தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் கருக்காடிபட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமம் பத்தை, காரப்பத்தை, கருக்காடிப்பத்தை என்றெல்லாம் பெயர் வழங்கிவந்து தற்போது கருக்காடிப்பட்டி என்றழைக்கப்படுகிறது. இங்கு மிகப் பெரும்பான்மையாகக் கள்ளரின மக்களின் கண்டியர் என்ற பட்டப் பெயர் கொண்டவர்களே உள்ளனர். இவர்கள் ஆண்டி கண்டியத்தேவர், பெத்தாயி வளவாயி, தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஊர்மக்கள் கண்டியத்தேவர், நரியாண்டி, பெத்தாயி, வனவாயி ஆகியோர்களின் செயல்பாடுகளினால் அவர்களைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு கண்டியத்தேவர்ர் மாண்ட இடத்தில் கோவில் கட்டியிருக்கின்றனர். தேவரை மய்யத்தில் வைத்து அவருக்கு இருபுறமும் பெத்தாயி, வளவாயியை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே நரியாண்டிக்கு வளைவு கட்டி வைத்திருக் கிறார்கள்.