புதன், 22 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ அரிஞ்சய சோழத்தேவர்



அரிஞ்சய சோழத்தேவர் (கி.பி. 956 - 957)

கண்டாதிரத்தருக்குப்பிறகு பரகேசரி என்னும் பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார். இவரது ஆட்சியாண்டு, காலம் குறித்து போதுமான சான்றுகள் இல்லை. இராஷ்டிர கூடர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இவர் போர் செய்திருக்கலாம். இவரது கால முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல் இல்லை.

வேலூர் அருகே மேற்பாடி என்னுமிடத்தில் இவருக்கு பள்ளிப்படையான நினைவாலயம் உள்ளது.



பராந்தக சோழரின் புதல்வர்களில் ஒருவரும் கண்டராதித்தருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவரும் ராஜராஜ சோழரின் பாட்டனாருமான அரிஞ்சய சோழர் ஆற்றூர் எனும் ஊரில் மறைந்துள்ளார். திருவல்லத்திற்கு அருகேயுள்ள மேல்பாடி என்று தற்போது அழைக்கப்பெறும் ஊரில் ராஜராஜர் தனது தாத்தாவிற்கு பள்ளிப்படை கோவில் எடுப்பித்துள்ளார். அந்தக் கோவில் கல்வெட்டுகளில் அவர் ஆற்றூர் துஞ்சிய தேவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கீழே காணலாம்.


இவரது மகன்தான் இரண்டாம் பராந்தகன் எனப்படும் சுந்தர சோழன்.