வியாழன், 30 மார்ச், 2023

கள்ளர் குடியில் தோன்றிய சோழர்கள் / Cholar Caste


உறையூரில் தொடங்கிய கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆட்சி புதுக்கோட்டையில் மூன்றாம் இராஜேந்திர சோழன் மகன் இராசராச தேவரான பல்லவராயரோடு முடிவடைகிறது. புதுக்கோட்டையில் பல்லவராயர் மரபினரும் தொண்டைமான் மரபினரும் இன்றும் கள்ளர் குடியினராகவே உள்ளனர். 

திருவுசாத்தானக் கல்வெட்டுக்கள்



தொண்டைமான் மன்னர் 


பல்லவராயர்
The Ancient Heroes Of South India Peninsula

The title of “ Chola” is still borne by a section of the Kallars. Thus, if the real name of a member of that clan were Vira, his full name would be Vira chola. Persons of that clan can be found by scores in the Tanjore territory.


சோழர்களின் தஞ்சையில் பிராமணர்கள் தவிர்த்து உயர் குடிகளாகவும் நில உடமையாளர்களாகவும் கள்ளர் மற்றும் வெள்ளாளர் இருக்கின்றனர்.

India's villages - SACHIN CHAUDHURI  - 1955




சோழமண்டலத்தில் சிற்றரசுகளாக இருந்தவர்கள் 
கள்ளர் மரபினரே 

Madras Journal of Literature and Science - 1836



Political History of Carnatic Under the Nawabs
1984 - Carnatic (India)

தமிழ் நில வரலாறு -1976

மூவரசர் குலவிளக்கம் 

சூரியகுலம் கள்ளர்கள்

சோழர்கள் போல கள்ளர்களும் தங்களை சூரியகுலமாக குறிப்பிடுகின்றனர். கள்ளர் சிற்றரசனா பாளையவனம் ஜமீன்கள் தங்களை சூரியகுலமாக குறிப்பிடுகின்றனர். கள்ளர்கள் இந்திரகுலம் மட்டுமே என்று வலிந்து திணிக்கப்படுகிறது, ஆனால் எல்லா கள்ளர்களும் தங்களை இந்திரகுலம் என்று குறிப்பிடவில்லை. ' சூரியகுல கள்ளர் சரித்திரம்'  1926 இல் உபாத்தியாயர், தமிழறிஞர், சைவச் செம்மல், திருக்களர் மு. சுவாமிநாத மாதவராயர் எழுதிய நூலில் இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. 

தஞ்சையின் பாப்பாநாடு குறுநிலமன்னர்   கி.பி. 1736இல் இருந்த ராஜஸ்ரீ ராமலிங்கம் விசயாத்தேவர், தங்களின் செப்பேட்டில்  இந்திரகுலம் என்றோ சூரியகுலம் என்றோ குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தொண்டைமான் மன்னர்களும்,  சில கள்ளர் பிரிவினரும் இந்திரகுலம் என்று குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு கள்ளர் பிரிவுக்கும் தனி தனியான பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உள்ளன.


சூரியகுல பாளையவனம் ஜமீன்

புதுக்கோட்டை வரலாறு நூல், கள்ளர் மரபினர் சூரியகுலம் மற்றும் இந்திரகுலம் குறிப்பிடுகின்றது. அதே நூல் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும், அறந்தாங்கி தொண்டைமானுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிடுவதை மறுத்து, சூரியகுல  அறந்தாங்கி தொண்டமான் வரலாற்று நூலில் இருவரும் ஒரு கால்வழி வந்தவர்களாக குறிப்பிடுகின்றது. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொண்டைமான்கள், ஒட்டுமொத்த கள்ளர்களின் மன்னர்கள் இல்லை என்பதை முதலில் அறியவேண்டும். கள்ளர்களில் பல பிரிவுகள், ஒவ்வொரு பிரிவுக்கும் தனி தனி வரலாறு உண்டு. புதுக்கோட்டை, திருச்சி இடையில் இருந்த, தனித்து தன்னரசாக விளங்கிய விசங்கி நாட்டு கள்ளர்களை கிபி 1700 ல் நமண தொண்டைமான் தலைமையிலான படை  புலியூரில் தாக்கி கருவறுத்தது குறிப்பிட்டத்தக்கது. விசங்கி நாட்டு கள்ளர்கள் தொண்டைமான் மன்னர்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள் இல்லை. அதை போல் தஞ்சை, சிவகங்கை, மதுரை கள்ளர்கள் தங்களது தலைவர்கள் கீழ் இருந்தனர். 

புதுக்கோட்டை வரலாறு நூல் 
கள்ளர் மரபினர் சூரியகுலம் மற்றும் இந்திரகுலம்



அரசுக்காரர் - அரசர்



கள்ளர்கள் சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர் என்பதை ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் கி.பி. 1917-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் ஆய்வு நூலிலும், கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை ஆய்வு நூலிலும் குறிப்பிடுகிறார்கள் .

ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் நூலில்பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால் சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டு.


கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில்



கள்ளர் மரபினரின் பரம்பரை செய்திகளில் புலி மிகவும் முக்கியமானது

சாயும்படைதாங்கி (sayumpadai tangi ) / 
வேங்கை புலி (cruel handed tiger )
வெக்காலி புலி (cruel legged tiger)
சலிப் புலி (Holy Tiger)
செம்புலி (Red Tiger)
சிங்கபுலி







மேலும் சோழர்கள் முதுகுடியான கள்ளர் குடியில் உதித்தவர்கள் என்பதற்கு சான்றாக விளங்குபவை அவர்களின் 

1) குடும்ப பெயர் 
2) குலதெய்வம் 
3) உருவ அமைப்பு
4) நாடு
5) பட்டங்கள் 
6) கல்வெட்டுகள் 
7) படையினர், படைப்பற்று
8) ஆய்வாளர்கள் கருத்து

என்று பல்வேறு வகையில் கள்ளர்களோடு மட்டுமே தொடர்பு உடையவர்களாக சோழர்கள் உள்ளனர். இவற்றிற்கான ஆதாரங்களை நோக்கும்போது

மூவேந்தரும் ஒரே குடிவழியினர் பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும்  பாடல் தெரிவிக்கிறது. 

தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே - (ந.வே.வ.பாயிரம்)

மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் – சொல்லர் - சோலர் - சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது. மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
 கள்ளர் மரபினரை "பண்டையார்" என்றே தமிழ் அகராதி குறிப்பிடுகிறது, அதாவது பழமையான தமிழ் குடியினர் என்கின்றது.


சோழன்:

சோழன் என்ற பெயர் எதனை அடிப்படையாக கொண்டு உருவானது என்று பார்ப்போமேயானால், ‘சோரன்’ என்னும் வடமொழிச்சொல்லின் திரிபாகச் சோழர் என்னும் பெயர் தோன்றி இருக்கலாம் என்று டி. ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார். சோரன் என்பது கள்ளன் எனப் பொருள் தருகிறது. “ஒளிக்கும் சோரனைக்கண்டனம்” உயிருக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்ளனான இறைவனைக்கண்டோம். இதே சோரன் அல்லது சோரம் என்பது தற்காலத்தில் வேறு பொருளாகப்பாவிக்கப்படுவது அறிக. (சோரம்போதல்)











மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் எழுதிய நூலில் நெல்லின்மற்றொரு பெயரான “சொல்” எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத்திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார்.  நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்தநாடு 'சோறநாடு' ஆகிப்பின் சோழ நாடாகியது என்பர்.



நெற்பயிர் சூரியன் ஒளிர்க்கதிர் பட்டு விளைவதால் அதன் தானியத்திற்கு கதிர் என்று பெயர், ஒளிக்கற்றையின் பெயரைப்பெற்றது.   அந்தத்தானியத்தின் உள்ளே இருப்பது சூரியன் என்பதன் திரிபாக சோறு என்று பெயர் பெற்றது.   சூரிய” “சோரிய” “சோர” “சோழ” “சோறு  எனத்திரிந்ததைக் காண்கிறோம்.




கர்னல் ஜெரினி என்பார் வடமொழியில் ‘கருமை’ எனப்பொருள்படும் ‘காள’ என்னும் சொல்லோடும், தொடர்புபடுத்தி இச்சொல்லின் பொருளை விளக்க முயன்றுள்ளார். திராவிடருக்கு முற்பட்ட பழங்குடி மக்கள் கோலர் என்பவராவர். அவர்கள் கரிய நிறம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய ஒரு கிளையினரே ‘சோழ’ராக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும்.



கள்ளர்வெட்டி(மக்கா)ச்சோளம் சோழநாட்டில் தான் சிறப்பாய் விளைகிறது. சோளம்’ மிகுதியாக விளைந்த நாட்டினை ஆண்ட அரசமரபிற்குச் ‘சோளர்’ எனும் பெயர் அயலவரால் இடப்பட்டிருக்கலாம்; அப்பெயரில் உள்ள ‘ளகரம்’ நாளடைவில் ‘ழகரமாக’ த்திரிந்திருக்கலாம் என்பர்.

கி. பி. 81ல், எழுதப்பெற்ற “பெரிபுளுஸ் மாரிஸ் எரித்ரியா' என்ற நூலின் ஆசிரியர், உறையூரை, அர்கரு' என்றும் குறிப்பிட்டுள்ளார் (சமஸ்கிருத "உரகபுரா" என்பதன் திரிபான "அர்கரு" (Argaru) - உறையூர்). அவர்க்கு அரை நூற்றாண்டு கழித்து வாழ்ந்த தாலமி' என்பார், புகாரை கபெரீஸ்' என்றும், உறையூரை ‘ஒர்துரா ரெகியா சோரகடி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  



உரக என்பது நாகர்களை குறிக்கும். சோழர்கள் வெளியிட்ட நாணயங்களில் "உரக " என்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கள்ளர் நாகர் வழி வந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. சோழர்கள் நாகர்களாக குறிக்கப்படுகின்றனர்.










சங்க காலம் காலம் நிர்ணயம் செய்ய உதவியது அசோகர் கல்வெட்டுகள், அசோகர் காலம் வ.கா.மு.3ம் நூற்றாண்டு, அவர் கல்வெட்டு தமிழகத்தில் நான்கு பெரும் அரசுகள் என சதியபுத்ர – கேரளபுத்ர – சோர - பாண்டிய என உள்ளது.








மேலே பெரும்பாலான பொது ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கள்ளர் மரபினரை குறிக்கும் கருமை, சோர என்ற பெயரின் அடிப்படையிலேயே சோழன் என்ற பெயரரும், சோழர்களின் தோற்றுவாய் நாகர் இன குடிகளான கள்ளர் மரபில் இருந்தே தோன்றியிருக்கும் என்பதை அறியமுடிகிறது.

சோழர்களின் கல்வெட்டில் பயின்று வரும் 
கள்வன், தேவர், உடையார், அம்பலம், பாடிகாப்பான், ஸ்ரீகார்யம் 
சொற்றொடர்களின் பொருளை ஆய்வோமானால்  


கள்வன்: -
"சோழர்கள் காலத்தில் மன்னர்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்னும் கருத்து நிலவியது. “கள்வன்”, “கற்கள்வன்“ காத்தல் தொழிலைச் செய்பவரான “திருமாலின் திருநாமம்” குறிக்கும் சொல்லாகும்.


கள்வன் என்னும் சொல்லுக்கு திவாரக நிகண்டு கரியோன் என்று மட்டுமே பொருள் தருகிறது. பிங்கலந்தையும் கரியவன், கரிய யானை என்று கூறுகிறது. ராஜராஜன் மெய்க்கீர்த்தி “கருமாமுகில் திருநிறத்துக் கனகளப ராஜராஜன் “ என்பதற்கு கரிய மேகம் போன்ற திருமேனியுடையவன் என்று பொருள் . இவனை கரிய நிறம் உடையவனாக குறிக்கிறது. 


சோழ மன்னர்களையும் அவர்கள் குடியினரையும் அவர்களது ஆட்சிக்கு உள்பட்ட சோழ ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு கொண்டு ஒழுகி வந்தனர்" (தி.வை.சதாசிவ பண்டாரத்தார். பிற்கால சோழர் சரித்திரம் 3 -வது தொகுதி. பக்கம்-10)


இறந்த மன்னர்களுக்கு நடுகல், பள்ளிப்படை (சமாதி) அமைத்து வணங்கிவந்தார்கள். சோழர்கள் கட்டிய கோயிலில் மன்னர்கள், அரசமாதேவியின் சிலைகளை வைத்தும் வழிபட்டு வந்தனர். சோழர்கள் வழி வந்த பாப்பா நாட்டு சிற்றரசர் விஜயத்தேவர் சிலையும், மாமன்னர் ராஜ சோழத்தேவரின் சிலையும் மன்னார்குடி ஸ்ரீ ஜெயங்கொண்டநாதசுவாமி கோயிலில் இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.  

இராசராசன் மெய்க்கீர்த்தி “ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல” எனத் தொடங்கும். திருமாலின் துணைவி திருமகள் ஆவார். செல்வத்தை வழங்கும் இலக்குமி என்பது பொருள்.

கள்வன் என்பதற்கு திருமால், கருமையானவன், யானை என்று பொருள் கொண்டாலும், ஸ்ரீ கள்வர கள்வன், கள்வர் பெருமகன், கள்வர் கோமான் என்பதற்கு கள்வர்களுக்குத் தலைவன் என்றே பொருள் தருவதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

சைவம், வைணவம் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. சோழர்களால் வணங்கப்பட்ட வராகி சிவனின் அம்சமாகவும், திருமாலின் அம்சமாகவும் போற்றப்படுகிறாள். சைவ சமய சார்புடைய வராகி முழுமுதல் கடவுளான திருமால் வராக அவதாரம் எடுக்கும் போது திருமகள் வராகியாக வந்தாள் என்று ஸ்ரீவைஷ்ணவ மரபு சொல்கிறது.

கள்ளர்கள் பெரும்பாலோர் சைவ சமயத்தினராக இருந்தாலும், சிலர் திருமலை தங்கள் குல முதல்வனாக வணங்கி, திருமண் மட்டுமே இடும் (வைணவ குறியீடு) பழக்கம் மட்டுமே கொண்டுள்ளனர். கள்ளர்கள் திருமாலின் திருநாமமான “கள்ளன்” அல்லது “கள்வன்” என்பதை தங்கள் குடி பெயராக இன்றும் தாங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(
மன்னர்களாகவும், இப்போதும் நிலவுடமை, சமுதாய அரசியல் செல்வாக்கு போன்றவற்றால் முன்னணியில் இருந்தாலும் தங்கள் குடி பெயரை மாற்றிக்கொள்ளவில்லை, 
மாற்ற விரும்பவில்லை என்பதை கொண்டு, கள்ளன் என்பது ஒரு இழிசொல் இல்லை என்பதை நாம் அறியலாம்).

பாடிகாப்பான்: -

ராஜராஜனின் உள்துறை அலுவலர்கள்: பாடிகாப்பான், தண்டுவான்.
பாடிகாப்பான்: கலகம், திருட்டு முதலான குற்றங்கள் நிகழாத வகையில் காப்பவன்.
தண்டுவான்: கிராம மக்கள் அரசுக்கு, கொடுக்க வேண்டிய வரிகளை வசூலிப்பவன்.

விழுப்புரம் மாவட்டம், கஞ்சியூர் மலை பகுதியில் மலையடிவாரம் உள்ள ஏரியில் பாறை ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய மருந்து அரைக்கும் செக்கின் உள்புறம் உள்ள கல்வெட்டில் பாடிகாப்பான் அச்சிலையன் என்றும், செக்கிற்கு வெளியே ஸ்ரீபாடிகாப்பான் அச்சிலையன் செய்வித்த செக்கு எனவும் செதுக்கப் பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் பாடி காப்பான் என்பது படை அதிகாரியைக் குறிக்கும். இக்கல்வெட்டின் எழுத்தமைதி பல்லவர் காலத்தைச் சேர்ந்தது ஆகும். எனவே பல்லவர் காலத்தில் படை அதிகாரியாக அச்சிலையன் இருந்துள்ளான் என்பதை அறிய முடிகிறது.

மதுரை மாவட்டம் வெள்ளளூர் நாடு பகுதியில் கள்ளர் குடியினர், மற்ற சமுதாய மக்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் பாடியப்பு என்ற உறவு முறையை கடைபிடித்து, ஏதாவது பிரச்சினை என்றால் பாடியப்பு என்ற முறையில் காவல் அரணாக நின்று, மற்ற சமுதாய மக்களோடு இன்றளவும் சகோதர தன்மையோடு வாழ்கின்றனர். சோழ மற்றும் பல்லவ முறைகள் கள்ளர் குடியினரிடம் மட்டுமே இன்றும் உள்ளதற்க்கு இதுவே ஒரு சான்றாகும்.

“உடையார்”, “தேவர்” என்பது உயர்வான நிலையைக் குறிக்கும் பட்ட பெயரேயன்றி குலப்பெயரன்று.

தேவர் :-


தேவர் என்பது இந்திரனை குறிக்கும், தேவர்கள் தலைவனாக இந்திரன 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான். 'வேந்தன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தேவி, தேவியர் என்னும் சொற்கள் மன்னர்களின் மனைவிகளையைக் குறிக்கும்.

காவேரி கரை கண்ட கரிகால சோழ தேவர்

ராஜராஜ தேவர்

இராஜேந்திர சோழதேவர்



பொன் இடியை "வஜ்ஜிராயுதம்" ஆயுதமாகக் கொண்ட இந்திரனையும் போருக்குச் செல்லும் முன்னர் வணங்கினர். கரிகால சோழனை, வேளஞ்சேரி செப்பேட்டுச் சுலோகம் இந்திரன் என குறிப்பிடுகிறது.

 

இந்திரனை குறிக்கும் உயர்வுமிக்க தேவர் என்ற சொல்லை சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்கு பின்னால் கொண்டனர். அருள்மொழித் தேவன் என்பது இராசராசனின் இளமைப்பெயர்.

இலங்கை கல்வெட்டில் புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் காணமுடியும்.

தேவர் அரசனின் பெயரை உயர்வாகக் கூறும் ஒரு வழக்கம். சிவனுக்கே தேவர் என்னும் பின்னொட்டு கல்வெட்டு உண்டு. சோழர்களின் கல்வெட்டில் வரும் தேவர், செப்பேட்டில் முதல் பகுதியான சமஸ்க்ருத பகுதியில் அரசனுக்குப்பின் தேவர் என்னும் பின்னொட்டு ரொம்ப அரிதாகவே வருகிறது. இரண்டாம் பகுதியான தமிழ்பகுதியில் அரசனுக்குப்பின் தேவர் என்னும் பின்னொட்டு வருகிறது.  உத்தமச்சோழதேவருக்கு என்று செப்பேட்டிலும் வருகிறது. இராஜேந்திர சோழதேவர்க்கு என்றும் வருகிறது.

கள்ளர்களில் தேவர், சோழங்கதேவர், விஜயதேவர், சிவலிங்கதேவர், வள்ளாளதேவர், விசல்தேவர் என்று மட்டும் இல்லாமல் தேவர் என்ற தனி பட்டத்தை தவிர,  இன்னும் பல தேவர் என்று முடியும் பல பட்டங்கள் உடைய கள்ளர்கள் சோழ மண்டலத்தில் பாளையகர்களாக, மிராசுதார்களாக இருந்ததை நாம் அறிந்ததே. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் பாப்பாநாடு குறுநில மன்னர் விஜயதேவர் மற்றும் உக்கடை தேவர்.


கள்ளர்கள் சூரிய மற்றும் இந்திர குலம் என்பதற்கேற்ப, சூரியதேவர் மற்றும் தேவர் தலைவன் இந்திரதேவரின் தேவர் பட்டத்திற்க்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள். 1883 ஆம் ஆண்டு Native life in Travancore என்ற நூலில் "The Kallar or robber caste of Tinnevelly add deva, " god," to their names as a caste title, as also did the Pandian kings" என்று குறிப்பிடுகிறார். கள்ளர் பாண்டிய மன்னர்களைப் போலவே, தங்கள் பெயர்களில் தேவர், "கடவுள்" என்று சேர்த்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் சோழ பாண்டிய மன்னர்களின் பின்னால் தேவர் என்ற அடைமொழி வருகிறது. அவர்களின் ஆட்சிகள் முடிவுற்றாலும், அதன் தொடர்ச்சியாக தேவர் என்ற பட்டத்தினை தமிழகத்தில் மூவேந்தர்கள் வழிவந்த முக்குலத்தோர் மட்டுமே இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

உடையான்: -

உடையான் என்ற சொல் உடைமைப் பொருளைச் சுட்டினாலும், நிலம் உடையவன் என்ற அளவிலேயே கல்வெட்டுக்களில் பயின்றுவருகிறது. கோயில்களில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களும் உடையார் என்ற சிறப்புப்பட்டதைப் பெற்றிருந்தமையும் கல்வட்டுகளில் காணலாம். 

அரசர்கள் தங்களை உடையார் என்ற சிறப்பு பெயராலேயே அழைத்துக்கொண்டமை நிலவுடமைப் பகுதியின் முதல்வனாக மன்னர்கள் விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.
 



முதலாம் ராசராசன் காலத்தில் தொடங்கி, முதல் குலோத்துங்கன் ஈறாக " உடையார் " என்ற சொல்லை பெயருக்கு முன்னர் பயன்படுத்தினர். 

இன்று உடையார் என்ற பட்டம் பல சாதிகளுக்கும் உள்ளது, இது அந்த அந்த பகுதியில் வாழும் மக்களின் நில உடைமையை குறிப்பதாக அமைகிறது.


கள்ளர்களின் பட்டங்களான

அரசுக்குடையார்,
அன்னமுடையார்,
உலகுடையார்,
உழுவுடையார்,
பனையுடையார்,
பசையுடையார்,
வேணுடையார்

போன்ற பட்டங்கள் உடையார் என்ற சொல் போலவே உடைமைப் பொருளைச் குறிக்கும் பட்டங்களாகும்.

ஸ்ரீகார்யம்:-
  
சோழர் காலத்தில் ஸ்ரீகார்யம் செய்வார்’ ஆலயங்களிலும், சமயம் தொடர்பான காரியங்களிலும் ஈடுபட்டனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஸ்ரீகார்யம் செய்பவராக இராசராசன் காலத்தில் நியமிக்கப்பட்டனர். நாடாழ்வான், ஊராழ்வான் என்ற அலுவலர்களும் இருந்துள்ளனர்.

மதுராந்தகன் என்பான் ‘சோழ கங்கன்’ என்று பெயர் பெற்றுச் சேலம் மாவட்டப் பகுதியில் அதிகாரத்தில் இருந்துள்ளான். கண்டராதித்தன் மகன் ஒருவன் மதுராந்தகன் கண்டராதித்தன் என்று பெயர் பெற்றவன் சோழ நாட்டுக் கோயில்களின் தணிக்கை உயர் அலுவலனாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வந்தான்.

கோயில்களின் அன்றாட அலுவல்களை நடத்த ஸ்தானத்தார் ஸ்ரீகார்யம் போன்றவர்களும் கோயில் அவை உறுப்பினர். களும் இருந்தனர் இருந்தபோதிலும் உடைமைகளும் வருவாயும் மிகுந்திருந்த கோயில்களின் அலுவல்களை மேற்பார்வை செய்ய அரசனுடைய பணியாளர்கள் அமர்த்தபட்டிருந்தார்கள் இவர்கள் ஸ்தானத்தார், ஸ்ரீகார்யம், திருவேலைக்காவல், கோயில் நாயகம் நாயகம் என்று கல்வெட்டுக்களில் கூறப்படுகின்றனர்.

“ஸ்ரீகார்யம் - உடையார் உடையான் கள்வன் சோழன்”



திருவையாறு கள்ளர் நாடுகளில் கண்டிவளநாட்டினை சேர்ந்த பகுதியாகும். ராஜராஜனின் பட்டத்தரசியாரான உலக மகாதேவி திருவையாற்று ஒலோகமாதேவி ஈச்வரமுடையார்க்குத் எல்லா தேவைகளும் செய்துள்ளார். அந்த கல்வெட்டில் ஊழியர் பெயராக ஸ்ரீகார்யம் - உடையார் உடையான் கள்வன் சோழன் என்று குறிப்பிடப்பெறுகிறான்.


அம்பலம்:-

சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர். கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர்.

கோயிலுள் இருக்கும் சபையை “மன்று” அல்லது “அம்பலம்” என்றும், அழைத்தனர். நிலமும், கல்வியும், மனையும், அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை தலைவர்களாக முடியும். ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன. அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது. நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன. இந்த அம்பலத்தில் இருந்து நீதி வழங்கியவர்கள் அம்பலகாரர்கள் ஆனார்கள்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.

சோழ கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன இந்த உயரிய சொற்கள் கள்ளர் குடியினரிடம் மட்டுமே இன்று காணப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கள்ளர் குடியினர் உருவ அமைப்பிற்கும் சோழர்கள் உருவ அமைப்பிற்கும் இடையே உள்ள ஒற்றுமை

மொழிகள் குறிப்பிட்ட சமுதாயத்தின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக, அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துவதாகவும், அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கருத்து. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஊரு’ என்ற இடத்தில் வாழும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசும் மொழியும், தமிழை ஒத்துள்ளது. அந்த பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தமிழர்களையே ஒத்துள்ளன என்கின்றனர். அதை போல ஒவ்வொரு மரபினரின் பழக்க வழக்கங்கள், உருவ அமைப்பு, உடை, உணவு மாறுபடும்.

கள்ளர் மரபினர் பற்றிய எழுதிய அனைத்து ஆய்வாளர்களும், அவர்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் காது வளர்க்கும் பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு உள்ளதை பதிவு செய்கின்றனர். அது இன்று வரை தொடர்கிறது. ( உசிலம்பட்டி பகுதியில். இதை ரஜினி முருகன் படத்தில் பதிவு செய்துள்ளனர்).

சோழ மன்னர்களின் சிற்பங்களின் உருவ சிற்பங்களை நோக்கினால் அவர்களின் தனி சிறப்பாக விளங்குவதே அவர்களின் காது மடல்கள் தான். இராஜராஜனின் சித்திரங்கள், உருவச்சிற்பங்கள் , செப்பு திருமேனிகள் இதே வடிமைப்பில் உள்ளது. ராஜராஜ சோழனின் உருவ சிற்பங்களில் துளையிடப்பட்ட காது மடல்கள், நீட்டிக்கப்பட்டு அதில் தடிமனான உலோக காதணிகள் அணியப்பட்டுள்ளது. இந்த காதணிகள் சோழரின் தோல் பட்டை வரை நீண்டுள்ளது.
பெண்கள் காதுவடித்தல் என்பது பல குடியினருக்கு இருந்தாலும், ஆண்கள் காதுவடித்தல் என்பது கள்ளர் குடியினருக்கு மட்டுமே தொன்றுதொட்டு உள்ளது.

தொள்ளங்காது கள்ளர் நாடு 




சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘’காதொன்று களைதல்’’ என்ற பாடல் அடியிலிருந்து நீண்ட காதுமடல் காதணி பற்றிய செய்தியை அறியமுடிகின்றது.
"தொங்குந் துளைச்செவி. (எ. கா.) குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1).

"தோடுடைய செவியன்" என்று திருஞானசம்பந்தர் சிவனைப் பாடியிருக்கிறார்
வடிகாது (காது வடித்தல்) என்ற காதுவடித்தல் வழக்காறு கள்ளர் மக்களிடையே சங்க காலம் முதல் மங்கலச் சின்னமாக, நம்பிக்கை வயப்பட்ட பழக்க வழக்கமாக இருந்து வந்தது. பொடனி வரை காது வளர்த்து தண்டட்டியைக் காற்றில் நீந்தவிட்டு நடக்கும் அழகிகள்தான் கள்ள நாட்டைக் கட்டி ஆள்கின்றனர். வளர்ந்த காதுகளின் வகை வைக்க முடியாத அழகை மெச்சி பாடி வைத்துள்ள பாட்டு ஊருக்கு ஊர் அம்பாரமாகக் குவிந்து கிடக்கிறது.

காது துளையிடப் பெற்று வடிகாதாக நீட்சி பெறச்செய்வர், இது காது வடித்தல் என்றும் கூறப்பெறும். இது உயர்வான அழகுணர்ச்சியின் அடையாளமாகக் கருதப் பெற்றது. கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழரின் பண்பாட்டிற்குள் பெளத்தம், சமணம் ஆகிய இரு சமயங்களின் புகுந்து செழித்தன. 

சோழர்கள் முதலில் சமண மதத்தையே ஆதரித்துவந்தனர். பெளத்த, சமண முனிவர்கள் தங்களுடைய காதினை வடிகாதாகத் தொங்க விட்டுக் கொண்டனர்  என்பதை சமணர்மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை, அழகர்மலை, காணப்படும் புடைச்சிற்பங்கள், தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம்.  இங்கு கள்ளர் குடிகள் தான் அதிகமா வாழ்கின்றனர். நின்றசீர்நெடுமாறன் (அரிகேசரி/சுந்தர பாண்டியன்/கூன் பாண்டியன்)  ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவனாவான். இவன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் இவனது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர். இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர். இவனுடன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.

சோழர்கள் முன்பு சமண மத தொடர்பு உடையவர்களாக இருந்தனர். வடிகாது வழக்காறு பல்லவர் குடைவரைப் படைப்புக்களில் முதன்மையான மாமல்லபுரத்திலும், சோழரின் கலைப்படைப்புக்களில் வடிகாது வடிவங்கள் தஞ்சையிலும் நிறைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் காணப்பெறும் சிலைகள், கோபுரங்கள், தூண் சிற்பங்கள், ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்தவர்களுடைய காலங்களிலும் வடிகாது என்பது தொடர்ந்து வரும் கூறாக காட்சி தருகின்றன.

சோழர் காலத்தில் முத்து பதிக்கப்பட்ட காதணி வடுகவாலி எனப்பட்டது. அது வட்டவடிவில் அமைந்ததாகும்.


நீண்ட காது மடல்களை கொள்ளும் வழக்கத்தை பற்றி வரலாற்று ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் கூறுகையில்" கள்ளர்கள் மிக நீண்ட காதணிகளை அணியும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும், அவர்களது காது மடல்கள் நீட்டிக்கப்பட்டு அதில் உலோக அணிகலன்களை அணிந்திருந்ததாகவும் புகைப்படத்துடன் விளக்கியுள்ளார்.

கள்ளர்கள் நீண்ட கூந்தலுடன் நீண்ட காது மடல்களை கொண்டிருந்ததாகவும், அதில் உலோக காதணிகள் தோல் பட்டையை தொடும் அளவுக்கு தொங்கவிடப்பட்டிருந்தாகவும் கூறுகிறார். இந்த வகை காதணிகளை அணியாத கள்ளர்களை பார்க்கமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார். இதை " Kallar custom" என குறிப்பிடுகிறார்.

கள்ளருகளுக்கே உரிய சிறப்பு இயல்பாக இந்த வகை காதணி அணியும் பழக்கம் இருந்ததாக வரலாற்று அறிஞர் நெல்சன் குறிப்பிட்கிறார்.
கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு அவர்கள் தன்னுடைய யாழ்ப்பாண குடியேற்றம் என்னும் நூலில் " தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள்ளர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளருடைய காதுகள் பாரமான காதணி;களுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள்" என்று குறிப்பிடுகிறார்.


கள்ளர் ஆண்களும் பெண்களும் பனையோலைப் பாம்படங்களை இட்டுக் காது மடல்களின் துளைகளை மிகப் பெரியதாக ஆக்கிக் கொணடுளள்னர்“ எனத் தஞ்சாவூர் மாவட்டக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது. 

கொழுமம் - குமரலிங்கம் ஐவர் மலை என்றநூலில் முனைவர் தி. மனோன்மணி, அவர்கள் (கொழுமம், பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்திலும், அமைந்து உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது) இங்குள்ள கள்ளர்கள் காது வளர்க்கும் பழக்கம் உடையவர்கள் என்று தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார்.

அழகர் கள்ளழகராக மாறும் போது கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வரும்போது கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் என அணிந்து அழகர், கள்ளழகராக மாறி மதுரை நோக்கி வருகிறார் என்பதை திருமாலிருஞ் சோலைமலை அழகர் மலை என்ற நூல் தெளிவாக குறிப்பிடுகிறது.


கள்ளர் வீட்டு பெண்களின் காதுகளில் அணியப்பெறும் அணிகலன்கள்
பீலி

குருத்தட்டு, பில்லணை, புடை தாங்கி, பவளம், மூண்டுக்கு மணி, பாம்படம், தண்டட்டி, சவுடி, ஒன்னப்பூ, குருத்தட்டு, கொப்பு


தஞ்சை பெருவடையார் கோயில் சிற்பம்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் 
(13 CE)

அழகர் கள்ளழகராக மாறும் போது கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வரும்போது கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் என அணிந்து அழகர், கள்ளழகராக மாறி மதுரை நோக்கி வருகிறார் என்பதை திருமாலிருஞ் சோலைமலை அழகர் மலை என்ற நூல் தெளிவாக குறிப்பிடுகிறது.


சோழர்களின்  குலதெய்வம்


கொற்றவை என்னும் தேவியின் வழிபாடு சங்க காலத்தில் இருந்து தொடர்வதாகும். காடுகளின் தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் கள்ளர்களால் கொற்றவை வணங்கப்பெற்றாள்.

இதனை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தன்னுடைய ஒப்பியன் மொழிநூல் மூலம் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். 


கள்ளர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும் வெட்சிப் போர்த் தெய்வமாகும்.



கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, முதலிய பிற பெயர்களுமுண்டு

மாயோள் : கரியள் . 
கள் : காளம் - காளி.
கள் : கருப்பு

கள்ளர் : கருமையான மக்கள் (பண்டையர்) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை. 

இதே நெறியில் வந்த சோழர்களில், தஞ்சையை வென்ற விஜயாலயனும் தஞ்சையில் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதினியை (கொற்றவை) பிரதிஷ்டை செய்தான். இதை பற்றி திருவாலான்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அந்த செப்பேட்டில் உள்ள வாசகங்கள் என்னவென்றால்

“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”

இதன் மூலம் தஞ்சை நகரில் சோழ ஆட்சியை விஜயாலய சோழன் நிறுவும்பொழுதே இத் தேவியையும் நிறுவினான்.

சோழர் குலதெய்வம் அருள்மிகு நிசும்பசூதனி கோயில்  வீடியோ


இதன் மூலம் தஞ்சை நகரில் சோழ ஆட்சியை விஜயாலய சோழன் நிறுவும்பொழுதே இத் தேவியையும் நிறுவினான்.

தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலை தூண்கள் (நியமத்துத் தூண்கள்) மகாளத்துப் பிடாரி கோயில்களின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த தேவியை போற்றி வழிபட்ட சோழ மன்னன் ராஜா கேசரிவர்ம ஆதித்தன் என்று அதே தூண்களில் உள்ள கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

கி.பி. 8-ம் நூற்றாண்டில் சோழ நாட்டு கோடியக்கரைக்கு வந்த சுந்தரர், அக்காட்டில் சிவலிங்க உருவம், காடுகிழாள் (கொற்றவை) உருவத்தின் துணையோடு மட்டும் திகழ்ந்ததாக அவருடைய தேவாரத்தில் குறிப்பிட்டு உள்ளார். முதுகாடு என்னும் இந்த தொன்மையான ஊர் சோழர் காலத்தில் சோழநாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும், எல்லையாக திகழ்ந்த ஊராகும். சோழநாட்டின் காடு அரணாக திகழ்ந்த முதுகாட்டின் காவல் தெய்வமே இந்த காடுகிழாள் சிற்பமாகும்.

தஞ்சையை நிறுவுவதற்கும் முன்னாள் கொற்றவை ஆலயத்தை நிர்மானித்து வழிப்பட்டனர் சோழர்கள். இவளே, பொன்னியின் செல்வன், உடையார் போன்ற நூல்கள் கூறும் 'நிசும்பசூதனி’
தஞ்சையில் விசயலான் எடுபித்த தேவிக்கு “நிசும்பசூதினி” என்று பெயர் பெற்றது. இதனால் இதேவியின் உருவம் மற்ற காளி திரு உருவங்களில் இருந்து மாறுபட்டதாக இருகின்றது. விஜயலானை தொடர்ந்து சுந்தர சோழன் ,ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் ஆகியோருடைய குல தெய்வமாக நிசும்பசூதினியை வணங்கி வந்தனர். ஒவ்வொரு முறை போருக்கு செல்லும் பொழுதும் சோழர்கள் நிசும்பசூதினியை வணங்கிவிட்டு தான் செல்வார்கள்.

போரில் யாரேனும் உயிர் இழந்தால் அவர்களின் மனகேதம் தீர்க்கும் பொருட்டு இங்கே பூசைகளும் நந்தா விளக்கும் ஏற்றப்படும். ஒட்டுமொத்த சோழநாட்டு மக்களும் மன்னர்களும் தங்களையும் தங்கள் நாட்டையும் காத்து நிற்கும் காவல் தெய்வமாக இந்த நிசும்பசூதனியை நினைத்து வழிபட்டார்கள்.

நிசும்பசூதனி மற்றும் உக்கிரமாகாளி விசயாலனால் எடுக்கப்பட்ட கோவில் அழிந்தாலும் நிசும்பசூதினியின் திருமேனி நிலை குலையாமல் இன்றும் காட்சி அளிக்கிறது.
 
சோழ நாட்டைச் சேர்ந்த திருச்சி மற்றும் தஞ்சையில் இருந்து பிற பகுதிகளுக்கு குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு. நா.கணேசன் தனது நூலில்சுட்டிக் காட்டியுள்ளார். மதுரை பிரமலைக் கள்ளர்சமூகத்தினர் அவர்களின் குலதெய்வமான “பெரியாச்சியை” பேச்சியம்மனாக வழிபடுகின்றனர். சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் நடை பெறும் மாரியம்மன் திருவிழாவிற்கு முன்பாக பெரியாச்சி அம்மனுக்கு விழா கொண்டாடுவது சோழவளநாட்டு மக்களின் வழக்கமாகும். பேச்சியம்மனுக்கு வைகாசி மாத அமாவாசையன்று இரவில் சர்க்கரைப் பொங்கல் வைத்து முப்பலி கொடுக்கும் நாட்டார் வழக்காறுகள் இன்றளவும் நடைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைபிடிக்கப்படுகின்றன. 

பேச்சாயி என்பது பேய்ச்சி ஆயி –பிடாரி. பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

பொன்னமராவதி  கொற்றவை கோயில் 

பொன்னமராவதியில் பழமையான கொற்றவை கோவில் உள்ளது. இது அம்பலகாரர்கள் என்னும் கள்ளர் சமூக பிரிவுனரால் பேனப்படுகிற திருக்கோவிலாக விளங்குகின்றது. இந்த ஸ்ரீ அழகு நாச்சியாம்மன் குண்டேந்தல்பட்டி கள்ளர் வம்சத்தின்  பாண்டியன் கூட்டத்து பங்காளிகள் அனைவருக்கும் குலதெய்வம். ஆடி மாதம்  விரதம் இருந்து கிடா வெட்டி சாமி கும்பிடுவது கால காலமாய் நடந்து வருகிறது.

தஞ்சை கோவிலில் கொற்றவை தளபதியான சோழர்களின் வெற்றிக்குரிய வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான். கொற்றவையை வணங்கி வருபவர்கள் மறவர் மற்றும் கள்ளர் இன மக்கள் என்று இலக்கியங்களும் தெளிவாக காட்டுகிறது.

( தினமலர் நாளிதழ் செய்தி) 

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி’ என்று அழைக்கிறார்கள். 

ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 166 , இதன் காலம் கிபி 1209 ஆம் சோழனின் சாதனைகளை கூறத் தொடங்கும் முன் சோழர் தங்களின் தெய்வமான கொற்றவையை பற்றி மட்டுமே இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதி கோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம்
  இருந்திருக்கிறது

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா முதுகாடு கிராமத்தில் கி.பி.1213-ம் நூற்றாண்டை சேர்ந்த காடுகிழாள் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பத்தில் காடுகிழாள் 8 கைகளோடு வீராசனத்தில் அமர்ந்துள்ள நிலையில் நிசும்பன் என்னும் அரக்கனை தன் காலால் மிதித்த வண்ணம் காணப்படுகிறது. கைகளில் முறையே கபாலம், வாள், கேடயம், திரிசூலம், உடுக்கை, வில், கைமணி ஆகியவை திகழ ஒரு கை உயர்ந்து விஸ்மயம் என்றும் வியப்பு முத்திரையை காட்டுகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தில் மகிடனின் தலை மீது நிற்கும் கொற்றவை நான்கு கைகளுடனும் பிரயோகச் சக்கரத்துடனும் காட்சி அளிக்கிறாள். முன் மண்டபத்தில் ராசராசன், ராசேந்திரன் காலத்திய உருள் துண்கள் காணப்படுகின்றன.

ஒச்சாயி என்‌பது ஒச்சாண்டம்மன் தெய்வத்தின் பெயர். மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் 
குலதெய்வமாக வணங்குகின்றனர் மேலும் பேச்சியம்மன், ஓச்சாண்டம்மன், அங்காளம்மன், சுந்தரவள்ளியம்மன், காத்தாண்டம்மன்,  சின்னக்காஅம்மன், காமாட்சியம்மன், கண்ணாத்தாள், ஒய்யாண்டாள் போன்ற கொற்றவை தெய்வத்தை கள்ளர்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர். 

''தன் குலநாயக தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலம் சூழ் திருமாளிகையும்'' என்னும் திருமழபாடிச் சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள விக்கிரமசோழனின் கல்வெட்டு. 

திருவரங்கம் திருமால் கோயில்
 ”சோழற்குக் குலதனமாய் வருகிற கோயில்” என்று மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பெற்றுள்ளது. 

சோழர் குலதெய்வம் அருள்மிகு நிசும்பசூதனி கோயில் 







சேரமன்னர் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கொற்றவை வழிபாடு

காந்தமன் சோழன் - கொற்றவை
வல்லம் கொற்றவை

கரிகாற் சோழ மாகாளி கோவில், விக்கிரம சோழ விண்ணகரம், வல்லத்துப் பட்டாரகி, வல்லத்துக் காளா பிடாரி, கைத்தலைப் பூசல் நங்கை, வல்லத்துக் காளி, ஏகெளரி ஏகவீரி என்றப் பெயர்களால் அழைக்கப்படும் வல்லத்துக் காளி கோயிலைக் முதலாம் நூற்றாண்டில் கரிகால் சோழன் கட்டினான்.

ஆலக்குடிவாழ் கள்ளர்களுக்கும் இக்கோவிலில் மரியாதை வழங்கப்படுகிறது. கள்ளரில் கிளக்குடையார் மரபில் வந்த நடிகை மனோரமா கிளக்குடையாருக்கும் குலதெய்வம்.

தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்கள் பலர், போருக்குச் செல்லுமுன், இந்தக் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

முதல் பராந்தக சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 947ல்) அப்பேரரசனின் அலுவலர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லத்து பட்டாரிகைக்கு வழங்கிய கொடை பற்றி கூறப்பெற்றுள்ளது. முதலாம் ராஜராஜ சோழன் இவ்வாலயத்துக்கு வந்து இத்தேவியை வழிபட்டுச் சென்றுள்ளான். அப்பேரரசனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 991 ல்) வின்னனேரி எனும் ஊரில் இருந்த முகாம் அலுவலகத்திற்கு ராஜராஜசோழன் சென்றபோது இத்தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்துள்ளான். அப்போது நிலக்கொடை அளித்தான்.
கொற்றவை சிலை - ராசராசன் மணிமண்டபம் - தஞ்சை
பாலை நிலம்

சாளுக்கிய சோழர்கள்
  காலத்திற்கு பிறகு தில்லைப் பெருமானே சோழர் குலதெய்வமாக விளங்கினார்.


ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் , தனது நூலில் விசயாலயன் முதல் இராசராசன்வரை இருந்த அரசர்கள் திருவாரூரையே மிக்க சிறப்பாகக் கருதினர். கங்கைகொண்ட சோழபுரம் சோழர் கோநகரம் ஆனது முதல், அதற்கு அண்மையில் உள்ள தில்லை நகரம் சிறப்புப் பெறலாயிற்று. இவருள் முதற் பராந்தகன் ஒருவனே சிதம்பரத்தைச் சிறப்பித்தவன். இராசேந்திரன் காலம் முதல் தில்லை பெருஞ்சிறப்பு எய்தியது. முதற் குலோத்துங்கன் காலத்தில் சிதம்பரம் மிக்க உயர்நிலை அடைந்தது.
 

விக்கிரம சோழன் காலத்தில் தில்லைப் பெருமான் கோவில் பெருஞ் சிறப்புற்று விளங்கியது.
  விக்கிரம சோழன் மகன்  அநபாயன் சோழன் “குலநாயகம்” என்று அழைத்து, அளப்பரிய திருப்பணிகளை அப்பெருமான் கோவிலுக்குச் செய்யதான்.


மூன்றாம் இராசேந்திரன்  கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவனது குலதெய்வம் தில்லை நடராசர் ஆவர்.  இராசேந்திரன் ஆட்சி கீழ்நிலைக்கு வந்துவிட்டதால், இராசேந்திரனுக்குப் பிறகு சோணாட்டைச் சோழ அரசன் ஆண்டதற்குச் சான்றில்லை. ஒரு குடும்பம் தன் குலதெய்வத்தை மறப்பது என்பது மிகவும் தவறான ஒன்று. நம் வீட்டு குலதெய்வத்தை நாம் மறக்காமல் வழிபட்டால் தான் மற்ற தெய்வங்களின் ஆசீர்வாதம் கூட நமக்கு கிடைக்கும். சோழ பேரரசை நிலை நிறுத்திய ராஜராஜ சோழதேவர், ராஜேந்திர சோழதேவர் தங்களது குலதெய்வமான துர்கையை வணங்கியும், போற்றியும் வந்தனர். ஆனால் தங்கள் குல தெய்வத்தை மறந்த சோழ சாம்ராஜ்யம், மூன்றாம் இராசேந்திர சோழதேவர் காலத்தில் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து, அழிந்து போனது என்பதே நிதர்சனம்.




சோழர்கள் நாடும் கள்ளர் நாடும்


சோழ நாடு, செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரு நாடுகளில், புனல் நாடு, பன்றி நாடு, அருவா நாடு என்ற நாடுகளை உள்ளடக்கிய இன்றைய, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை வட, தென்னார்க்காட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நாடாம். ஆர்க்காடு, உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, சாய்க்காடு, தலைச் செங்காடு, கெய்தலங் கானல், புகார், போர், பிடவூர், வல்லம், வெண்ணி என்ற இவையெல்லாம் சோழ நாட்டுப் பேரூர்களே ஆயினும், தலைககராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறை யூரும், பின்னர்ப் புகாருமே ஆகும். கி. பி. 81ல், எழுதப்பெற்ற, செங்கடற் செலவு' எனும் பொருளு டைய பெரிபுளுஸ் மாரிஸ் எரித்ரியா' என்ற நூலின் ஆசிரியர், புகாரைக் கடற்கரை நாடு' என்று குறிப்பிடுகிறது.

டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்  கூறுவது, இராஜராஜ சோழன் தன் சோழப்பேரரசை மண்டலம், வளநாடு, நாடு, கூற்றம் என பிரித்து சோழர் மேலாண்மையை எளிதாக்கி நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தார். இன்றைக்கும் இச்சீர்திருத்தத்தின் அடிப்படையில் புதுக்கோட்டையிலிருந்து மதுரை மண்டலம் வரை கள்ளர் நாடுகளாகப் பிரித்து சிறந்த சுயாட்சி யை அந்நாட்டு அம்பலங்கள் சிறப்பாக ஆண்டுவருகின்றனர். இவர்கள் இராஜராஜசோழனின் வழி தோன்றல்கள் ஆவர்.

இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளகம் (அகம் தமிழகம் - கள்ளகம், மதுராந்தகம்) எனவும் வழங்குகின்றன. 

பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது. கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். இவர்கள் கள்ளர் நாடுகளில் அம்பலங்களே தன் நாட்டு வழக்குகளை தீர்த்து வைக்கின்றனர். 
 
முடியாட்சியில் குடியாட்சி கண்ட அக்கோமானின் உண்மையான வாரிசுகளான இவர்கள், அக்கோமான் வகுத்த சீர்திருத்தத்தை அடிபிறழாமல் செய்பவர்கள். சோழர்கள் கள்ளர்கள் என்பதை இக்கள்ளர் நாட்டு அம்பலங்கள், அக்கோமான் வகுத்த வழியில் இன்றும் அவர்கள் பயணிப்பது ஒன்றே சோழர்கள் கள்ளர்கள் என்பதைக் காட்டப்போதுமான ஆதாரமாகும்.

இலங்கையில் சோழ நாடு


சோழரும் - கள்ளர் பட்டங்களும்

பெருவீரத்தோடு போரிட்டு பல நாடுகளை கைப்பற்றிய தம் குலமரபினருக்கு சோழர்கள் வழங்கிய பட்டங்கள்



தஞ்சைக்கோன் தஞ்சைராயர்  - (தஞ்சாவூர் )
கச்சிராயர் -
 (காஞ்சிபுரம்)
கலிங்கராயர் -
 (கலிங்கம்)
வேங்கிராயர் -
 (வேங்கி)
வங்கத்தரையர்/ வங்கர்/ வங்கராயர் -
 (வங்க நாடு) ;கங்கையில் நீர் எடுத்தவர்கள்
குருக்கொண்டார்-குருக்கண்டார் -
 (கங்கை உற்பத்தியாகும் குரு நாட்டை வெற்றிக்கொண்டு கங்கையில் நீர் எடுத் தவர்கள்)
அருவாநாட்டான் -
 (அருவாநாடு)
கங்கைநாட்டான் -
 (கங்கபாடி)
தக்கோலாக்கியர் -
 (தக்கோலம்)
குச்சிராயர்
 - (கன்னகுச்சி), 
கொல்லமுண்டார்
 - (கொல்லம்)
பாண்டியராயன்
 - (பாண்டியர்-மதுரை)
மண்ணையார் -
 (மண்ணைக் கடக்கம்)
ஈழம்கொண்டார்
 - (ஈழம்)
கிடாரத்தரையர், கடாரம்கொண்டார் -
 (கடாரம்)
மாணக்கவாரர் -
 (மாணக்கவாரம்)
பன்னையார் -
 (பன்னையூர்)
சீனத்தரையன் -
 (சீனா)
ராசகண்டியன் -
 (கண்டி, இலங்கை)
அங்கராயர் -
 (அங்கம்)
ஈழத்தரையர் -
 (ஈழம்)
மாளு (வ) சுத்தியார்
 - (மாளுவம்)
விசயதேவர் -
 (ஸ்ரீவிசயம்)
மல்லிகொண்டான் -
 (மல்லம் + கொண்டான்)
மகத நாடு -
 (மகதைராயர்)  
பௌண்டர நாடு
  - (பாண்டராயர், பாண்டுராயர்)  
பன்றிகொண்டான் -
 ( பன்றி நாட்டை கொண்டதனால் )
புலிகொண்டான்
 - ( புலிநாடு + கொண்டான்)
ஒளிகொண்டார்
 -  ஒளி நாடு
குட்டுவர்
 - குட்ட நாடு
பூழிநாடர், பூழியூரார், பூழிராயர்
  - பூழி நாடு



அருவாநாட்டான்:- 

கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. கரிகால் சோழன் அருவா நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது. (30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) 

அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் கள்ளர் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

துறையாண்டார்: 

மைசூர் படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள்: ஒரத்தநாடு வட்டத்தில் துறையாண்டார்கோட்டை மற்றும் திருச்சி பகுதிகளில் வாழ்கின்றனர்.
 

பழங்கொண்டார்:  

பழந்தீவு எனும் மாலைத்தீவுகளிலு புலிக்கொடியை பறக்கவிட்ட சோழர் குல இந்திரர்கள். பழங்கொண்டார்கள் ஒரத்தநாடு வட்டத்தில் பழங்கொண்டான் கோட்டை,
  பழங்கொண்டான் குடிகாடு முதலிய பகுதிகளில் மிகுந்து வாழ்கின்றனர்.

சக்கரநாட்டார் : 

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்கர கோட்டம் பகுதியை கைப்பற்றி புலிகொடியை பறக்கவிட்டவர்கள். மன்னார்குடி வட்டத்தில் வாழ்கின்றனர்.

இலாடராயர்:  

வங்க தேசத்தில் உள்ள லாடம் பகுதியை கைப்பற்றியவர்கள். மன்னை சுற்றுவட்டத்தில் மிகுந்து வாழ்கின்றனர்.

கங்கைநாட்டான்:-

இராசராசன் வெற்றி கொண்ட நாடுகளில் கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி என்பனவும் அடங்கும். கங்கபாடி மைசூர் நாட்டின் தென்பகுதியும், சேலத்தின் வடபகுதியும் இனந்த பரப்பாகும். இதனை ஆண்டவர்கள் குவாளாபுர பரமேசுவரர்களான மேலைக்கங்கர்களாவர். கங்கபாடி வெற்றியின் பின்னர் வெற்றி தந்த கள்ளர்களுக்கு இராசராசன் வழங்கிய பட்டங்கள் கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன் என்பனவாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் நெடுவாக்கோட்டை, இராப்பூசல், திருவப்பூர், திருச்சி கல்விக்குடி ஆகிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

தக்கோலாக்கியர்:-

அரக்கோணம் அருகே தக்கோலம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழர்களின் ஆளுகைக்குள் இருந்தது தக்கோலம். அதனை கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம் தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சாவூரிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.



தக்கோலம், பராந்தக சோழன் காலத்தில் கிபி 949ல் நடந்த பயங்கரப் போர். பராந்தகனின் முதல் மகனும் பட்டத்து இளவரசனும் வீராதி வீரனுமான இராஜாதித்தன் களத்திலேயே வீர சுவர்கமடைந்து யானைமேல் துஞ்சியத் தேவர் என்று அழியாப் புகழ் பெற்றான்.

தக்கோலத்தில்தான் இராஜராஜன் எனும் மாமன்னனின் பாட்டனார் 'அரிஞ்சயச்சோழர்' சாளுக்கியர்களுக்கு எதிரான போரில் பாடி வீடு அமைத்து, அதே போரில் மரணத்தை தழுவினார். அரிஞ்சிகை ஈஸ்வரம் என்ற பெயரில் இராஜராஜர் அவருக்குக் கட்டிய பள்ளிப்படை இன்றும் உள்ளது.
 

குச்சிராயர்:-. 
கூர்ச்சரம் > குச்சரம் எனப் பிராகிருதம் ஆகும். கூர்ச்சரம் (குஜராத்) கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சாவூரிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

கொல்லமுண்டார்:-
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய கள்ளர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருவையாறு உடுமலைப்பேட்டை காரத்தொழுவு, திருக்களம்பூர்,செட்டிபட்டி, கண்டலூர் முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

பாண்டியராயன்:-
இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய கள்ளர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன், பாண்டியராயன் என்பதாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும்,சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

மண்ணையார்:-
முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்த கள்ளர்களுக்கு மண்ணையார் என்ற பட்டங்களும் வழங்கப்பட்டது. பெங்களூருக்கு அருகில் உள்ள மண்ணை கடக்கம் எனும் பகுதியை கைப்பற்றி புலிக்கொடியை பறக்கவிட்டவர்கள். 

தஞ்சை வட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, விளார், அதினாம்பட்டு முதலிய பகுதிகளில் மண்ணையார்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழம்கொண்டார்:-
இலங்கையை வெல்ல போர் புரிந்த கள்ளர்களுக்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது, இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

கடாரம்கொண்டார்:-
மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்ற கள்ளர்களுக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது, இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும், புதுக்கோட்டையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகள் முற்க்காலத்தில் ராஜேந்திர சோழனின் கிடாரம் படையெடுப்பின் பெயரில் கிடாரம்கொண்ட சோழநாடு என்று வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள கள்ளர்கள் கிடாரத்தரையர் பட்டமுடன் இன்றும் உள்ளனர்.

மாணக்கவாரர்:-
நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக கள்ளர்களுக்கு மாணக்கவாரர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் பட்டுக்கோட்டையிலும், புதுக்கோட்டையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர். 

பன்னையார்:-
சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் கள்ளர்களுக்கு பன்னையார் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.


சீனத்தரையன்:-
வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு கள்ளர்களுக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் வாழுகின்றனர்.

ராசகண்டியன்:-

இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது.

இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

அங்கராயர்:-
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர கள்ளர்களுக்கு அங்கராயர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

ஈழத்தரையர்:-
சோழ மரபினர். இலங்கை மேல் படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும், கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும், இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருச்சி மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

கோட்டைமீட்டார் :-

பிற்காலச் சோழர்களில் அனபாயசோழன் என்றழைக்கப்படும் குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்னும் பட்டப்பெயர்களை தன் சிறப்புப் பெயர்களாகக் கொண்டிருந்தான் என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசனின் கோட்டையையும் முடியையுங் கொண்டதால் கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்று கள்ளர்கள அழைக்கப்பட்டனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

மாளு(வ)சுத்தியார்:-
மாளுவ நாட்டை கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம் மாளு(வ)சுத்தியார். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

விசயதேவர்:-
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர்,வாண்டாக்கோட்டை முத்லிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர் என்றும் திரிந்துள்ளது.

மல்லிகொண்டான், புலிகொண்டான் :-
இராசராச சோழன் சித்தூர் ஜில்லாவின் மல்லம் (திருவான்பூர்)
 
பிறகு
  புலிநாடு, பாகிநாடு (சித்தூர், நெல்லூர்) ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினான் . இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய கள்ளர்களுக்கு அளித்த பட்டமே மல்லிகொண்டான். இந்த போரில் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன் உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன் (மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார்). இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.


கள்ளரின் கடற்படை 

தென் கடல்கடந்து தெற்க்காசிய நாடுகளை வென்றவர்கள் மும்முடிச் சோழமன்னர்கள் கப்பற்படை பிரிவில் கள்ளர்கள் உண்டா என்றால், அதற்கு ஆதாரமாக களப்படையும், கப்பற்படையுமாக போரிட்டு பல்வேறு நாடுகளை வென்ற கள்ளர் படைபற்றின் தலைவர்களின் விருது பெயர்களுடன் இன்றும் விளங்கி வருகிறது. கள்ளர்களுக்கும் கடலுக்கும் தொடர்பு 2000  ஆண்டுக்கு முன்பே உள்ளன.

கள்ளர்களின் வங்கார், நாயக்கர், செட்டி, பட்டங்கட்டியார், சீனத்தரையர் போன்ற பட்டங்கள் கடலின் தொடர்பால் ஏற்பட்ட பட்டங்கள் ஆகும்.

பாண்டிய மன்னர்களின் வணிகத்தைப் பற்றி பண்டைய யாழ்பாண புத்தகத்தில் கிபி 1   ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 2000  ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கும், கிரேக்கர்கள், சீனர்களுக்கும் இடையேயான வணிகம் குறித்து தாலமி அவர்கள் சற்று விரிவாக குறிப்புகள் கொடுத்துள்ளார்.


அதில் பாண்டிய மன்னன் கள்ளர் பெருக்குடி மக்களுடன் முத்து எடுத்தல், மீன் பிடி தொழில் செய்ததாக நேரில் பார்த்த periplus புத்தகத்தின் ஆசிரியரும், கிரேக்க தாலமியும் குறித்துள்ளார்கள். இந்த கருத்துக்கு வழுசேர்க்கும் விதமாக ஏழுகோட்டை நாட்டில் உள்ள அனுமந்தகுடியில் முத்து வணிகம் நடைபெற்றதற்கன ஆதாரம் கிடைத்ததாக மானுட மற்றும் வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் தனது நூலில் விளக்கியுள்ளார்.

மேலும் முத்தூற்றுகூற்றம் தான் பாண்டியர்களின் முத்து தொழில் மற்றும் வாணிகத்திற்குகான நகராக இருந்துள்ளது. இந்த முத்தூற்கூற்றம் என்பது இன்று முத்து நாடு, கப்பலூர் நாடு என்ற கள்ளர் நாடுகளாக உள்ளது, மேலும் இந்த கள்ளர் நாடுகள் கடற்கரை வரை பரவியுள்ளது. இந்த முத்தூற்றுகூற்றத்தின் கடல் பகுதிகள் முழுவதும் பாண்டிய மன்னர்கள் அழியும் வரை, பாண்டிய தளபதி கப்பலூர் அம்பலம் கருமாணிக்க தொண்டைமானிடம் தான் இருந்தது. பிற்காலத்தில் அன்னிய படையெடுப்பில் பாண்டியர் அழிவிற்கு பின்பு கை நழுவிபோனது. மேலும் இன்றும் இராமேஸ்வரம், இராமநாதபுரம் உள்ள மீனவர்கள் தங்களது மீனவ தலைவர்களை பட்டங்கட்டியார் என்று அழைக்கின்றனர்.

அதேபோல் நாகப்பட்டின கடற்கரை மாவட்டத்தில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் இன்றும் கள்ளர் பெருங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா குமிளங்காடு, வளவம்பட்டி, புத்தூர் பகுதியில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பாவூர்சத்திரம் வெள்ளி மலை கோயிலில், பட்டு பரிவட்டம் மரியாதை இன்றும் நடைபெற்று வருகிறது. 

கள்ளர் நெல்லையில் இன்றும் பட்டங்கட்டியார் என்ற ஜாதியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தாய்வழி மரபை போற்றுகிறார்கள். பிறமலைக்கள்ளர்கள் உப்பை சாட்சியாக வைத்தே திருமணம் செய்கிறார்கள்.  உப்பு பிறமலை கள்ளர் சடங்குகளில் முக்கியமான ஒன்று. புதுமனை புகும் போதும் உறவுகள் உப்பும் மஞ்சள் இவற்றை முக்கியமாகத் தருகின்றனர். உப்பை சாட்சியாக மேல் நின்று திருமணம் செய்யும் முறை புதுக்கோட்டை கள்ளரும் கடைபிடித்துள்ளனர்.
கிபி 1881ல் மக்கட்தொகை கணக்கெடுப்பில் இடுவகயல் கள்ளர்கள் என்ற பரதவ சாயல் கொண்ட கள்ளர் பிரிவு இருந்துள்ளது.

கள்ளரின் பட்டங்களில்  சோழ மன்னர்களின் மண உறவுகள்

பல ஊர்ப்பெயர்கள் கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது. இன்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.

1) உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன்.கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள்.

2) கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.

3) விசயாலய சோழன் (கி.பி. 846 - 881) ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (கள்ளரின மன்னன் இராசராச சோழன். புலமை வேங்கடாசலம் பக்கம் 6)

4) விசயாலய சோழனின் மகன் முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் இளங்கோப்பிச்சி என்பவளையும், மற்றும் காடுபட்டிகள் வழி வந்த காடுவெட்டியார் மகள் திரிபுவன மாதேவியையும் மணந்திருந்தான் (E.P.Ind.Vol.XXVI, பக்கம் 233, 234)

5) முதல் ஆதித்த சோழன் மகன் கன்னரதேவன் (கி.பி கள்ளரினத்தின் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பூதிமாதேவ அடிகள் என்பவளை மணந்திருந்தான் (S.I. Vol.VIII.Np 665)

6) முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 953) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (அன்பில் செப்பேடு E.P. Ind. Vol XV. No 5)

7) கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் செம்பியன் மாதேவி என்பவரை மணந்திருந்தான் (S.I.I. Vol. VIII. No.141)

8) கல்வெட்டு திருக்கோடிக்கா திருக்கோடிக்காவுடையார் கோயில். கும்பகோணம். கி.பி 982 உத்தமசோழ்ன் 11ம் ஆட்சி ஆண்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்ம(ர்க்)கு யாண்டுயக
ஆவது வடகரை நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவில்
மஹாதேவர்க்கு ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு
வாய்த்த மழவரையர் மகளார்
பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார்

9) அரிஞ்சய சோழன் (கி.பி. 956 - 957) கள்ளரினத்தின் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவளையும் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்திருந்தான் (The Cholas இரண்டாம் பதிப்பு பக்கம் 152)

10) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி.பி.957 -970) கள்ளரினத்தின் சேதுராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான் (S.I.I. Vol.VII.No 863 மற்றும் பெரியபுராண ஆராய்ச்சி டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பக்கம் 74.)

11) உத்தம சோழன் (கி.பி. 957 - 970) கள்ளரினத்தின் மழபாடியார் (மழ வாடியார்) என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த மழபாடித் தென்னவன் மாதேவி என்பவளையும் கள்ளரினத்தின் இருங்களார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளையும், கள்ளரினத்தின் விழுப்பரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும் மணந்திருந்தான் (Ins. 494 of1925, Ins 298 of 1906)

12) மாமன்னன் முதலாம் இராசராச சோழன் (985 - 1014) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன் மாதேவி என்பவளையும் மற்றும் கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி வானதி என்னும் வானமாதேவியையும் மணந்திருந்தான் (பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கம் 141)

13) இராசேந்திரசோழன் (கி.பி. 1012-1044) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன்மாதேவி என்பவளை மணந்திருந்தான்.

14) முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) கள்ளரினத்தின் காடவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த காடவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான். (பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 232 -233)

15) இரண்டாம் இராசராச சோழன் (கி.பி. 1146 - 1163) கள்ளரினத்தின் சேதிராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த அவனி முழுதுடையாள் (உலகுடை முக்கோக் கிழானடிகள்) என்பவளை மணந்திருந்தான். (பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 292)

16) மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த புவனமுழுதுடையாள் என்பவளை மணந்திருந்தான். (பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 357)

17) மாமன்னன் முதல் இராசராச சோழனின் தமக்கை முதலாம்  குந்தவை வல்லவரையன்  வந்தியதேவனை மணந்தாள்.


கள்ளர் பட்டங்களில் சோழ மன்னர்களின் சிறப்புப் பட்டங்கள்

1) கண்டராதித்தசோழன், அரிஞ்சயசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன், இராசராசசோழன், இராசேந்திரசோழன், இரண்டாம் இராசேந்திரசோழன், வீரராசேந்திரசோழன், அதிராசேந்திரசோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் தேவர் என்னும் கள்ளர் பட்டங்களை பூண்டனர்.

2) முதலாம் இராசராசசோழன் இராசகண்டியன், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

3) முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

4) இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற் கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

5) குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான், முடிகொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

6) இரண்டாம் இராசேந்திரசோழன் உத்த்ங்கொண்டார், உத்தமுண்டார் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

7) இரண்டாம் இராசேந்திரசோழனின் மகன் சோழகன்ன குச்சிராயன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

8) மதுராந்தக சோழன் சோழங்கர் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

9) மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ கேரள தேவன், சோழபாண்டியன், கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டிருந்தான்

10) விக்கிரம சோழன் கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

11) இராசமகேந்திர சோழன் கொல்லத்தரையன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

சோழர்களின் முதன்மை பட்டங்களாக சோழங்க தேவர், சோழகர், செம்பியதரையர், செம்பியர், கோழியர், உறந்தையர், சோழர்களின் வர்மர் என்று குறிக்கப்படுகின்ற வர்மர் வலங்கொண்டார் என்ற பட்டம் கள்ளர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பெயர் தங்கிய குடும்பங்கள் சோழமண்டலத்தில் இன்றும் செழிப்போடும், அதிகாரத்தோடும் கள்ளர் குடியில் வாழ்ந்து வருகின்றனர்.

சோழர்களுக்கு வழங்கும் கிளைப்பெயர், இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும். பிறநாடுகளை வென்று கைக் கொண்டமை பற்றியும், படைத்தவைராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் விளக்கமாம். இங்ஙனம் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவர்க்கும் உண்டாகிய இப்பெயர்கள் பின்பு அவர்களின் வழியில் வந்தோர்க்கெல்லாம் வழங்கு வனவாயின. கள்ளர் வகுப்பினர்க்கு உள்ளது போல் எவ்வகுப்பினுள்ளும் இத்துணை மிகுதியான பட்டப்பெயர்கள் இருப்பதாக வெளியாகவில்லை.

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் காணப்படுகின்றன.

குச்சிராயர், கச்சியராயன், காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன. இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன அவை அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.

கோயில்களுக்கு நிலம் முதலியன தானஞ் செய்தவிடத்தும், அரசர்கள் சில தீர்ப்புச் செய்த விடத்தும் கீழே கையெழுத்திட்டோரின் பெயர்களாக இப்பட்டங்கள் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றன. இதிலிருந்தே இப்பெயர்களையுடையோர் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாகும்.

ஆய்வாளர்கள் கருத்து

டாக்டர் பர்னல்:

தமிழகத்தின் சங்க இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள், வாழ்க்கை முறை, பிற்கால போர்கள் பற்றிய ஆவணங்கள்(Palaeographic evidences) ஆகியவற்றை ஆராய்ந்த டாக்டர் பர்னல் எனும் பிரிட்டீஷ் ஆய்வாளர்
  சோழர்கள் மற்றும் பாண்டியர் கள்ளர் மரபினரே எனும் தனது ஆய்வு முடிவினை கிபி 1878ல் தெரிவித்துள்ளார். இதனை அரசாங்க ஆவணமாக Manual of tanjore in madras presidency எனும் நூலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

 
இதே காலத்தில் தான் முக்குலத்தோரை தமிழகத்தின் போர்குடி என தங்களுடைய Military castes எனும் புத்தகத்தில் குறித்தனர்"

தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் 
கள்ளர் சரித்திரம் நூலில் இருந்து சோழர்கள் கள்ளர் குடியில் தோன்றியவர்களா பற்றிய ஆய்வு
 
(1912 இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார். கள்ளர் சரித்திரம் கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. )

சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து விட்டதேயன்றி அவர் தாமும் கிளையுடன் அறவெயொழிந்து விட்டனராவரா? எந்த குலமும் அஃது எவ்வளவு சீர்கேடான நிலையை அடைந் திருப்பினும் அறவேயொழிந்துவிடு மென்பது பொருத்தமாகாது. ஆயின், அது மற்றொன்றிற் கலந்து விடுதலும், பெயர் முதலியன மாறி நிற்றலும் இயல்பே ஆகலின் சோழர்கள் எம்மரபிலே கலந்துள்ளனர் என்பதே ஆராய வெண்டுவது.

கள்ளர்களைச் சோழர் மரபினரெனச் சிலர் கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப்பட்டது. இவர்கள் முதலில் பல்லவ வகுப்பினரே யென்றும், சோழர்கள் பின்பே இவர்களுடன் கலந்துள்ளனரென்றும் நாம் கூறுகின்றோம். சோழர் கலந்துள்ளன என்பதற்கும் வேறு ஆதரவுகள் வேண்டும். அவ்வாதரவுகளே இங்கே எடுத்துக் காட்ட விருப்புகின்றவை.

இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”

‘’கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு — இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து”

இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:

“இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள்……..கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,

‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’

என்று பாடுவதால் அறியலாகும்.

இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது. கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.

இனி, இவர்கள் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் ‘சோழங்கன்’ என்பதும் ஒன்று, ‘தன்றிருத்தம்பியர் தம்முள்–மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி’ எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன் சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும்.

சாசனங்களில் ‘சோழகோன்’ என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.

கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை ‘அரையர் ‘ ‘நாடாள்வார்’ என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,

‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)

என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)

விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற்காணப்படுகின்றன.

இது காறும் தட்டியவற்றிலிருந்த பல்லவர் வழியினராகிய கள்ளரோடு சோழரும் கலந்து விட்டமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கும். பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்

சோழர் குலத்தின் முடிவு

சோழர்களின் பரந்த சாம்ராஜ்யம் உறுதியாகவும் கட்டுக்கோப்புடன் இருந்ததற்கு திறமையான தலைமை, வலிமையான படைபலத்துடன் மற்றொரு முக்கியக் காரணம் மற்ற அரச குடும்பங்களுடன் செய்துக் கொண்ட திருமண பந்தங்களே. சோழ நாட்டிற்குள் இருந்த பல்வேறு சிற்றரசர்களுடனும் திருமணபந்தம் கொண்டதால் அவர்கள் இன்னும் அதிக சிரத்தையுடன் சோழ அரசை கண்ணுங்கருத்துமாக பாதுகாத்தனர்.

இராஜராஜ சோழருக்கு குறைந்தது 16 மனைவிகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிற்றரசர் குடும்பங்களை சார்ந்தவராக இருந்தனர். சோழராட்சியில் செல்வாக்குடன் இருந்த ராணிகள் அனைவருமே தத்தமக்குரிய பண்டாரத்திலிருந்து கோவில் திருப்பணிகளுக்கும் நிவந்தங்களுக்கும் பொன்னும் பொருளும் அளித்துள்ளனர் என்பதையும் ஆதாரப்பூர்வமாக அறிகிறோம்.

எந்த திருமண பந்தத்தால் உறுதியான அரசாக சோழப்பேரரசு நிலைப் பெற்றதோ அதே போன்ற திருமண பந்தம் கொண்ட இரு சிற்றரசரசுளாலேயே ஒற்றுமையையும் கட்டுக்கோப்பையும் இழந்ததோடு சோழப் பேரரசே முற்றிலும் மறைவதற்கும் முக்கியக் காரணமாயிற்று. மூன்றாம் குலோத்துங்கன் தன் மகளைத் திருமணம் செய்து வைத்த காடவ சிற்றரசன் மணவாளப் பெருமாளாகிய முதலாம் கோப்பெருஞ்சிங்கனும், தன் மகனுக்கு பெண் எடுத்த அரசான மகதை மண்டலத்து வாணகோவரையர்களும் இணைந்து சூழ்ச்சி செய்தே மூன்றாம் இராஜராஜருக்கு பாண்டியர்களுடனான போரில் முக்கிய நேரத்தில் தங்கள் வசமிருந்த பெரும் படை பலத்தை போருக்கு அனுப்பாததோடு பாண்டியனுடனான போரில் மூன்றாம் இராஜராஜர் தோல்வியடையவும் முக்கியக் காரணமாயிருந்தனர். அதுமட்டுமில்லாமல் மேலும் படை திரட்ட பின்வாங்கிய மூன்றாம் இராஜராஜர் மீது எதிர்பாரா விதமாக போர் தொடுத்து சிறையும் வைத்தான் கோப்பெருஞ்சிங்கன்.

பின் ஹொய்சால அரசன் இரண்டாம் வீர வல்லாளன் தனது பெரும்படைகளுடன் வந்து கோப்பெருஞ்சிங்கனையும் பாண்டியனையும் ஒரே நேரத்தில் இரு படை பிரிவாக பிரிந்து வந்து முறியடித்து மூன்றாம் இராஜராஜர் இழந்த அரசை மீட்டுக் கொடுத்தான். இருப்பினும் உறவினர்களும் சிற்றரசர்களுமான இந்த இருவரின் துரோகத்தாலேயே சோழப் பேரரசு தலை நிமிர முடியாமல் பழம் பெருமையிழந்து விரைவில் அழியவும் முக்கியக் காரணமாகிப் போனது.

நிறைய பேர் நினைப்பது போல் மூன்றாம் குலோத்துங்கன் மறைந்த பின் மூன்றாம் இராஜராஜர் ஆட்சிக்காலத்தில் புதியதாக கலகம் செய்யவில்லை. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே இது போன்ற சதி வேலைகளில் அந்த இரு சிற்றரசர்களும் இறங்கினர் என்பதற்கு முக்கிய ஆதாரமாய் இருப்பது பின் வரும் திருவண்ணாமலை கல்வெட்டாகும்.
 

மூன்றாம் குலோத்துங்கனின் 27ஆம் ஆட்சியாண்டில் வெட்டுவிக்கப்பட்ட இக்கல்வெட்டின் சாராம்சம் சோழப் பேரரசின் அத்தனை சிற்றரசுகளும் (வாணகோவரையர், காடவரையர் நீங்கலாக) ஒற்றுமையுடன் இருப்போம் என்றும் ராஜ துரோகத்தில் ஈடுபட மாட்டோம் என்றும் அவ்வாறு ஈடுபட்டு வருகின்ற பொன்பரப்பின வாணகோவரையன் மற்றும் குலோத்துங்கசோழ வாணகோவரையன் மற்றும் இராசராச காடவராயர் ஆகியோருடன் ஒன்று சேர மாட்டோம் என்றும் தேவைப்பட்டால் அவர்களை எதிர்க்க தமது படை மற்றும் குதிரைகளை அனுப்பி உதவுவோம் என்றும் எந்த நிலையிலும் இராஜ துரோகத்தில் ஈடுபடமாட்டோமென்றும் உறுதியுடன் அண்ணாமலையார் கோவிலில் சத்தியம் செய்து வெட்டுவித்த கல்வெட்டு இது.

மிக மிக முக்கியமான வரலாற்று ஆதாரமான இக்கல்வெட்டின் மூலம் இந்த இரு சிற்றரசர்களும் பல சதிச் செயல்களில் குலோத்துங்கன் காலத்திலேயே ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அக்குடும்பங்களுடன் திருமண சம்பந்தம் கொண்டிருந்த குலோத்துங்கன் அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தாலும் எக்காரணத்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்கையுடன் விட்டிருப்பதும் தெரிகிறது. அதன் பலன் சமயம் பார்த்திருந்த அவ்விரு சிற்றரசர்களும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்பின் போது சரியான சமயத்தில் சோழர்களுக்குதவாமல் துரோகம் செய்து அவர்களின் தோல்விக்கும் வழிகோலினர் என்பதும் தெளிவாகப் புலனாகும்.

கள்ளர்களுக்கும் சோழருக்குமான தொடர்பை பார்த்தோம், ஆனால் இன்று பல சாதியினரும் தாங்கள் தான் சோழ வாரிசுகள் என்ற சுவரொட்டியை தஞ்சையில் நாம் காண முடியும். போலி சோழர்களின் வரலாறு அறிய சோழர்கள் - 3 பார்க்க

நன்றி :
ஐயா ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்

ஆய்வுகள்: 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் 
திரு. சிவம் சேர்வை 
திரு. பரத் கூழாக்கியார் 
திரு. அஜித் தேவர்