முத்துப்பேட்டை பாலாவாய் கிராமத்தில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர். இவர் சுதந்திர போராட்ட அணிவகுப்பின் போது கையில் இந்திய தேசியக் கொடியினை ஏந்தி பல போராட்டத்தில் கலந்துகொண்டார். சென்னையில் காந்தியை சந்தித்ததை இன்றும் பெருமையாக நினைக்கிறார். முத்துப்பேட்டையில் நடந்த சுதந்திர போராட்ட அணிவகுப்பின் போது கைது செய்யப்பட்டு, ஒரத்தநாடு சிறையில் வைத்து இரண்டு வாரங்களுக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டார். அன்று பல துன்பங்கள் அனுபவித்திருந்தால், இன்று அதனை பெருமையாக உணர்வதாக கூறுகிறார். தற்போது 90 வயதாகும் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர் அவர்களின் மனைவியின் பெயர் வேதாம்பாள் அம்மையார். இவருக்கு மூன்று மகன்களுக்கும் மூன்று மகள்களும் உள்ளனர்.