130 ஆண்டுகள் பழமையான தர்ம சத்திரம் கரம்பயத்தில் உள்ளது. இது கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. அய்யாவு வாண்டையார் அறக்கட்டளையின் சொத்தாக இது இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஐந்து தலைமுறைகளாக அய்யாவு வாண்டையார் குடும்பத்தார் இதை நிர்வகிக்கிறார்கள். அய்யாவு வாண்டையார் என்பவர் கரம்பயத்தில் ஆதியில் வாழ்ந்த ஒரு பெரு நிலக்கிழார் ஆவார். பல ஆலயங்களுக்கு அறப்பணி செய்யும் இந்த அறக்கட்டளை பழனி ஸ்ரீ முருகப்பெருமான் ஆலய மேம்பாட்டிற்கும் பல தலைமுறைகளாக உதவி வருகிறது. தற்போதும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் இந்த வாண்டையார் வம்சாவழியினருக்கு முதல் மரியாதை தரப்படுகிறது.