வியாழன், 26 செப்டம்பர், 2019

மூவரையர் / மூவரையன்




மூவரையர் ஆட்சிப்பணியில் அருந்தொண்டு செய்த துடன் மூன்று அரசாகவும் விளங்கியதினலே இவர்கள் ' மூவரையர் '' என்றும் அழைக்கப் பெற்றனர். சேனைப் பெருமாளான குலோத்துங்க சோழ மூவரையர் என்பவர் குறிக்கப்படுகிறார். சோழராட்சியில் சிறந்த படைத்தலைவராக இருந்தவ ரென்பதை அவருக்குரிய சிறப்புப் பெயரால் நன்கறியலாம். இன்றும் மூவரையர் மரபினர் கள்ளர் குடியில் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் வைணவ மரபை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

சோழமண்டல பகுதிகளில் தஞ்சை ஒரத்தூர், திருக்காட்டுப்பள்ளி, அணைக்காடு, சித்தாயல், அம்மாபேட்டை, பட்டுக்கோட்டை பகுதியில் மூவரையர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்.

ஒரத்தூர் மூவரையர் வாழும் பகுதியில் மூவரைய வயக்கல் என்று தனியாக உள்ளது. மூவரையர் கோட்டை என்ற பகுதியே என்று மூவர் கோட்டை என்று தஞ்சையில் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் மூவர் கோட்டை பகுதியில் முதலியார் பட்டம் உடைய கள்ளர்கள் தான் முதன்மையாக உள்ளனர்.

கள்ளர் மரபில் பிறந்த வேதரண்ய உப்பு சத்தியாகிரக நாயகன் நடராஜன் மூவரையர்.


சோழவளநாடு தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருநியமம் மற்றும் இராசகிரி என்று வழக்கில் கூறப்படும் இளங்காடு சோழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர். இளங்காட்டில் இராஜ இராஜ சோழனின் காந்தளூர்சாலை கலமறுத்த முதற்போரின் வெற்றிக்கு அடையாளமாக அவன்கட்டிய விஜய விடங்கேஸ்வரர் கோவில் இன்றளவும் உள்ளது.

இக்கோவிலில் சேதிராயர், மேற்கொண்டார், மூவரையர், வில்வராயர், கொல்லத்திரையர், நாட்டார்,பாப்புரெட்டியார் பட்டந்தாங்கிய கள்ளர் இனக்குழுக்களுக்கு மட்டுமே இன்றளவும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.

முத்தரையர், முனையதரையர்,செழியதரையர், பல்லவதரையர் என்றார் போலப் பல பட்டப்பெயர்கள் தரையர் என்னம் பெயருடன் சேர்ந்து கள்ளர்களுக்கு வழங்குகினறனவென்றும், ‘இரவலவா……திருவேங்கட நாதா’ ‘தேன்பிறந்த…….பிறந்தான் முன்’ என்னும் பட்டுக்களாற் குறிக்கப்படும் திருவேங்கடநாதர் என்னும் வள்ளல் கள்ளர் குலத்தில் செழியதரையர் என்னும் பட்டமுடையவரென்றும், பாண்டி நாடு பஞ்சமுற்ற பொழுது சங்கப்புலவர்களை வரவழைத்து ஆதரித்தவனும், சோழ நாட்டவனும் ஆகிய ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் உபகாரியும் இக்குலத்தவனே யென்றும், இக் குலத்தவைரைக் குறித்து மூவரையர் வண்ணம் என்பதொரு பிரபந்தம் உண்டென்றும், இக்குலத்தவரில் பல சிறந்த தமிழ்ப்புலவர்களுண்டென மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிக் கூறுவதுண் டென்றும் மகாமகோபாத்தியர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் இளங்காடு நற்றமிழ்ச்சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் தலைமை வகித்த பொழுது கூறியுள்ளார்கள் என்று ஐயா வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்' நூலில் குறிப்பிடுகிறார்.

பாளையவனம் நாட்டின் கள்ளர் குல சிற்றசர்கள் "வணங்காமுடி பண்டாரத்தார்கள்" ஆதரித்த  மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய மூவரையன் விறலி விடு தூது, கள்ளர் குல சிற்றசர் வள்ளல் திருவேங்கடநாதன் மூவரையன் புகழை பாடுகிறது.






அமரர் திரு. M.M. சந்திரகாசன் காங்கேயர் . இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்களில் ஒருவராக திரு கோதண்டபாணி மூவரையர் அவர்களை தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.




டாக்டர் வரதராஜா மூவரையர்

டாக்டர் வரதராஜா மூவரையர் அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு முக்குலத்தோர் சங்கத்தின் (KVMA) கொடியை தென்கிழக்காசியாவிலேயே மிக உயரமான சபா, கினபாலு சிகரத்தில் வெற்றிகரமாக நாட்டியுள்ளார்.

ஒரத்தூர் தேசிகன் மூவரையர்
















இளங்காடு பகுதியில் வாழும் மூவரையர்கள்


அணைக்காடுபகுதியில் வாழும் மூவரையர்கள்

அணைக்காடு கள்ளர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பும் தங்கள் குல பட்டங்களை தாங்கியே நிற்கிறார்கள்.


திருக்காட்டுப்பள்ளி சகோதரர்  பெரியண்ணன் மூவரையர்
(மாவட்ட செயலாளர் மூ.மூ.க தஞ்சை)

புலியை கொன்று மக்களை காத்த திருமலை மூவரைய தேவன்

திருமலை நாயக்கர் 1654 ல் ஸ்ரீவில்லிபுத்தூருக்­கு செல்லும் வழியில் வெள்ளிக்குறிச்சி எனுமிடத்தில் ஒரு பெண் தன் குழந்தையுடன், ஓலமிட்டு வந்தாள். அவளது கணவனை புலி ஒன்று கொன்று விட்டதாக நாயக்கரிடம் கூறினாள். இதையடுத்து அப்பகுதியை ஆண்ட பாளையகாரனான சீரங்கநாயக்கனுக்கு புலியை கொன்று மக்களை காக்க ஆணையிட்டான்.சீரங்க நாயக்கன், " வெற்றிலை பாக்கு வாங்கி புலியை கொல்ல தயாரானவர்கள் அணுகலாம் என அறிவிப்பு செய்தார்.

சிவகங்கை கள்ளர் நாட்டு வீரனான மூவரையத்தேவன் தன் உறவினர் ஆறு பேரின் துணையுடன் புலியை அடக்க முன்வந்தான். போராடி புலியை கொன்று மக்களின் நிம்மதியை மீட்டுத் தந்தார்.

திருமலை மன்னரால் மூவராயதேவருக்கு " திருமலை மூவராயதேவன் என பட்டம் கட்டப்பட்டது!

இவரது உறவினர் ஆறு பேருக்கு " சின்னத்தேவர்" எனும் பட்டமும் கட்டப்பட்டன.

வத்திராயிருப்பை ஒட்டிய கிராமத்தை மூவரையத்தேவனுக்கு பரிசாக அளித்து நாட்டாண்மை பட்டம் கட்டி செப்பு பட்டயம் அளித்தார்..

( இலந்தைக்குளம் செப்பேடு - திருமலை நாயக்கரால், வழங்கப்பட்ட இந்த செப்பேடு, விருதுநகரில் தற்போது வசிக்கும் திரு அண்ணாமலைத்தேவர் என்பவரிடம் இருந்து பெறப்பட்டு படியெடுக்கப்பட்டது.)


பெண்சாதி பிள்ளைகளும் தலைவிரிகோலமாக அளுது அபையம் போட்டுப் போரது ராசா காதிலே அபையக்குரல் கேட்டு திடுக்க முளித்து நாமும் வந்திருக்க இந்த அநியாய்யம் வேறேயின்னம் உண்டோவென்று கோவாக்கினி தலை மண்டை கொண்டு வெள்ளிக்குறிச்சி சீமை கற்த்தராகிய சீரங்கனாக்கரை வரவழைத்து அளுகுரதென்ன வென்று கேள்க்கும் படிக்கு உத்தறவு அவற் பதறி அளுகையமத்தி றாசா உத்தாரமாகுது என்று கேள்க்க..

சீரங்கநாயக்கன் ஆணையின் பேரில் எழுந்தருளினாற் ரதகெசதுரக பதாதி சேனையும் குவலையப்பாரை பருவதத்தை துப்பாக்கி மனைமளைமாரி பொளிந்து வரும்போது...




திருமலை நாயக்கர் செப்பேடுகள்- தமிழக தொல்லியல் துறை)


ஐயா திரு. செயராம் ராசகண்டியர் தன் ஆய்வில் மூவரையன், மூரியன், மூங்கிலியன், மும்முடியான். மூவச்சோழன் மூவரையன் கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியகக் கொண்டவன். சேரர், பாண்டியர்களோடு பெரும்போர் செய்து அவர்களுடைய முடிகளை பறித்து தன்முடிமேல் ஒன்றின் மேலொன்றாகச் சூட்டிக்கொண்டு அவர்கள் தலையில் விளக்குகள் வைத்தவன்.இவன் பெயர் மூவரையன் மும்முடியன் எனவும் வழங்கும். மூவலூர் என்னும் தேவாரம் பாடப்பெற்ற சிவ தலத்தையும், மூவனூர் என்ற ஊரையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் மூவரையன், மூரியன், மூங்கிலியன், மும்முடியான் என்ற பட்டங்களை கொண்டனர் என்கிறார்.

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்