திங்கள், 26 ஜூன், 2023

பிற்கால புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், கள்ளர்களின் அழும்புள்ளார் பட்டமும்





பழையாறையில் எப்படி பிற்கால சோழ ராஜ்யம் உருவானதோ அதைபோல் கள்வர் கோமான் புல்லி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த வேங்கட மலையில் இருந்து, சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாக விளங்கிய, கள்ள மற்றும் மறவ படைபற்றுகளாக இருந்த புதுக்கோட்டையில் (கலசமங்கலம், சிங்கமங்கலம்) உள்ள அம்புக்கோயிலில், கள்ளர்களின் ஒரு பிரிவான தொண்டைமான் மன்னர்கள் குடியமர்ந்து பிற்கால தொண்டைமான் ராஜ்யத்தை உருவாக்கினர்.


அரையனாக இருந்த இவர்கள் அப்பகுதியில் வெற்றிபெற்ற மன்னர்களுக்கு போர் உதவி செய்தும், யானை படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் சிறந்தும் விளங்கினர். தங்களுக்கான சூழ்நிலை நோக்கி காத்திருந்து, பிற்கால தொண்டைமான் ராஜ்யத்தை உருவாக்கினார்கள். 



அம்புக்கோயில்



புதுக்கோட்டை நாட்டிலுள்ள அம்புக் கோயில் என்பது ஆதியில் அழும்பில் என்னும் பெயர் பெற்றிருந்தது. கல்வெட்டுக்களிலும் பழந் தொகை நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ள இவ்வூரில் "மானவிறல் வேள்" என்னும் குறுநில மன்னன் அரசாண்டான் என்று மதுரைக்காஞ்சி கூறும். இவ்வூரில் எழுந்த சிவன் கோயில் அழும்பிற் கோயில் என வழங்கலாயிற்று. அழும்பிற் கோயில் அம்புக் கோயில் என மருவிற்று. நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.






அம்புக்கோவில் சீரி மிகு கட்டிட கலையுடன் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வீர ராஜேந்திர சோழீஸ்வரமுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளதால் வீர ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் கி.பி. 1062- 1069 ல் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இக்கோயிலுக்கு பலர் கொடை அளித்துள்ளனர். ஆணை தொண்டைமான் என்பவரும் , நெடுவாசல் நாட்டை ஆண்ட பாண்டி பெருமாள் மாவலி வானதிரையன் ஆகியோர் கொடை வழங்கியதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

இங்குள்ள சிவனிற்கு பக்தலலிதேஸ்வரர் என்று பெயர். தாயார் தயாபுரநாயகி . மிகவும் பழமையான சிவாலயமாக அமைந்துள்ளது. அருகில் வீரமாகாளி கோயில் உள்ளது. காளி மிகுந்த சக்தியுடன் உக்கிரமாக காட்சி தருகிறாள். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினரால் பக்தலலிதேஸ்வரர் சுவாமியும், வீரமாகாளியும் சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

புதுக்கோட்டையில் ஒவ்வொரு மன்னரும் பதவி ஏற்கும் போது இங்குள்ள கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்த நீரையும் , சுவாமிக்கு சூடிய மாலையும் அணிந்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.


அருள்மிகு ஸ்ரீ தட்டாறப்பூசி கோவில்


மான விறல்வேள் அழும்புள்ளார்


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. அழும்பில் பெரும்பூண் சென்னி என்னும் சோழவேந்தனின் வளமையான ஊர்களில் ஒன்றானது.


பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்றும், அழும்பில்லார் என்றும் பின்னர் மருவி அழும்புள்ளார் என்றும் அழைக்கப்படுகின்றனர். அழும்புள்ளார், மன்னவேள், சென்னிராயர் பட்டங்கள் உடையவ கள்ளர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். அது போல கள்ளர்களின் கவிராயர் பட்டம் இங்குள்ள பழமையான கவிநாடு அரையர்களை குறிக்கும்.



பன்றியூர்


அம்புக்கோயில் ராசராச வளநாடு என்றழைக்கப்பட்டன. “ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. நெடுவாசல் ஜமீன்தார் கள்ளரின் பன்றி(யூர்)கொண்டார் பட்டம் உடையவர்கள், அம்புநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து நெடுவாசல் பகுதியில் ஆட்சி செலுத்தினர்.


தொண்டைநாடு


பல்லவருக்கு அடங்கிய மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலை பகுதி தொண்டமானாடு, காளத்தி, நெல்லூர், திருப்பதி, சித்தூர், பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிஷ்ணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். இவர்கள் ஆட்சி பகுதியில் குப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கு தமிழ் பேசுவோரும் வாழ்கின்றனர். இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. குப்பத்தைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து குப்பம் மண்டலம் உருவாக்கப்பட்டது. தொண்டை பகுதியான செங்கற்பட்டு மும்முடிக் குப்பம் என்று அழைக்கப்டுகிறது. குடவூர் காடு,  வைகுந்த வள காடு, துய்யா நாடு, ஆற்றுர் காடு. இந்த நன்கு நாடுகளும் வேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்தவை. தமிழ் பகுதிகள் என்று சோழர்களின் தமிழ் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குலோத்துங்கன் காலத்தில் (கி. பி. 1178-1218) கன்னூல் செய்த பவணந்தி முனிவர் தமிழக எல்லைகளைக் ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம் - எனுநான் கெல்லையில் இருந்தமிழ்க் கடலுள்"  எனவே, பிற்காலச் சோழர் காலத்திலும் வேங் கடமே தமிழகத்தின் வட எல்லை என்பதைப் புலவர் நன்குணர்ந்திருந்தனர் என்பது தெளிவாதல் காண்க.


இப்குதியில் இருந்து 12 ஆம் நூற்றாண்டில் வந்த  சோழ வழியினரான தொண்டைமான்கள், பல்லவராயர்கள் (வெங்கடாசல பல்லவராயர்) அம்புநாட்டை ஒன்பது குப்பங்களாக பிரித்தனர். 

வடதெரு குப்பம்
தென்தரு
வடக்களூர்
கள்ளக்கோட்டை
கரம்பக்குடி 
நெய்வேலி
அம்மானி
பந்துவக்கோட்டை
வெள்ளாள விடுதிக் குப்பம்


அதில் அம்புநாட்டில் அரையராக இருந்த தொண்டைமான்கள் அம்புநாட்டில் தெற்கு குப்பத்தில் வாழ்ந்துள்ளனர். இக்குப்பத்தில் ராங்கியர், பல்லவரயார், பன்றிகொன்றார் போன்றோருடன் வாழ்ந்து அந்த குப்பத்தினருடன் மட்டுமே மண உறவு கொண்டுள்ளனர். 



புதுக்கோட்டை அம்புக்கோயிலில் கிடைத்த கிபி 1110 ம் ஆண்டை சேர்ந்த ஸ்ரீ வல்லாள பாண்டிய தேவரின் கல்வெட்டில் (IPS 458) ஆனை தொண்டைமானார் என்பவர் அம்பு கோயிலில் வசித்ததையும், அவர் கோயிலுக்கு அளித்த கொடையையும், மேலும் இவருடன் குளந்தையராயர் என்பவரும் குறிக்கப்படுகிறார். இன்றும் அம்பு நாட்டில் குறந்தைராயர் எனும் பட்டம் கொண்ட கள்ளர் குழுவினர் வாழ்கின்றனர். (புதுக்கோட்டை க.வெ 458)



13 ஆம் நூற்றாண்டிற்குரிய அம்புக் கோவில் கல்வெட்டில் (522) அழும்பில் அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இங்கு அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்பு அம்பு நாட்டு கள்ளர் சமூகத்தின ஐந்து உட்குழுக்களின் அரையர்களை குறிப்பதாகும். தொண்டைமான்கள் அம்புநாட்டில் குடியேறியபின் (மேலக்காரர், கண்டியர், பிச்சர், குருக்கள், அம்பட்டர்) ஆகிய அஞ்சு குடிகளை அங்கு குடியமர்த்தி அந்த ஊரின் அரையர்களாக இருந்துள்ளனர்.



அரையர்களாக இருந்த தொண்டைமான்கள்


1) திருமால் தொண்டைமான்

2) நமனா தொண்டைமான்

3) பச்சை தொண்டைமான்

4) தண்டகா தொண்டைமான்

5) நமணா தொண்டைமான்

6) திருமா தொண்டைமான்

7) நமனா தொண்டைமான்

8.) பச்சை தொண்டைமான்

9) நமனா தொண்டைமான்

10) பச்சை தொண்டைமான்

11) கிண்கிணி தொண்டைமான்

12) தண்டகா தொண்டைமான்

13) திருமா தொண்டைமான்

14) பச்சை தொண்டைமான்

15) ஆவுடைராயத் தொண்டைமான்



மன்னர்களாக இருந்த தொண்டைமான்கள்

16) இரகுநாத தொண்டைமான்

17) விஜயரகுநாதராய தொண்டைமான்

18) இராயரகுநாத தொண்டைமான்

19) ராஜா விஜயரகுநாத தொண்டைமான்

20) இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான்

21) இராஜா ரகுநாத தொண்டைமான்

22) ஸ்ரீபிரகதம்பாதாள் இராஜா ராமச்சந்திர தொண்டைமான்

23) ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

24) விஜயரகுநாத துரராஜ தொண்டைமான்

25) ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்



வீரத்திலும், வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்ததாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் படைகளில் செல்வாக்கு பெற்று புகழுடன் விளங்கியதாலும், 17 ஆம் நூற்றாண்டில் இருந்து சேதுபதி மன்னர்களின் ஆதரவுடன் தொண்டைமான் பரம்பரையினர் தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு 250 ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்களாக நீண்ட ஆட்சி செய்தனர். இவர்களே தமிழகத்தின் இறுதி மன்னர்கள்.


புதுக்கோட்டை மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" எனப்பட்டது.



ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்.