வியாழன், 21 ஏப்ரல், 2022

அன்பழகன் கோபாலரின் குடும்பத்தினர் தந்த அரசு பள்ளி கட்டிடம் தந்




திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்களான அன்பழகன் கோபாலர்- தனசேகரி ஆகியோரின் மகன்கள் பொறியாளர்கள் இளங்கோவன் கோபாலர்(64), முத்தழகன் கோபாலர்(59), ஆடிட்டர் ராஜகோபால் கோபாலர்(55) ஆகியோர் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்துள்ளனர். இவர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள். 



தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்' என்ற திட்டம் மூலம் தங்கள் பயின்ற  பள்ளிக்கு தங்களது தாயாரின் பெயரில் 1 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 9 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளனர். கடந்த 2018-ல் தங்கள் சொந்த ஊருக்கு வந்தபோது கஜா புயலில் பள்ளி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால் அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மூவரும் இணைந்து பணம் சேர்த்து, இதை செய்திருப்பதாக சகோதரர்கள் தெரிவித்தனர்



பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைபள்ளிக்கு அன்பழகன் கோபாலர் குடும்பத்தினர் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தனசேகரி அம்மாள் பெயரில் புதிய கட்டிடம் திறப்பு விழா:   தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி மாண்புமிகு ஏகேஎஸ் விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர்  திருமதி சாருஸ்ரீ ஐஏஎஸ், கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர்  மணிமேகலை முருகேசன்  ஆகியோர் முன்னிலையில் திரு அன்பழகன் கோபாலர் திறந்து வைத்து ஒப்படைத்தார்.  ஒன்பது வகுப்பறை கொண்ட  கட்டிடத்தை சொந்த செலவில் கட்டி மக்களுக்கு ஒப்படைத்த நிகழ்வை அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.