சனி, 19 பிப்ரவரி, 2022

களிமேடு - சைவத் திருமுறை வளர்த்த கள்ளர்கள் வாழும் ஊர்.



களிமேடு தீ விபத்தில் இறந்தவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் கள்ளர் மரபை சேர்ந்தவர்கள்.  சைவத் திருமுறை வளர்த்த கள்ளர்களுக்கு நேர்ந்த, இந்த கொடுமை இனி யாருக்கும் வரக்கூடாது. தமிழக அரசு தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது.

களிமேடு கிராமத்தில் வாழும் கள்ளர்கள் திருமுறை திருநாவுக்கரசர் தேவாரம் கற்றவர்கள். 

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதும் நிகழ்ச்சி நடந்தது.  100 ஆண்டுகளுக்கு மேலாக திருமறை ஓதுதல் நிகழ்ச்சியை பெரிய கோயிலில் அரங்கேற்றி வருகின்றனர். பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, 10 ஓதுவார்கள் தலைமையில், களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 40 சிறார்கள் பங்கேற்று திருமறை ஓதினார்கள். 

ராஜராஜன் காலத்திற்கு முன் வாழ்ந்த நால்வர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் எழுதிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட நூல்களிலுள்ள பாடல்கள் திருமறை எனக் கூறப்படுகிறது. 

இந்தத் திருமறையின் மீது ராஜராஜனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிதம்பரம் கோயிலில் இருந்த திருமறைப் பாடல்களை மீட்டு வந்து, பெரிய கோயிலில் வழிபாட்டிற்கு பாடச் செய்தவர் ராஜராஜன். 

இதற்காக சுற்றுப் பகுதியிலிருந்து 400 தலிச்சேரி பெண்களை கோயிலில் தங்க வைத்து தமிழ் கற்றுக் கொடுத்து, இசைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தினமும் மாலை திருமறைப் பாடல்களை பாடச் செய்தார். 

திருமறை மீது ராஜராஜனுக்கு இருந்த ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, பெரிய கோயிலில் சதய விழாவின் போது திருமறை ஓதுவதை வழக்கமாகக் வைத்துள்ளனர். 

சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள். இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தன. எனவே அச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன்  -  என அழைக்கப்பட்டான். நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தினார். 

இதுகுறித்து களிமேடு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகாபதி கூறியது: 

அப்பர் மீது பற்றுக் கொண்டு களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் தொடங்கியுள்ளோம். மார்கழி மாத பஜனையின் போது இக் கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமிகள் திருமறை ஓதியபடி வீதியுலா வருவார்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய கோயிலில் திருமறை ஓதி வருகிறோம் என்றார் அம்பிகாபதி 

சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரும் உண்டு. 

தன் மூச்சு இருக்கும் வரை சிவபுகழ் பாடி சிவத்தொண்டு செய்து இறந்த சிவனடியார் திருநாவுக்கரசருக்கு திங்களுர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் எனத் தமிழகத்தில் பல்வேறு இடத்தில் கோவில் உள்ளது. இதில் தஞ்சாவூர் களிமேடு என்னும் இடத்தில் உள்ள கோவில் அப்பருக்கு மிகவும் பிரசத்தியான கோயிலாகும். 

பல்வேறு தலங்கள் சென்று சிவபுகழ் செய்த திருநாவுக்கரசருக்கு, மிகவும் சிறப்பாகத் திருவிழா எடுத்துக் கொண்டாடும் சிறப்பு தமிழ் கட்டிட பாரமறியத்தை எடுத்துரைக்கும் தஞ்சையில் களிமேடு என்னும் ஊரில் பல சிறப்புகள் கொண்ட களிமேடு அப்பர் திருத்தலத்துக்கு உண்டு. 

களிமேடு என்னும் இந்த ஊர் தஞ்சையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். மிகவும் பாரமரியமான இந்த திருத்தலம்  அப்பருக்கு சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு வருடமும் சித்திரை சதய நாளில் அப்பருக்கு குரு பூஜை செய்து மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும். சுற்றுவட்டார மக்களுடன் ஆனந்தமாக சிவத்தொண்டு செய்த சிவனடியாருக்குச் செய்யும் பாக்கியமாகக் கருதி இந்த விழா கொண்டாடப்படுகிறது. அலங்காரம் கொண்டு அப்பர் வரும் இத்திருவிழா சதய விழா என்று அழைக்கப்படும். இந்த ஆலயத்திற்கு அருகில் இருக்கும் 100 வருடப் பழமையான மடம், உயிர்க்கொலை பாவத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டு அப்பர் மடம் என்றாகியது. 

இங்கு அமைந்துள்ள அப்பர் பெருமானின் 300 வருட ஓவியத்திற்குச் சிறப்பு குரு பூஜை செய்யப்படுவது






வழக்கமாகும், அதன்பின் அப்பரின் உருவச் சிலை தேரில் வைத்து ஊர்வலமாக வந்து திருவிழா நடக்கும். இன்று முற்றிலும் எரிந்து போய்விட்டது.