வியாழன், 7 மார்ச், 2024

துரைராஜா சோணாடுகொண்டார்




துரைராஜா சோணாடுகொண்டார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள பூதலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் இல் 1910 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் எஸ். மருதையா சோணாடுகொண்டார் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1936 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் 188, எல்பிசி பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.