திங்கள், 26 ஜூன், 2023

உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்த ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேப்




ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் மன்னர் ( 1789 – 1807) சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் பிப்ரவரி 1ஆம் தேதி வானுலகெய்தினர். அப்போது அவருக்கு வயது 47. இவருடன் இவரது இளைய ராணியான ஆயி அம்மணி ஆயி சாஹேப் (சதி எனும்) உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தார்.

ராணி ஆயி அம்மா ஆயி உடன்கட்டை ஏறி தீயில் பாய்ந்து கணவருடன் மரணத்தில் கலந்தார். அவர் உடன்கட்டை ஏறிய இடம் " மாலையீடு " என அழைக்கப்படுகிறது.


மாலையீட்டில் ஆயி அம்மாவின் நினைவாக , அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்பட்டு அவரது சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.


காலப்போக்கில் கைவிடப்பட்ட கோயிலாக மாறிப்போனது பள்ளிப்படை. அக்கோயிலின் பராமரிப்பன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.


கோயில் கதவுகள் மற்றும் சிலைகளை காணவில்லை. இன்று கேட்பாரற்று கிடக்கும் கற்புக்கரசிக்கான கோயில்.



கோயிலின் உள்ளே ஒரு பெட்டியில் ராணியார் உபயோகித்த உடைகள் ஒரு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்த பெட்டியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உடையின் மிச்சங்கள் காணப்படுகின்றது.

ராணி ஆயி அம்மா அவர்களது நினைவாக எழுப்ப பட்ட கோயிலில் , வழிபாடுகள் நடத்தப்பட்ட ராணியின் ஆடை , அஸ்தி பானை மற்றும் மற்ற உபகரணங்கள் இருந்த பெட்டி உள்ளது.


பராமரிப்பு இன்றி காணப்படும் பெட்டியில் காணப்படும் ராணியின் உடைகளின் மிச்சம்!!


தமிழ் பெண்களின் பெருமையை பறைசாற்றும், கற்புக்கரசிக்கு எழுப்பப்பட்ட கோயில் சிதிலமடைந்த நிலையில் இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது.

புதுக்கோட்டை - திருமயம் வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 4 கிமீ தொலைவில், மாலையீடு எனும் இடத்தில் காணப்படும் இப்பள்ளிப்படை கோயில், ஆயி அம்மன் கோயில் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

அழிந்து வரும் வரலாற்று சின்னம்.

கள ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்