந்த வழக்கமானது அந்த பேய்க்காமன் தன்னை யார் வணங்க வேண்டும் எவ்வாறு வணங்க வேண்டும் என்று கூறிச்சென்ற வகையிலே பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. 

இந்த பறையர் இன பூசாரிகளுக்கு அந்த கோயிலுக்கு மிக அருகாமையிலே அவர்கள் மட்டுமே அனுபவித்துக் கொள்ளக்கூடிய வகையில் விவசாய பூமியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளில் அவர்கள் கூறும் முடிவுகளுக்கு ஏற்பவே அத்தனை விஷயங்களும் நடைபெறும். இந்த பறையர் இன பூசாரிகளே பேக்காமன் குல தெய்வமாக வணங்கக் கூடிய கள்ளர்களின் இல்ல விழாக்களில் விபூதி கொடுத்தல் என்ற முக்கிய பணியை செய்கிறார்கள்.

இந்தக் கோயிலில் உள்ள மற்றொரு முற்போக்கான பழக்கம் என்பது கோயில் வாசலில் ஒரு மண் குடுவையில் நீர் வைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டில் வழக்கத்தில் உள்ள தீட்டு பார்த்தல் என்ற முறையானது இங்கு இல்லை .

இந்த பெண் தீட்டு ஆன காலங்களில்
இந்த மண் கலயத்தில் உள்ள நீரை தலையில் தெளித்துவிட்டு கோயிலுக்குள் சென்று பேய்க்காமன வழிபடலாம். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை இந்த மண் கலயம் என்பதுகூட இடைக்காலத்தில் வந்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது. பெண்ணை சக மனுஷியாக சமமான நிலையில் பார்த்த ஒரு தெய்வம் உண்டென்றால் அது பேக்காமன் தான்.

ஆதியிலிருந்து அவர்கள் எந்த தீட்டும் இல்லாத சாமியாகவே உள்ளார்.

எந்த ஆரிய வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சுத்த தமிழ் தெய்வமாகவே இன்றளவும் உள்ள பேக்காமன் வணங்கி வருகின்றனர்.

பேக்காமன் என்ற சொல்லுக்கு அர்த்தம் .

பே - மேகம், நுரை, அழகு, அச்சம்
காதன் - காமம், இந்திரன் , மன்மதன், காதல்

பேகாமன் - அழகிய இந்திரன்

மேலும் சில செவிவழி கதையாக சொல்லப்படும் ஒரு செய்தி

.




இமய மலையில் இருந்த மாயன் (விஷ்ணு), விருமான் (பிரும்மா ) , சிவன் மற்றும் பேச்சி (பார்வதி ) போன்ற அனைவரும் தென் இந்தியப் பகுதிக்கு வந்து தங்க முடிவு செய்தனர். ஆனால் அப்போது மாயன் தவத்தில் இருந்ததினால் மற்றவர்களை முதலில் போகுமாறும் தான் பின்னர் வருவதாகவும் கூறினார். அகவே மற்றவர்கள் மதுரையில் இருந்த வைகை நதிக் கரையை அடைந்து காச்சிரயப்பு என்ற இடத்துக்கு சென்றார்கள். ஆனால் அந்த இடம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. விருமான் கேரளாவுக்குச் சென்று தனக்கு உகந்த இடத்தை தேட எண்ணினார். பேச்சிக்கு பொறுமை இல்லை. ஆகவே அருகில் இருந்த நாக மலை என்ற இடத்துக்குப் போய் தன்னை ஒரு சூனியக்காரி போல மாற்றிக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் தன்னை எங்காவது நல்ல இடத்தில் விட்டு விடுமாறு கேட்டாள். அவள் ஒரு தங்கத்திலான பல்லக்கையும் அங்கு வரவழைத்தாள். ஆகவே அவளை சுமந்து கொண்டு சென்ற கிராமத்தினர் அவளை கருமத்தூர் காட்டில் விட்டு விட அதுவே தனக்கு தங்குவதற்கு சிறந்த இடம் என முடிவு செய்தாள். அன்று இரவு அவள் மணி அடித்து பூஜை செய்து கொண்டு இருந்தபோது அந்த காட்டில் வசித்து வந்த பேய் காமன் வந்து அந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும் அங்கிருந்து போய் விடுமாறும் அவளிடம் கூறியது. அவளை பயமுறுத்த தனது கழுத்தில் தான் கொன்ற பிராணிகளின் குடல்களைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டு வந்தார். ஆனால் அவளோ அவற்றை பூ மாலைகளாக மாற்றி விட்டாலும் மனதில் இருந்த பயம் போகவில்லை. அவள் தனக்கு துணைக்கு சிவனை அழைத்தாள். சிவன் ஒரு சைவம் என்பதினால் அவரால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது போல அவள் அழைத்த இமய மலையில் தவம் புரிந்து கொண்டு இருந்த மாயனாலும் வேறு சில காரணத்தினால் வர முடியவில்லை. ஆகவே அவள் விருமானை அழைத்தாள். அவரோ தான் கேரளாவில் சுகமாக இருப்பதாகவும் ஆகவே அங்கு வர முடியாது எனவும் கூற அவளோ அவர் அங்கு வந்து தன்னை பாதுகாத்தால் அவருக்கு ஆறு கால பூஜைகளை செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூற அவரும் அதனால் மனம் மகிழ்ந்து அங்கு வந்தார். வந்தவர் பேய் காமனுடன் சண்டையிட்டார். சண்டையில் குதிரையின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அந்த சண்டைக் கண்டு கவலையுட்ற சுப்பிரமணியர், மீனாக்ஷி மற்றும் சொக்கநாதர் வந்து அந்த சண்டையை நிறுத்தினார்கள். சுப்பிரமணியர் அவர்களிடம் கால் ஒடிந்த பேயனின் குதிரை மீது விருமான் ஏறிக்கொண்டு எத்தனை தூரம் போய் விட்டு வருகின்றாரோ அத்தனைஇடமும் அவருக்கு சொந்தம் ஆகும் எனவும், அது போல பேய் காமனும் விருமானின் குதிரை மீது ஏறிக்கொண்டு எத்தனை தூரம் போய்விட்டு வருகின்றாரோ அந்த இடங்கள் அவருக்கு சொந்தம் எனவும் கூறினார். நொண்டிக் குதிரையினால் அதிக இடங்கள் போக முடியவில்லை, ஆனால் பேய் காமனோ பல இடங்களுக்கு சென்று திரும்பினார். அதனால் கோபமுற்ற பேச்சி அம்மன் இனி அந்த பூமியில் சுப்ரமணியரை எவராவாது வழிபட்டால் அவர்கள் குடும்பம் நாசமாகும் என சாபமிட்டாள். ஆகவே கருமத்தூரில் இன்று வரை எவரும் சுப்ரமணியருக்கு பூஜைகள் செய்வதே இல்லை. விருமான் அனைவரைவிட பலசாலி என்பதினால் அவர் அங்கு இருந்தால் தனக்கு பாதுகாப்பு எனக் கருதி அவரை பேச்சியம்மன் ஒரு செயினால் கட்டி அவரை ஒரு பொந்துக்குள் தள்ளி மூடிவிட்டாள் . வருடத்துக்கு ஒருமுறை - ஜூலை- ஆகஸ்ட்டில் அவருக்கு விசேஷமான விழா எடுக்கப்படும் என்றாள். சிவன் சைவம் என்பதினால் கீழ் குயில் குடி என்ற இடத்தில் அவருக்கு ஆலயமும், மற்ற மூன்று கடவுட்களுக்கும் ( பேச்சி, விருமான், மாயன்) கருமாதூரில் ஆலயமும் எழுப்பப்பட்டது. ஆடி கடைசி வெள்ளிக் கிழமைஅன்று விருமானுக்கு கருப்பு நிற ஆடு பலி தரப்படுகின்றது. வெட்டப்பட்ட அதன் தலையை பூமிக்குள் புதைத்து விடுகின்றனர். அந்த ஆட்டு இறைச்சியை வைத்து பொங்கல் செய்து அவருக்கு படைகின்றனர். அப்போது அந்த ஆலய பூசாரி அதில் இருந்து சிறுது உருண்டை பிடித்து மூன்றுமுறை நாலாபுறமும் ஆகாயத்தில் வீசுவார். அது கீழே விழுவது இல்லையாம். விருமான் அடைபட்டு கிடப்பதாக கூறப்படும் இடத்தின் மீது பெரிய பாறையினால் செய்யப்பட்ட விளக்கு கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. விருமானுக்கு பூஜை செய்து வணங்கும்போது அந்தக் கல் பாறை ஆடுமாம். அன்று இரவு ஒரு கர்பிணி ஆட்டை பேச்சியம்மனுக்கு பலி தருகின்றனர். அந்த விழா நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்த ஊரில் உள்ள அனைத்து கர்பிணிப் பெண்களும் ஊரை விட்டுச் சென்று வெளியூரில் தங்குவார்களாம். பேச்சியம்மனை மாயகாரப் பேச்சி எனவும் திலைவனப் பேச்சி எனவும் அழைகின்றனர். ஒரு முறை ஒருவன் கொல்லப்பட்டுவிட அவனுடைய மகன் அவளிடம் சென்று கொன்றவனை தண்டிக்குமாறுக் கேட்க, அவள் ஒரு கிழவி உருவில் வழக்கு மன்றம்வரை சென்று சாட்சி கூறி கொன்றவனுக்கு தண்டனை வாங்கித் தந்தாளாம். ஆகாவே அவளை உயர் நீதி மன்ற பேச்சி எனவும் கூறுகின்றார்கள்.