வெள்ளி, 21 ஜூலை, 2023

அரசு பணியில் முக்கிய பதவியில் இருக்கும் கள்ளர் மரபினர்கள்

G. காவியா தேவர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா சேடபட்டி ஒன்றியம், M.கல்லுப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மதிப்பனூர் பேச்சிவிருமன் குலதெய்வம் கும்பிடும் திரு. மாயண்டிதேவர் அவர்களின் புதல்வன்  மேல உரப்பனூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு.மா.சின்னபாண்டி ஆசிரியர் அவர்களின் மகள் சி.காவியா IAS .



Dr.G. இளமாறன் ஓந்திரியர் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தென்பொதிகை நாடு  கருவாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர. Dr.G. இளமாறன் ஓந்திரியர் M.Vsc.,

உத்திர பிரதேச மாநிலம் அமேத்தி மாவட்டத்தில் காவல் துறை சார்பாக குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது... இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைகுரிய திரு.Elamaran IPS அவர்கள்.



இளம்பகவத் கண்டியர்

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு சோழன்குடிகாடு வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய கந்தசாமி கண்டியர் மகன் இளம்பகவத்.

தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை செய்தவர்.



விஜயகுமார் தேவர்

தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி செல்லையா வி.ஏ.ஓ.,  ராஜாத்தி அம்மாள்  பள்ளி ஆசிரியை ஒரே மகன் விஜயகுமார் IPS.

2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதி டி.எஸ்.பி., தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். கடைசி ஏழாவது முயற்சி வெற்றி பெற்றார்.