வியாழன், 3 அக்டோபர், 2019

அதியமார் மரபினர் / அதிகைமான் வரலாறு / அதியமான் வரலாறு


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் 

அதிகமான்‌ - கள்ளர்குலப்‌பட்டப்பெயர்களுள்‌ ஒன்று , ஒருசார்‌ கள்ளர்‌, அதிகமான்‌ வழிவந்த பிற்‌ காலச்‌ சிற்றரசருள்‌ ஒருவனுடைய படை மறவரா யிருந்திருக்கலாம்‌.


அதியமார், அதியன், அதிகன், அதிகமான் என்ற பட்டங்களுடைய கள்ளர் மரபினர் இன்றும் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில் வாழ்ந்து வருகின்றனர். 

காலத்தால் முந்தைய அதியமானாய் கருதப்படுவது பசும்பூன் பாண்டியனுக்காய் போரிட்டு அவனுக்காய் தன் உயிரை மாய்த்த அகநானூறு குறிப்பிடும் அதிகனையே முதல் அதியமானாய் அறிஞர் கருதுகின்றனர். இதற்கடுத்து கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவ்வைக்கு அளித்து அழியாபுகழ் பெற்ற அதியமான் ஆவார். அவரின் மகன் "பொகுட்டெழினி" மூன்றாமவர். அசோகரது கல்வெட்டிலேயே அதியமான்கள் குறித்து குறிப்பு வருகிறது எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைபெற்ற குடியினராய் அதியர் மரபை கொள்ளலாம். கி.மு.5 ம் நூற்றாண்டினை சேர்ந்தவராய் அதியர் மரபை சான்றுகளோடு ஏற்கலாம். 




அதியமான்களின் பூர்வீக இடம் பாண்டிய நாடு

நெடுங்கள நாடு என்பது பாண்டிய நாட்டின் 100 பிரிவுகளில் ஒன்று. தற்போது உள்ள வத்தலகுண்டு வட்டாரம் நெடுங்களநாடு என்று அழைக்கப் பட்டது. சங்ககாலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான். இந்த நாடு அதியமான்களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது. அதிகமான் நெடுமிடல் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் படைத்தலைவனும் ஆவான். அவனது படையில் இருந்த புகழ் மிக்க வீர்கள் இந்தநாட்டுப் பகுதியில் இருந்தவர்கள். இந்தப் பகுதியில் தான் புலிமான்கோம்பை, தாதபட்டி போன்ற இடங்களில் இந்தியாவிலேயே பழமையான தமிழி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

பாண்டியர்களின் பிரதிநிதியாகவே படையெடுத்துச் சென்று தகடூரை கைப்பற்றி தற்போதைய தர்மபுரி பகுதியில் அதியமான்கள் நிலையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 

நெடுங்களநாடு என்பது கள்ளர் நாடுகளில் ஒன்றாகவே உள்ளது. தொட்டயங்கோட்டை சமீன்தார் வமுசாவழி கணக்கு(D.3842) குறிப்புகளில் " 2 ஆவது பட்டம் பெத்தழு நாயக்கர் சிறுது காடுவெட்டி பூமியுண்டாக்கினார்கள், பெத்தழு நாயக்கர் சிறுபிள்ளையானதிலே யிவிடம் கள்ளர்_பூமியானதினாலே இவருக்கு வசவிற்தி வாறாமல் படிக்கி இருக்கிற தருணத்தில், இந்தப் பாண்டிய தேசத்திற்கு அதிபதி சந்திர சேகர பாண்டியன்" : தொட்டயங்கோட்டை ஜமீனின் முன்னோர் கிபி 1500 கால கட்டத்தில் திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியில் விஜய நகர அரசர் ராயர் அளித்த நிலப்பகுதியில் குடியேறி பாளையத்தை அமைக்க முயன்றபோது இப்பகுதி பாண்டிய நாட்டை சந்திர சேகர பாண்டியன் என்பவர் விஜய நகர பேரரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சியை நடத்தியதாகவும், அச்சமயத்தில் இவ்விடம் கள்ளர் பூமியாக இருந்ததால் பெத்தழு நாயக்கரால் கள்ளர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலவில்லை எனவும் வம்சாவளி குறிப்பு கூறுகிறது. 



தமிழக முன்னாள் அமைச்சர் 
கள்ளர் மரபை சேர்ந்த வெள்ளுர் தா. வீரசாமி அதிகைமான்


வெள்ளுர் டி.வீரசாமி அதிகைமான் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1980 தேர்தலில் ஓரத்தநாடு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) வேட்பாளராகவும், 1984 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராகவும் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்தார். இவரது தந்தை எம்.தண்டவமூர்த்தி அதிகைமான் வேள்ளூர் நாட்டின் நாட்டாமையாவார். 

அவரது இரண்டு மூத்த சகோதரர்கள் மறைந்த டி. முத்துசாமி அதியமான் மற்றும் டி. ராமசாமி அதியமான் ஆகியோர் வெள்ளூர் கிராமத்தின் பஞ்சாயத்தர்களாக இருந்தனர். 

18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
மன்னார்குடி கள்ளர் மரபை சேர்ந்த 
மா. செல்லையா அதிகைமான்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி  வட்டம் தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள சந்திர மாரியம்மன் கோயிலுக்கு கி.பி.18 ஆம் நூற்றாண்டில் அதிகமார் நந்தியர் , தஞ்சிராயர் , சேண்டபிரியர் , வன்னியர் ஆகிய கள்ளர் குல பெருமக்களால் கோயில் அர்த்த மண்டபத்துக்கும்,கோயில் மடத்துக்கும் சேர்த்து மொத்தம் 11 தூண்கள் கட்டிதரப்பட்டுள்ளது .





ஆதாரம்: தமிழகத் தொல்லியல் கழகம் வெளியிட்ட ஆவணம் இதழ் - 26 (2015) புத்தகம் பக்கம் எண் 219,220


வேங்கூர் சுப்பிரமணிய அதியமான்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தைப்பார் கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீமருந்தீஸர், ஸ்ரீமத்தியார்சுனேஸ்வரர், ஸ்ரீகூத்தபெருமான் கோவில் நந்தி பலிபீடம், கள்ளர் மரபை சேர்ந்த வேங்கூர் சுப்பிரமணிய அதியமான் பாரியைகள் மூலம் புதுப்பிக்கப்பட்டது.




கள்ளர்களின் அதியமான் மரபினர் திருச்சி கூத்தாப்பல் நாடு தலைமை கிராமம்: கூத்தைப்பாரின் முதல்கரை அதியமார் மரபினர் ஆவார்.


திருக்குடவாயில் (குடவாசல்) கோயில் தலவரலாறு என்ற நூலில் குறிப்பிடப்படும் அறங்காவலராக கள்ளர் மரபை சேர்ந்த சண்முகவேல் அதியமான்



தஞ்சாவூர் காசவளநாடு புதூர் அதியமான் பட்டமுடைய கள்ளர் அதிகம் வாழும் ஊரில் ஒன்று.






திருவாதவூர் கள்ளர் நாடு

மதுரை கிழக்கு மண்டலம் கள்ளர் நாடுகளில் ஒன்றான திருவாதவூர் கள்ளர் நாடு, திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடையப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களையுடையது.

திருவாதவூரில்‌ இருந்த சைவ மடம்‌ ஒன்றிற்கு அளித்த தானம்‌ குறித்து இக்கல்டெடு கூறுகிறது. அம்பலத்தாடி நல்லூரும்‌, சிற்பாச்சாரியன்‌ உய்யவந்தான்‌ பெயரும்‌ குறிப்பிடப்படுகின்றன. இம்மடத்தின்‌ தலைவரான முதலியார்‌ பராக்கிரமதேவர்க்கு அதிகைமான்‌ தேவன்‌ செய்த தானத்தைக்‌ குறிப்பதாகத்‌ தெரிகிறது. கல்வெட்டு மிகவும்‌ பொறிந்து எழுத்துக்கள்‌ தெளிவில்லாமல்‌ உள்ளன



சிவகங்கை தென்னிலை கள்ளர் நாடு மற்றும் உஞ்சனை கள்ளர் நாடு கல்வெட்டு - அதியமான்

தென்னிலைநாடு ( கிபி 1684):- " புதுக்கோட்டை செப்பேடு" அம்மாவாசை புண்ணிய நாளில் தென்னிலை நாட்டில் வளுவாபுரி விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னிலை நாட்டில் புதுக்கோட்டை, கள்ளிக்குடி, எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களை கொடையாக அளித்ததை கூறுகிறது. தென்னிலை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக, சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர் நாடுகள், ஏழுகிளை கள்ளர் நாடுகள் என அழைக்கப்படுகிறது. கள்ளிக்குடி சிவன் கோவில் கல்வெட்டில்  அதிகைமான், பல்லவதரயர், சேதிராயர், செழியத்ததரயர், தேவர் போன்ற பட்டமுடைய கள்ளர் மரபினர்களும் குறிப்பிடப்படுகின்றனர். 











வெண்ணவாசல் 
ரா. சதா அதியமார் 
நினைவு மணிமண்டபம்





அதியமான் நிரை கவர்தலில் ஈடுபட்டதை அகம்373-வது பாடல் மூலம் அறியமுடிகிறது. ( மாடுகளை கொள்ளையிடல் / திருடல் என்று இதனை கருதமுடியாது, இது போரில் ஒரு வகை) 


இலக்கியத்தில் அதியமான்கள் 

அதிகர்,அதியன், அதிகன், அதியமான், அதியர்கோமான், அதிகமான், நெடுமான்அஞ்சி, அதியர்கோமான் அஞ்சி, நெடுமான், பல்வேல் அஞ்சி என பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர். புறநானூற்றில் அதியமான்கள் குறித்து( 87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,101,102,103,104,106,206,208,231,232,236,315,390) பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்பெற்றது இம்மரபே.

அதியமான் நெடுமிடல்

அதியமான் நெடுமிடல் என்பவன் அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் சேனைத்தலைவனாக இருந்தவன். பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.

அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவர் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவரது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவரைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் என்றும் அவரது கொடையின் திறம் பேசப்படுகிறது.

மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது.

அதியமான் பொகுட்டெழினி

அதியமான் பொகுட்டெழினி என்பவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.



அசோகர் கல்வெட்டில் அதியமான்கள்

கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து சங்ககால அதியர்கள் ஆட்சி செய்தனர் என்று அறிய முடிகிறது.  கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் காலத்தில் அசோகரால் வெட்டப்பட்ட இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டில், மூவேந்தர்களுடன் அதியர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், குறைந்தபட்சம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயே, அதியர்கள் ஆட்சி செய்துள்ளனர். பிந்தைய காலத்திலிருந்து பிற்கால சோழர் காலம் வரை ஐந்து அதியர் மரபு அரசர்கள் பல்வேறு இலக்கியம் மற்றும் தொல்லியல் சான்றுகள் மூலம் அறியப்படுகிறார்கள்.


அசோகர் கிர்நார் கல்வெட்டு

ஐம்பை (கி. பி - 1) ஸதியபதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்தபளி

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராய் கருதப்படும் அசோகர் தனது, சபாஸ், கால்சி, கிர்னார், ஜௌகதா ஆகிய் இடங்களில் வெட்டிய கல்வெட்டுகளில் தனது எல்லைக்கு அப்பாற்பட்ட அரசுகளாய், சோடா(சோழ), பாண்டிய, சதியபுதோ, கேதலபுதோ(சேரர்) என தென்புலத்து அரசமரபுகளை கூறுகிறார். இதில் வரும் சத்தியபுத்திரர்(சதியபுதோ) யார் என நீண்டகாலமாய் விவாதத்திற்குள் இருந்தது. 

கோசர் என்றும் கொச்சிக்கு மேல்உள்ள நிலப்பரப்பு என்றும் சத்தியவரதஷேத்ரம்(காஞ்சிபுரம்) என்ற கருத்தும் இருந்தது. அதன்பின் ஜம்பையில் கண்டறியப்பட்ட "ஸதியபுதொ அதியமான் நெடுமான் அஞ்சி" எனும் கல்வெட்டு மேற்கண்ட ஐயங்களை நீக்கி, சத்தியபுத்திரர் அதியமான்களே என்று உறுதிபட சான்றளித்தது.

திருக்கோவிலூரில் நடந்த போர் ஒன்றில், தன் நண்பனான ஓரியை கொன்ற மலையமான் திருமுடிக்காரியை அதியமான் வென்றதாய் சங்க பாடல் கூறுகிறது. அப்போரில் அவன் வென்றதால் மலையமான் ஆண்ட திருக்கோவிலூரும் அவன் வசமாகியது. எனவே திருக்கோவிலூர் மாவட்டமான ஜம்பையில் அதியரது கல்வெட்டு வெட்டப்பட்டது. 



கி.பி.5 முதல் 8 வரை  அதியமான்கள் 

பல்லவன் சிம்மவிஷ்ணு கால தர்மபுரி நடுகல் ஒன்றில்

"புறமலைநாட்டு மொக்கப்பாடியான்
தொறு கொள காப்புறை ஆளும்
மைந்தன் குமாரச்சதியாரு
பட்டார் கல்"

என வருகிறது. இதில்வரும் குமாரச்சதியாரை, அதியர் என அறிஞர் கருதுகின்றனர். அதன்பின் தர்மபுரி மகேந்திரவர்மனின் நடுகல் கல்வெட்டு ஒன்று, (கி.பி.604)

"கடிகாவில் அஞ்சினாரு மக்கள்"

என பயின்று வருகிறது. இதில் வரும் "அஞ்சினாரு" என்பதனை அதியமானான் மரபில் வந்த ஓர் வீரனாக கருதப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஒட்டபாடியில் கிடைத்த கங்கமன்னன் ஸ்ரீபுருஷனின் நடுகல் கல்வெட்டில்(கி.பி 782) 

"தெழினியாரின் சேவகன் எருமைய நக்கனார் எருவாயிலை எறிந்து பட்டான்" என வருகிறது. இதில் வரும் "தெழினியார்" என்பது எழினியின் வழியினராய் கருதப்படுகிறது! 


அதே காலகட்டத்தில் அதியமான்களால், "அதியேந்திர விஷ்ணு க்ருஹம்" எனும் குடைவரைக்கோவில் அதியர்களால் நாமக்கல்லில் கட்டப்படுகிறது. இக்குடைவரை வளாகத்தில் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி பாடல் கல்வெட்டுகளும், ஒன்பது விருதுப்பெயர்களும் காணப்படுகிறது.

இக்கல்வெட்டு வாயிலாய் இக்குடைவரையின் பெயர் "அதியேந்த்ர விஷ்ணு க்ருஹம்" என்பதும், இதனை உருவாக்கியவர் அதியர் மரபைச் சேர்ந்த "குணசீலர்" என்பதும் தெரிய முடிகிறது, 

விருதுப் பெயர்கள்:

1.உத்பலகர்ணிகன்
2.நரவாகனன்
3.நரதேவன்
4.மதனவிலாசன்
5.பிரகிருதிபிரியன்
6.உதாரசித்தன்
7.மானசாரன்
8.நயபரன்
9.விமலசரிதன்








பிற்காலத்திய வடமொழி தாக்கம் காரணமாய் இவ்விருதுபெயர்களை வடமொழியில் "அதியன் குணசீலன்" ஏற்றிருப்பதை அறியலாம். இதில் அதியமான் சந்திரகுலத்தைச் சேர்ந்தஅதிராஜன் ஒருவரின் மகள்வயிற்றுப் பேரன் என தன்னை அழைத்துக்கொள்கிறான். இக்குடைவரை கி.பி 8 ம் நூற்றாண்டாய் கணிக்கப்பட்டுள்ளது. சீவரமங்கல செப்பேட்டில் முதலாம் வரகுணன் அதியமானை வென்று மதுரைச் சிறையில் அதிகமானை சிறையில் அடைத்ததாய் கூறுகிறான். இதன் பின் அதியர் மரபு சோழர்களின் பெருவளர்ச்சி காரணமாய் அப்பெரும் பேரரசில் கலந்தது. ஆயினும் ஆங்காங்கே சில அதியர்கள் தம் இருப்பை கல்வெட்டில் வெட்டியுள்ளனர். சோழப்பெருவேந்தன் காலத்தில் கங்கநாடு சோழரின் கீழ் வருகையில், குவளாபுரம்(கோலார்) பகுதியையும், அருகேயுள்ள தகடூர் பகுதியையும் இணைத்து "நிகரிழி சோழமண்டலம்" என ஒரே வளநாடாக்கினார். அதன்பின் முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே ஒரு அதியமான் தென்படுகிறார். ராஜராஜன் காலசோழப்பேரசில் பல வேளிர் மரபினர் தனியே ஆதிக்கம் செலுத்தாது, தானைத்தலைவர், தளபதி நிலையிலேயே காணப்படுகின்றனர். ஒட்டக்கூத்தரின் விக்ரமசோழன் உலாவில், கூறப்பட்ட கலிங்கத்துப்பரணியில், கலிங்கப்போரில் அதியமான் ஒருவன் கலந்துகொண்டதை பற்றி கூறுகிறது.

"ஒட்டிய மானஅரசர் இரிய வடகலிங்கத்
தானை துணித்த அதிகனும்"

என்ற வரிகளில் இதனை காணலாம். மேலும் குலோத்துங்கனின் ஸ்ரீரங்கம் கல்வெட்டில், "பொன்பற்றிஉடையானான அரையன் சேனன் ஆன இராஜேந்திரசோழ அதியமான்" இதில் வரும் பொன்பற்றி எனும் ஊர் திருவீழிமிழலையாகும். தகடூரை பூர்விகமாய் கொண்ட அதியரில் ஒருபிரிவினர் மெல்ல இடம்பெயர்ந்து சோழமண்டலத்தில் வந்ததை இதன்மூலம் அறியலாம். இராஜராஜ அதியமான், எனும் ஒருவர் 12 ம் நூற்றாண்டில் வருகிறார்.


இராசராச அதியமான்

இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட அரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன.

 விடுகாதழகிய பெருமாள் என்பவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். 

இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. 

வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும் சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.

விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.

திருமலை அதியமான் கல்வெட்டு



போளூர் அருகேயுள்ள திருமலை சமணக் கோவிலில் காணப்படும் 12-13 ம் நூற்றாண்டளவிலான கல்வெட்டொன்று சேர வம்சத்தைச் சேர்ந்த அதிகைமான் எழினி என்பான் அக்கோவிலில் இயக்கர்களையும் இயக்கிகளையும் எழுந்தருளிவித்தது எறிமணி எனும் இசைக்கருவியை வழங்கியது மற்றும் ஏரியொன்றிற்கு கால்வாய் வெட்டிக்கொடுத்ததையும் குறிப்பிடுகிறது. தமிழ் மற்றும் வடமொழிகளில் காணப்படும் இக்கல்வெட்டு தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பாடல் பகுதி அரசனின் பெயரை விடுகாதழகிய பெருமாள் என்றும் வடமொழிப்பகுதி வ்யாமுக்த ஶ்ரவணொஜ்வலேந் என்றும் குறிப்பிடுகிறது. தகவல் : வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam - VVS

கல்வெட்டு

ஸ்வஸ்தி ஶ்ரீ சேரவதிஶத்து அதிகைமானி எழினி செய்த தர்ம்ம

யக்ஷரையும் யக்ஷியரையும் எழுந்தருளுவித்து எறிமணியும் இ

ட்டுக் கடப்பேரிக்காலுங் கண்டு குடுத்தான் ஶ்ரீமதுகேரள பூப்ர

தா யவநிகாநாம்நா ஸூதர்ம்மாத்மநா துண்டீராஹ்வய மண்டலார்ஹஸூ

கிரௌ யக்ஷிஸ்வரௌ சல்பிதௌ பஸ்வாத்தது குல பூஷணாதிக

ந்ருப ஶ்ரீ ராஜராஜாத்மஜவ்யா முக்தஶ்ரவணொஜ்பலேந தகடாநாதெந் ஜீர்ணோ

ச்சதௌ வஞ்சியர் குலபதி யெழுனி வகுத்த வியக்கரியக்கியரொ

டஞ்சியவழிவு திருத்தி வெண்குணவிறை திருமலை வைத்தான் அ

ஞ்சிதன் வழிவரும் வன்முதலிகலி அதிகனவன் ... நூல்

ஸ்தல புனை தகமையன் காவலன் விடுகாதழகிய பெருமாளேய்

Ref : தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி



விடுகாதழகிய பெருமாள்:


"ராஜராஜ அதிகமான்", "பிறந்த பெருமாள்", "ஆண்டார் அதிகமானார்" என கல்வெட்டில் மரியாதையாய் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இடம்பெறுகிறார். மேலும் அதிகேசன், அதிகேந்திரன், தகடையர்காவலன், தகடையர்மன்னன் என வெகுவாய் புகழப்பட்டு தனியாய் கல்வெட்டு வெட்டும் வண்ணம் ஆளுமையில் இருந்தவரே "விடுகாதழகிய பெருமாள்" இவர் திருமலை கல்வெட்டில்,

"சேரவம்சத்து அதிகைமான் எழினி"
"வஞ்சியர் குலபதி எழினி

என சேரர்குடியின் கிளையாய் அதிகமானை கூறுகிறார். இவரது சித்தூர் கல்வெட்டில், "சேரவம்சத்து அரசர் விடுகாதழகிய பெருமாள்" என குறிப்பிட்டு அங்கே விற்சின்னத்தினையும் பொறித்துள்ளார்.

இவர் தன்னை பாலி, பொன்னி, பெண்ணை ஆற்றுக்கு தலைவன் என கூறிக்கொள்கிறார். எனவே இம்மூன்று ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதியை இவர் ஆண்டிருக்க வேண்டும். தனக்கு பகைவராய் காடவர், கங்கர், மகதர், ஆகியோரைச் சுட்டுகிறார். இவர் பெயரில் "விடுகாதழீச்வரம்" எனும் கோவில் வாணியம்பாடியில் உள்ளது. சோழர் வலுகுன்றிய காலத்தில் சாமந்தர்களாய் விளங்கிய குறுநில அரசர்களான சம்புவரையர், அதியமான், வானகோவரையர் முதலியோர் கூட்டணி அமைக்க, இத்தகவலை அறிந்த சோழனின் உறவினரான ஹொய்சாளர்கள் தர்மபுரியில் அதிகமானை தாக்கி கொன்றனர். அதன்பின் அதிகமானின் வம்சம் மன்னராகும் தகுதி தடுக்கப்பட்டது.

1278,79 ல் வல்லம் சோழீஸ்வரர் கோவிலில் அதிகாரி ஒருவரின் பெயர் அதிகமான் என வருகிறது! இறுதியாக "திருவாசல் முதலி" எனும் குறுகிய பதவியில் குலசேர பாண்டியனின் கல்வெட்டில் ஒருவர் வருகிறார். 

இன்றும் மதுரை, காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகமான்கள் எனும் பட்டப்பெயர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அதியமான் பெருவழி 

அதியமான் பெருவழி நாவற் தாவளத்திற்குக் காதம்-29
என்று எழுதப்பட்டுள்ளது. காதம்-29 என்ற எண்னுக்கு அருகில் இரண்டு பெரிய துவாரமும் ஓன்பது சிறிய துவாரமும் குழிகளாக செதுக்கப்பட்டுள்ளன. பெரிய துவாரமும் ஒவ்வோன்றும் பத்துகாதமாகும் மீதி ஓன்பது சிறிய துவாரமும் ஒவ்வோன்றும் ஓரு பத்துகாதமாகும் . நாவற் தாவளம் என்ற ஊர் எங்கு இருந்தது என்பது இதுவரை கண்டுபிடிக்க வில்லை.இதன் காலம் 13 ஆம் நூறாண்டாக இருக்கும் கருதப்படுகிறது. இது இராசராச அதியமானின் காலத்தை சார்ந்தாக இருக்கவேண்டும்.



அதியமான் பெருவழிக் கல்


திருப்பத்தூர் - தருமபுரி நெடுஞ்சாலையில் கொண்டப்பநாயக்கன்பட்டியில், அதியமான் வழி வந்த அரசர்கள் அதியமான் பெருவழிக் கல்லை அந்தகாலத்தில் அமைந்துள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 4 வரிகள் கொண்ட வாசகம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இப்பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 21’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

காதம் 21 என்பது எண்ணால் எழுதிப் பின்னர் 2 பெரிய வட்டக்குழிகளிட்டு பக்கத்தில் ஒரு சிறிய வட்டக்குழியையும் இட்டுள்ளனர். பெரிய வட்டக்குழிகள் ஒவ்வொன்றும் பத்தையும் சிறிய வட்டக்குழி ஒன்றையும் குறிப்பதாகும். இப்பெருவழிக்கல் உள்ள இடத்தில் இருந்து ‘நாவற் தாவளம்’ என்ற இடம் 21 காதம் தொலைவில் உள்ளது என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

பெருவழிகளில் செல்லும் வணிகர்கள், பயணிகள் இரவு நேரங்களில் தங்கவும், உடல் சோர்வை போக்கவும் அமைந்த இடம் தான் தாவளம் என்பது ஆகும். பண்டைத் தமிழகத்தில் நாவற்தாவளம், வேம்படித்தாவளம், மஞ்சப்புளி தாவளம், பட்டழையத் தாவளம், கடிகைத்தாவளம் ஆகிய தாவளங்கள் இருந்துள்ளன. இந்த தாவளங்களில் ‘நாவற்தாவளம்’ என்பது தாவளம் அதியமான்களின் ஆட்சியல் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற் தாவளத்துக்கு காதம் 21’ என குறிப்பிட்டுள்ளன. இக்கல்லானது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.




புகழ்பெற்ற அதியாமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்! எங்கு உள்ளது என்று தெரியவில்லை அணல் இக்காலகட்டத்தைச் சேர்ந்த புலிமான்கோம்பை நடுகற்கள் கிடைத்துள்ளது.


கள்ளர் குடியை சேர்ந்த அதியமான் மரபினரால் நடத்தப்படும் அதியமான் பதிப்பகம் 

தகடூர் (எ) தருமபுரி பகுதியில் கள்ள சோழன் நடுகல்

மலைக்குன்றுகள் சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, வத்தல்மலை, சித்தேரி மலை போன்றவை இங்கு குறிப்பிடத்தக்க மலைகள். இந்த பகுதியில் 15  ஆம் நூற்றாண்டு வரை கள்ளர்நாடுகள் இருந்ததை நாம் அறிந்ததே.

SM ராஜபிரபு அதியமார்


முருகையன் அதியமார்

பட்டுக்கோட்டை Ex. MC மாஸ்கோ அதியமான்


காசவளநாடு 
Rd. BDO பாலசுப்பிரமணியம் அதியமான்

காட்டூர் ஒன்றிய கவுன்சிலர்
கலியபெருமாள் அதியமான்




கள்ளர் மரபை சேர்ந்த முனைவர் இராம முல்லைவனநாதன் அதியமான் 




கள்ளர் நாடு காசநாடு  புத்தூர் வாழும் அதியமான் மரபினர்  நடத்தும் கபடி போட்டி 


சிங்கவள கள்ளர் நாடு வாழும் அதியமான் மரபினர் 



நன்றி.திரு . பார்த்தி பண்ணையார்