புதன், 22 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ சுந்தர சோழத்தேவர்


சுந்தர சோழத்தேவர் (கி.பி. 956 - 973)



அரிஞ்சய சோழன் இறந்த பின்னர் வைதும்பராயனின் மகளான, அரசி கல்யாணியின்பாற் பிறந்த அரிஞ்சய சோழனின் மகன் (இரண்டாம்) பராந்தகன் கி.பி. 957 -ல் சோழ இராச்சியத்திற்குச் இராச கேசரி என்னும் பட்டத்துடன் சக்கரவர்த்தியாய் முடிசூட்டப்பெற்றான்.

சுந்தரச்சோழனுக்கு பராந்தகன் என்னும் பெயரும் உண்டு.


பெற்றோரால் பராந்தகன் எனும் பெயர் சூட்டப்பட்ட இம்மன்னன் பேரழகனாய் இருந்தமையால் பின்னர் ‘சுந்தர சோழன்’ என்ற பெயர் பெற்றான் என அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.



மூன்று வாரிசுகள்..

குந்தவை நாச்சியார்..
ஆதித்த கரிகாலன்..
அருமொழி என்னும் இராசராசன்.


இவரது ஆரம்ப மற்றும் முடிவு ஆட்சியாண்டு பற்றிய உறுதியான சான்றுகள் இல்லை. வரலாற்று ஆர்வலர்களிடையே பெருத்த கருத்து வேறுபாடு உள்ளது.

இவர் 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் என்பது கல்வெட்டுச் சான்றுகளுடன் உறுதி செய்யப்படுகிறது.

இவரது காலத்தில் தொண்டை நாட்டை இராஷ்டிர கூடர்களிருந்து மீட்கும் முயற்சி வெற்றி பெற்றது.

அதே நேரம் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவர் இராசசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன். இவர் ஏதோ ஒரு போரில் சோழர்களை போரில் வென்றிருக்க வேண்டும்.. ( பராந்தகனின் மூன்றாம் மகனான உத்தமசீலி என்பவராக இருக்கலாம். ஒரு யூகம். ) சோழன் தலை கொண்ட பாண்டியன் என்னும் பட்டத்தை வீரபாண்டியன் கல்வெட்டுகளில் வெட்டினார்.

சுந்தரச்சோழன் மதுரை மீது கி.பி. 962 ல் படையெடுக்கிறார். வீரபாண்டியனை வென்று மதுரையை கைப்பற்றினார். வீரபாண்டியன் தோற்று பின் வாங்கினார். இவ்வெற்றியின் காரணமாக இவர் மதுரை கொண்ட இராசகேசரி என அழைக்கப்பட்டார்.

கி.பி. 966 ல் மீண்டும் வீரபாண்டியன் படை திரட்டி சோழர்களுடன் மோதுகிறார். போர் நடைபெற்ற இடம் சேவூர். இப்போரில் சுந்தரச்சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் பங்கேற்கிறார். போரில் வீரபாண்டியை வென்று அவரது தலையை கொய்தான். வீரபாண்டிய தலைகொண்ட ஆதித்த கரிகான் என்னும் பட்டம் பெறுகிறார். 

ஆதித்த கரிகாலனும் தந்தை சுந்தரச் சோழனுடன் இணைந்து ஆட்சி செய்திருக்கலாம். காலம் 966 - 971 கல்வெட்டுகள் இவரை வீரபாண்டியன் தலை கொண்ட கோபரகேசரி என்று கூறுகின்றன..

கி.பி. 971 ல் ஆதித்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

அடுத்த இரண்டொரு ஆண்டில் சுந்தரச்சோழனும் இறந்திருக்க வேண்டும்.. இவரை பொன்மாளிகை துஞ்சினதேவர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.