செவ்வாய், 2 மே, 2023

மாங்குளம் பொன்னம்பல புள்ளியன் (கி.பி. 1600)




காவல்துறை அதிகாரியான மேகவர்னன் ராமு அவர்கள் மாவீரர் மாங்குளம் பொன்னம்பல புள்ளியன் பற்றி கூறுவது....

இவருடைய வரலாற்று பதிவு என்பது மிக நீண்ட பயணம்..... இவர் எங்களின் முப்பாட்டனார் இவருக்கு மூன்று குழந்தைகள் அதில் ஆண் பிள்ளை கருப்பணன் பெண் பிள்ளைகள் வெங்கலமட நாச்சியார் , அதியமடை நாச்சியார் . நாங்கள் கருப்பணின் வம்சாவளிகளே மாங்குளம் கிராமத்தில் தலை திண்ணியர் என்ற பட்டத்தை பெற்று இன்றளவும் கிராம முதல் மரியாதைக்கு சொந்தக்காரர்களாக வாழ்ந்து வருகிறோம்.

16ம் நூற்றாண்டில் கள்ளழகர் சித்திரை திருவிழாவில் தல்லாகுளம் நோக்கி செல்லும் போது வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற துலுக்கர்களை துரத்தியடித்த பொன்அம்பலபுல்லியன் வீரத்தை போற்றுகின்ற வகையில் இன்றளவும் அழகர் பல்லக்கை மறித்து 'வாழக்கலை'எனும் ஆயுதத்தால் தாக்கும் நிகழ்ச்சியில் மாங்குளம் பொன்அம்பலபுல்லியன் வகையறாவினரே பங்கு பெறுகின்றனர். மேலும் "திருமங்கையாழ்வார் வேடுபறி" என்னும் திருவிழா மார்கழி மாதத்தில் நடைபெறும் அதை நடத்தும் பொறுப்பு மாங்குளம் பொன் அம்பல புல்லியன் வம்சாவளியினருக்கே உண்டு.

அத்திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு கையில்"வளரி"ஏந்தி கோவில் மரியாதையை இன்றளவும் பெறுகின்றனர். 

மேலும் மார்கழி மாதத்தில் திரு அத்யயன உற்சவத்தில் பங்குபெற்று கள்ளர்குரிய உரிமையினை "மாங்குளம் வகையறா கள்ளர் தோசை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழாவிலும் இவ்வகையினருக்கு தோசை உரிமை உண்டு.

இதுதவிர மத்தம் மேல நாட்டுக் கள்ளரில் மாங்குளம் கிராமத்தாருக்கு மட்டுமே கோவில் எல்லையில் இரணியன் வாசலருகில் ஒரு மண்டபம் உரிமையாகியுள்ளது.

சித்திரை திருவிழாவில் இறைவனின் ஆடை அணிகலன் நகை பெட்டியினை மதுரைக்கு தூக்கிவரும் உரிமையும் மாங்குளம் கிராமத்தவருக்கே உண்டு (துலுக்க திருடர்களிடம் இருந்து தல்லாகுளத்தில் பல்லக்கில் வந்த கள்ளழகரை பொன் அம்பல புல்லியன் போரிட்டு பாதுகாத்ததால் இம்மரியாதை)


மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளழகர் மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் மண்டகப்படிகளில் "நான்கனா" வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்திற்கு இருந்திருக்கிறது .

மாங்குளம் கிராமத்தில் பொன்அம்பலபுல்லியன்,்ஆனைவெட்டிதேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும் வடக்குத்தெரு அஞ்சாங்கரை அம்பலம் என்ற பிரிவினரும் அழகர்கோவிலில் வேறுபாடின்றித் திருவிழாவில் பங்குகொள்வதற்கான பரிவட்ட மரியாதையை மாறிமாறி பெற்றுகொள்கின்றனர்..

..ஆய்வுகள் தொடரும்..

ஆய்வு : 
வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம் 
மேலூர் மதுரைமாவட்டம்