வியாழன், 7 ஜூலை, 2022

சேடப்பட்டி செப்பேடு - சேடப்பட்டி அம்பலக்காரர் மடம்




நெடுங்குள நாட்டு ஆலங்குளமான பெரியகுளத்தைச் சேர்ந்த தாமரைக்குளம் , சேடப்பட்டி , மேல்மங்கலம் (மேலமங்களம்) , வடுகர்பட்டி (வடுகபட்டி) , அழகிரி நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள காத்தான் அம்பலம் , தம்பான் அம்பலம் , குஞ்சாய அம்பலம் ஆகியோர் வழிவந்தவர்கள் ஒன்று கூடி , மடம் ஒன்று ஏற்படுத்தினர் . அம்மடத்தலைவராக பாணி பார்த்திப அரையன் மகன் சங்கரமூர்த்தியை அமர்த்தி அவருக்கு வருவாயாக வர்த்தனை தானியம் , ஏழு கலம் , கலியாணம் ஒன்றுக்கு நாலுபடி அரிசி , அன்னிக் குடிக்கு மூன்று பணம் ஆகியவை வழங்குவதாகப் பட்டயம் எழு - திக் கொடுத்துள்ளனர் . செப்பேட்டில் முதல் 12 வரிகளில் அம்பலக்கார்ர் பெருமைகள் சொல்லப்பட்டுள்ளது.

கலங் காத்தான் செங்காவிக் கொடியுடையோன் காவிக் குடையுடையோன் காவிச் சிவிகையுடையோன் அரவணியரனார் ரகத்தில் வேர்வை கரமது வாங்கி ச ங்கு சேர்படை வெண்சாமரையுடன் துலங்க யிவர் சுளூபமாய் வன்த வ ரிகல் மிகத் தோன்றி யிலமுகிலெனுங் கச்சியர் நகரி காவலராகிய காவல ரீட்டிக்கு மாலை யெதுத்தே யிட்டவர் மட்டில்லாச் சேனையை சோட் டையால் வென்றவர் வேளமும் பரியிமிகுந்திடு முன்னாள் சோழனை அன்று துலங்கக் கட்டி முறைப்பாடு வெட்டி முறியக் குத்தி பிற்ப்பாடு வெ ட்டிப் பேர் பாடிய தராசுரவனை யுதுரம் படையற வெட்டும் தரவிட்டிகமுள்ள சஹா ய வீரர் வெள்ளைக் குடைக்கும் வெண் சாமரைக்கும் கள்ளவே வாய்த்த பெருமான் வா ழி வாழி வையகம் வாழி ஊழிகாலம் உகந்திட வாழியே என்ற ஊழிகாலம் உகந்திட வாழியே என்ற கலியுக சகார்த்தம்.