பெற்றோர்கள் வாழும்போது கவனிக்கப்படாமல் அவர்கள் மறைந்த பின் ஆடம்பர பகட்டும் வெடி வேடிக்கை, ஆட்டம் பாட்டம் கரகாட்டம் என வாழும் பெரும்பாலானோர் மத்தியில்,
தன்னை படிக்கவைத்து, ஆளாக்கி அழகு பார்த்து மறைந்த தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவர்களின் திருவுருவச் சிலையை தத்ரூபமாக நிறுவி, வாழும் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றியதோடு மட்டும் நில்லாமல், உற்றாரும் மற்றாரும் ஒற்றுமையின் மேன்மையை உணரும் வகையில் அனைவரும் ஓய்வெடுக்க ஒர் சத்திரமும், குறுகிய வட்டத்துக்குள் ஆட்படாமல் வாழும் எதிர்கால சந்ததியினர் அறிவுப்பசி போக்கிட நூலகமும், "அம்மா அப்பா" எனும் மந்திரச்சொல்லையும், தான் கடந்து வந்த பாதையையும், வளர்த்துவிட்ட கிராமத்தையும் நினைவில் கொள்ளாமல் ஆண்ட்ராய்டு உலகில் அவதனிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும், ஊரின் ஒற்றுமையையும் உறவின் மேன்மையையும் தம்மை வளர்த்தெடுக்க தன்னிலை மறந்து பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்த பெற்றோரை இறுதிக் காலங்களில் போற்றிப் பாதுகாப்பது குறித்தும் மற்றவர்களுக்கு உணர்த்திய ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணம்....
பெரியவர் M.S.ராஜேந்திரன் கண்டியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை நன்றியோடு போற்றி, நீங்கள் விதைத்திட்ட விதையால் விருட்சமாக வளர காத்துக் கொண்டிருக்கும் பலரில் ஒருவன்.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"
மகன் தந்தைக்கு செய்யும் உதவி தன் தந்தை பெருமைப்படும்படியான செயல்களைச் செய்து பிறர் இவனைப் புகழ்ந்து இவன்தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தார் என்று சொல்ல வேண்டும்.