வியாழன், 19 செப்டம்பர், 2019

மக்கள் செல்வர் டி. டி. வி. தினகரன் முனையதிரியர்


                             
                                ஆதார நூல்: ஆய்வு கோவை - பக்கம் 482  -நூல் ஆண்டு 1977

மக்கள் செல்வர் டி. டி. வி. தினகரன் முனையதிரியர் அவர்கள்  தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார். இவர் வி. கே. சசிகலா சாளுவரின் மறைந்த அக்காளான வனிதாமணி சாளுவரின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார். இவரது தம்பி வி. என். சுதாகரன் முனையதிரியர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆவார்.

டி. டி. வி. தினகரன் முனையதிரியர் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய, சிங்கப்பூர் நாட்டின் குடிமகனும் ஆவார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முனையரையர் - அனுராதா தினகரன் ஆகியோரின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையார் - ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.







ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா சாளுவர், டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் முனையதிரியர் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார். 

23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது . 21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.

பாண்டியர் வழி மன்னர் பூஞ்சோலை தம்பிரான் கட்டிய கோயில் "கூடல் அழகிய பெருமாள் கோயில்" ஆகும்.இந்த கோயிலை 2004-ல் மறு சீரமைப்பு செய்தார்கள். இதற்கு TTV.தினகரன் 4லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து உள்ளார்.