செவ்வாய், 11 டிசம்பர், 2018

கள்ளர் “தந்திநாடு” – ஆலம்பாக்கம்


திரு.எஸ்.குமாரசாமி மேல்கொண்டார் செப்புப்பட்டையங்களின்படி தஞ்சைவளநாட்டில் 40 கள்ளர்நாடுகளை குறிப்பிடுகிறார் அதில் ஒன்று தந்திநாடு. இது திருச்சி மாவட்டத்தில், லால்குடி - அரியலுார் சாலையில், புள்ளம்பட்டி அருகே உள்ள ஆலம்பாக்கம் ஆகும்.

தந்திநாடு : 

1) ஆலப்பாக்கம்
2) நத்தமாங்குடி (நத்தம்)
3) தின்னக்குளம்
4) ஆலங்குடி மகாஜனம், 
5) செம்பரை, 
6) திண்ணியம்,
7) அரியூர்,
8) திருமாங்குடி,
9) கல்லிக்குடி


சிவபெருமான் ஆலமரத்தின் கீழ் தெற்கு முகமாக அமர்ந்துள்ளதால் "தென்முகக் கடவுள்' என அழைக்கப்பட்டார். இதை "ஆலமர் செல்வர்' எனக் கலித்தொகை(83) கூறுகிறது. இவ்வூர் சிவன் கோவில் தல விருட்சம் ஆலமரம் சிவனை ஆலமர செல்வர் என கூறுவர். இதனால் இந்த ஊருக்கு ஆலம்பாக்கம் என்று பெயர் வந்ததாக குறிப்பிடுகின்றனர்.


இரண்டாம் நந்திவர்மனின் மகன் தந்திவர்மன் (கி.பி.774-825) ஐம்பது ஆண்டுகள் பல்லவ அரசை ஆட்சி செய்தான். தந்திவர்மனைப் பல்லவர் காலப் பட்டயங்கள் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரம் போன்றவன் என்கின்றன. இவன் ஆலம்பாக்கத்திற்குத் ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றைக் கட்டினான். அக்கோயிலில் இவனுல் பிரதிட்டை செய்யப் பெற்ற சிவலிங்கத்தின் திருவுருவம் தந்திலிங்கம் என இவன் பெயரால் வழங்கப்பெறுகின்றது. கோவிலில் முதலாம் ஆதித்தன் கால கல்வெட்டே இங்கு பழையது.ஆனால் தந்திவர்மன் காலம் முதலே இக்கோவில் இருந்ததற்கு சான்றுண்டு

இந்த ஊரில் மூன்று கோயில்கள் உள்ளன, கைலாசந்தர் கோயில் சிவனுக்கானது, வரதராஜ பெருமாள் கோயில் பெருமாலுக்கானது, மற்றொரு மிகப் பழைய சப்தமாதருக்கென எடுக்கப்பட்ட தனி கோயிலும் இந்த ஊரில் தான் உள்ளது ((ஏழை காத்த (எழு சப்தமாதர்) அம்மன் கோவில், வல்லடிகாரர் கோவில் - மேலூர் கள்ளர் நாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது).

ஆலம்பாக்கம் இன்று திருச்சி மாவட்டத்தில் இருந்தாலும், அக்காலத்தில் தஞ்சை வளநாட்டில் இருந்துள்ளது. 


எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மன் காலத்தில், இங்கே கட்டப்பட்ட கோயில் முதலாம் பராந்தகன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பராந்தக சோழன் கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் அமரேஸ்வரப் பெருமான் என்றும், பல்லவர் காலத்தில் செங்கல் தளியாக எடுப்பிக்கப்பட்ட இக்கோயில் சோழர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிகிறது. முதலாம் இராஜேந்திரசோழன் மற்றும் முதலாம் இராஜாதிராஜ சோழன் ஆகியோருடைய கல்வெட்டுக்கள் மூலம் இவ்வூர் மதுராந்தகம் சதுர்வேதமங்கலம் என மாற்றம்பெற்றுள்ளது என அறியமுடிகிறது.



தந்தி மங்கலநாடு:- கள்ளர்நாடுகளில் ஒன்றான தந்திநாடு

ஸ்வதி ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சதுர்வேதி மங்கலத்து ராஜாதி ராஜ தேவர்க்குறியாண்டு

கள்ளர் நாடுகளில் ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பார்கள். அவர்களுக்கு அம்பலகாரர் என்று சிறப்புப் பெயர் தரப்படும். நாட்டுக் கூட்டங்களில் அந்த அம்பலகாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்பு எவராலும் மீற முடியாத சக்திபெற்றதாக விளங்கிற்று என்பதை நாம் அறிந்ததே.










































தந்திநாட்டில் உள்ள கோவிலில் இன்றும் முதல் மரியாதை பெறும் ஆலம்பாக்கம் கள்ளர் குடியினரின் பட்டையர்கள்;

1) சாய்ன சேமர்
2) முக்குடி சேப்ளார்
3) சேனப்ப சேப்ளயார்
4) காவேரியார்
5) கச்சராயர்
6) காவேரியார்
7) வல்லடியார்
8) அடக்கப்பாச்சியார்
9) வாண்டையார்.


இங்கு உள்ள கோவில்களில் பல நூறு சிலைகள் உள்ளன. அதில் கள்ளர்களின் தனி அடையாளமான நீண்ட காது, வளரி, இடக்கொண்டை போன்றவை காணப்படுகின்றன. இதன் பின் உள்ள வரலாறுகள் விரைவில் பதிவு செய்யப்படும்.










Add caption

இந்த பட்டங்கள் பழமையான தொடர்பை ஆராய்வோமானால்

காவிரியார் - கரிகால் சோழன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன், எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன், காவிரியார் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.

வல்லடியார் - வல்லமை கொண்டு காரியம் முடிப்பவர் (வல்லடிக்காரர்க்கு விளக்கேற்றிக் காட்டுமாபோலே (ஈடு, 9, 5, 3)

சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்) - தஞ்சை மாவட்டத்தில் காவிரி வடகரையில் சேய்ஞலூர் என்னும் ஊரில் தேவார சிவதலத்தை சோழன் உருவாக்கினான், இந்த பகுதியின் மரபு வழி வந்தவர்கள் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்) என்னும் பட்டம் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆறும் இதனுடன் தொடர்புடையதே.

சேப்பிளையார் வகையறா

மன்னர்கள் ஒரு கிராமத்தை அமைக்க துவங்கியபோது, அவ்வூரில் ஏரி, குளம் போன்றவற்றை அமைத்தனர். குளம் மற்றும் ஏரிகள் ஏற்படுத்திய மன்னர்கள் பெயரால், அவை அழைக்கப்பட்டு வந்தன. இவ்வூரில் ந்திவர்மன்  தனது பட்டப் பெயரான ‘மாற்பிடுகு’ என்பதை வைத்து ‘மாற்பிடுகு ஏரி’ ஒன்றை வெட்டுவித்தான்.




கள்ளர்நாடான தந்தி நாட்டிலிருந்து முதன் முதலில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான திரு.M.M.சந்திரகாசன் காங்கேயர் (1922-2004)🙏. இத்திருவுருவ சிலையை நத்தமாங்குடியில் திறந்து வைத்தவர் கல்வி காவலர், பூண்டி சீமான் ஐயா.துளசி ஐயா வாண்டையார்

வரதராஜ பெருமாள் கோயில்










ஆலம்பாக்கம் மையிலிக்கரை பிள்ளையார் கோவில்

கருப்பு சாமி 


கிறிஸ்தவர் கோயில்







கிறிஸ்தவ மதம் மாறிய பிறகும் தங்கள் பட்டங்களை விடாமல் தொடர்ந்து பயன்படுத்தும் திருச்சி தந்திநாட்டு கள்ளர்கள்:








தந்தி நாட்டு கரைமேல் அழகர் அய்யனார் ஆலயத்திற்கு காங்கேயர்கள் அளித்த நன்கொடை.

தந்திநாடு - பட்டையர்களாம் கள்ளர் மரபினரின் வன்னியர்களின் அறப்பணிகள் (நெற்குன்றநாதர் ) ஆலயத்தின் அருகில் உள்ள கருப்பன் ஆலயத்தில்


கள்ளிக்குடியில் சிதைந்த பழங்கால சிவாலயம்






திண்ணக்குளம் (எ) திருநெற்க்குன்றம்

திருநெற்க்குன்றநாதா் கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் மூலம் இவ்வூரின் வரலாற்று சிறப்பை அறியலாம்.

நரசிம்ம பல்லவன் காலம்:-
குன்றுகளை போல் நெற்கதிர்௧ளை விளையும் கழனிகளை கொண்டதால் " நெற்குன்றம்" எனவும் பின்னர் திருஞானசம்பந்தரால் 

"நெற்குன்றம் மோத்தூா் நிறைநீர் மரு௧ நெடுவாயில் குறும்பலா நீடுதரு நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுரா.... "
என பாடல் பெற்று " திருநெற்க்குன்றம் " என்றானது.......

சோழா்௧ள் காலம் :-

செம்பியன் மாதேவி அவா்௧ளால் திருமழபாடி, திருநெற்க்குன்றம் ஒரே நேரத்தில் கற்றளியா௧ கட்டப்பட்டது.. 

ராஜராஜ சோழன் :-
பொய்கை வள நாட்டின் தலைவராக விளங்கிய கிழவன் ஆதித்ய தென்னவன் மூவேந்த வன்னிவேளானிடம்
கோவிலின் சுற்றுச் சுவரும், நந்தா விளக்கும் தனது 25ம் ஆட்சியாண்டில் கொடையாக அளித்துள்ளார்...! 

ராஜேந்திர சோழன் :-
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அடுத்ததாக "மாதொருபாகன் " சிற்பம் உள்ளது...

குலோத்துங்க சோழன்:- தைப்பூச அன்னதான விழாவிற்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது.. 

விக்கிரம சோழன் :- 
இவனுடைய ஆட்சி காலத்தில் நிறைய கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விஜய நகர பேரரசு காலத்திலும் இவ்வூர் சிறப்பாக இருந்துள்ளது...

தற்போது சோழா்களிடம் சிறப்பு விருது பட்டய பெயர்௧ள் பெற்ற கள்ளர் மரபினரின் வன்னியர், சோழங்௧த்தேவ அம்பலக்காரா், சோழங்௧த்தேவா், பல்லவராயா் வசிக்கின்றனர்.

தகவல் : SR ராமசந்திரன்


தின்னைக்குளம் திருநெடுங்குன்றநாதர் ஆலயம்















வரலாற்றை அறிய கீழே  உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here)




ஆய்வு
திரு. பரத் கூழாக்கியார்