செவ்வாய், 1 அக்டோபர், 2019

தஞ்சிராயர் / தஞ்சைராயர் வரலாறு

தஞ்சை + அரையர் - தஞ்சையரையர் - தஞ்சைராயர் - தஞ்சிராயர். 

செந்தலையில் வாழ்ந்தவரும், பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசர்களாய் அவர்களுக்குத் துணையாய்ப் பாண்டியர்களோடு போரிட்டு, வந்தவரும் ஆகிய முத்தரையர்ளன்பார், 'தஞ்சைக்கோன்’ தஞ்சை நற்புகழாளன்’ 'தஞ்சைராயர்' என்று பட்டப் பெயர்களை மேற்கொண் டிருந்தனர். அதனால், செந்தலையைத் தம் தலைநகராகக் கொண்டிருப்பினும், முத்தரையர் தஞ்சையையும் கைப்பற்றி ஆண்டு வந்தனர்.

செந்தலை தூன் கல்வெட்டில் வல்லகோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்று பொறிக்கபட்டுள்ளது. வல்லத்தரையர், தஞ்சைராயர், முத்தரையர், செம்பியமுத்தரையர் என்ற கள்ளர் குடியினர், இன்றும் தஞ்சை வல்லம், செந்தலை, தஞ்சை பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.


தஞ்சாவூர் காசவளநாடு என்ற கள்ளர் நாட்டில் வரும் சூரியம்பட்டி முழுவதும்,  சிங்கவளநாடு என்ற கள்ளர் நாட்டில் வரும் தளவாபாளையம் பகுதியிலும்,     தஞ்சிராயர் பட்டம் உள்ளவர்களே உள்ளனர். மகாதேவப்பட்டிணம் ஊரில்   தஞ்சிராயர் தெரு பகுதியிலும், மேலும் சோழ மண்டலத்தில் பல பகுதியில் வாழ்கின்றனர்.



கூடலூர் மிராசுதார் து. முத்துக்குமாரசாமித் தஞ்சைராயர் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வளர்ச்சிக்கு துணைநின்றவர்.




தஞ்சை பூக்காரத்தெருவில் அமைந்துள்ள கணேசா வித்யா சாலா பள்ளி இராசராசன்பெருமன்றதிற்க்கு நன்கொடையளித்து திறந்துவைத்தவர்கள் ஒருவர் தங்கவேல் தஞ்சிராயர்.