திங்கள், 12 மார்ச், 2018

வடமலை கள்ளர் நாடு

 நாடு : வடமலைநாடு


பொதுக்கோவில்: பர்வதகிரீஸ்வரர் சிவாலயம். இக்கோவில் குடைவரைக்கோவில்களில் ஒன்று. தொல்லியல் துறையால் பேணப்படுவது. ஆயிரங்கால் மண்டபமும் உள்ளது.





இக்கோவிலில் கள்ளர்குல பல்லவராயர் முதல் பல பழமையான கல்வெட்டுக்கள் உள்ளன. முக்கியமாக கோவில் பாதுகாப்பில் தன் உயிரையே விட்ட கள்ளரான பட்டவன் வத்தனாக்கோட்டை கொழுந்திரார் சிலையும் உள்ளது.




கொள்வினை கொடுப்பினையானது திருக்காட்டுப்பள்ளி, தந்திநாடு,
விசாங்க நாடு (அன்பில்) கூத்தாப்பல்நாடு, பெரிய சூரியூர் கள்ளர்நாடு, திருவையாறு, செங்கிப்பட்டி (கொற்கைநாடு) , திருவெறும்பூர் கள்ளர்களோடு உறவு கொண்டுள்ளனர்.











அம்பலகாரர்: தெம்மாவூரில் உள்ள நரங்கியர்

வடமலை நாட்டு அம்பலக்காரரான வீரமிகு திருநடனம் நரங்கியர் (1950-2001)  அவர்களின் கம்பீரத் தோற்றம்





ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன.



காணப்படும் பட்டங்கள்: 
காடவராயர்
கொழுந்தியர்
தென்கொண்டார்
மட்டையர்
உத்தமுண்டார்
நரங்கியர் 
தொண்டைமான்
சோழையர்
உத்தமுண்டார்
சேப்பிளையார்
தொண்டைமானார் Etc...

உள்ளடங்கிய கிராமங்கள் :

குன்னான்டார்கோவில்
வத்தனாக்கோட்டை
அங்குராப்பட்டி
கூகூர்
பாலார்பட்டி
முள்ளத்திப்பட்டி
இராக்காத்தான்பட்டி
தெம்மாவூர் Etc...

வடமலை ,தென்மலை நாட்டுக்கள்ளர்கள் இணைந்த பொதுக்கூட்டம் அண்டகுலத்திலும் நடைபெறும். இவ்விரண்டு நாட்டு கள்ளர்களால் ஏற்படும் இழப்பிற்கு பொதுக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டு அக்காலத்தில் இழப்பீடு திருச்சியில் இருந்து வருவோர்களால் நிச்சயிக்கப்படும்.


நகைகள் திருமணம் ஆன பின் திருச்சி கள்ளர்களால் இந்நாட்டு கள்ளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்.



கிபி-1194- குலோத்துங்க சோழ கிடாரத்தரையராக குறிக்கப்பட்டுள்ள குன்றியூர்நாட்டு அரையர். கிடாரத்தரையர் என்பது இன்றும் கள்ளர் பட்டமாக உள்ளது.

(PSI ,139 திருவேங்கைவாசல், 141&159 பின்னங்குடி)

விசங்கி நாட்டு கள்ளர் நாடுகளின் ஒப்பந்தம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட பனங்காடு என அழைக்கப்பட்ட குன்னண்டார்கோயில் தமிழகத்தின் மிக பழமையான கோயில்களுள் ஒன்றாகும். குன்னண்டார்கோயிலை மையமாகக் கொண்ட கள்ளர் நாடுகள் வடமலை நாடு மற்றும் தென்மலை நாடு என அழைக்கப்படுகிறது. இவை விசங்கி நாட்டின் உள் நாடுகளாகும்.

கிபி 1262 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் காலத்தில் இருமலை  நாட்டு அரையர்களும் ஒர் உடன்படிக்கை செய்து கொண்டதை குன்னண்டார்கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

" ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரப்பாண்டியதேவற்கு ஆண்டு பன்னிரண்டாவது  கார்த்திகை மாதம் செயசிங்ககுலவளநாட்டு வடபனங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றக்குடி உடைய நாயனார் கோயில் தானத்து முதலிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களோம் எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது நாங்கள் பகைக்கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல் ஆன ஊர்கள் வழிநடைக்குடிமக்கள் இடைக்குடிமக்கள் இவர்களை அழிவு செய்ய கடவொமல்லாகவும் ஒருவன் அழிவு செய்யின் நூறு பணம் தண்டம் வைக்கவும் ஒரு ஊராக அழிவு செய்யின் ஐநூறு பணம் வைக்க கடவோம் இப்படி செய்யுமிடத்து வெட்டியும் குத்தியும் செத்தும் நொக்க கடவர்களாகவும்" என கல்வெட்டு முடிகிறது.

கிபி 1262 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் குன்னண்டார் கோயில் முதலிகளுக்கு வடமலை மற்றும் தென்மலை நாட்டை சேர்ந்த கள்ளர் அரசர்கள்( அரையர்கள்)  தங்களுக்குள் முடிவு செய்து ஒர் உறுதிபாடு அளித்துள்ளனர்.

அதன்படி இரண்டு நாட்டு அரையர்களும் தங்களுக்குள் பகையால் மோதிக் கொள்ளும்போது தங்களது காவலில் உள்ள கிராமங்கள், வழிநடையாக செல்லும் மக்கள்,  இடைகுடி மக்கள் முதலோனோர்க்கு எந்த அழிவும் ஏற்படாதவாறு சண்டையிடுவோம் என்றும், சண்டையின் போது தனி ஒருவனால் ஏதேனும் அழிவு ஏற்பட்டால் அவர் நூறு பணத்தை அபராதமாக செலுத்தவும், ஒரு ஊரை சேர்ந்த கள்ளர்களால் அழிவு ஏற்பட்டால் ஐநூறு பணம் அபராதமாக செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை கள்ளர் அரையர்கள் " தங்களுக்குள் வெட்டியும் குத்தியும் உயிரிழக்கும் நேரத்திலும்" கடைபிடிப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

விசங்கி நாட்டின் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர் அரையர்களின் காவலில் ஊர்கள் இருந்ததையும் இவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்ததையும் இக்கல்வெட்டு நமக்கு உரைக்கிறது.  தங்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என கள்ளர்கள் கூடி ஒப்பந்தம் செய்து வெளியிட்டுள்ளனர்.  தூய போர்க்குடியில் பிறந்தவர்களுக்கே இத்தகைய ஒழுக்கங்களை பின்பற்ற இயலும்.

வடமலைநாட்டு கள்ளர் அம்பலக்காரர்களான  நரங்கியர்களும்,  தென்மலை நாட்டு கள்ளர் அம்பலக்காரர்களான காடவராயர்களும் குன்னண்டார் கோயிலில் முதன்மை பெறுகின்றனர்.

வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்களின் நாட்டு கூட்டங்கள் குன்னண்டார் கோயிலில் நடந்ததாக 1920 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று குறிப்பு கூறுகிறது.
 
சோழங்கதேவர்,  சோழத்திரியர் முதலான கள்ளர் குலத்தினர் இன்றும் விசங்கி நாட்டு பகுதியில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.  சோழங்கதேவர் மரபினர் நார்த்தாமலை மாரியம்மன் கோயிலில் முதல் மரியாதை பெறும் உயர்ந்த நிலையில் இன்றும் உள்ளனர்.

கிபி 1056 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராசேந்திர சோழன் கால நார்த்தாமலை கல்வெட்டில் , இரண்டாம் இராசேந்திர சோழனின் சிற்றப்பன்மார்களில் மதுராந்தகன் என்பவர் "சோழகங்கன்" எனும் புனைப்பெயரை பெற்று இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது வழிவந்த கள்ளர் மரபினர் பிற்காலத்தில் சோழகங்கதேவர் எனும் பட்டத்தோடு இப்பகுதியில் வாழ்ந்து வந்ததை மேலே குறிப்பிடப்பட்ட செப்பேடு உரைக்கிறது.(IPS 112)

பெருங்களூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய கால கல்வெட்டில் வடமலை நாட்டு அரையர்களில் சோழகத்தேவர் எனும் சோழ குல அரையர் குறிப்பிடப்பட்டுள்ளார்(IPS 765). வடமலை நாடு கள்ளர் நாடான விசங்கி நாட்டின் ஒரு பிரிவாகும். 



 

தற்பொழுது (குன்னான்டார்கோவில்) வடமலைநாடு பெருவயல்நாட்டிற்கும் அரையராக குன்றியூர்நாட்டு அரையர் விளங்கியுள்ளார். கி.பி.1867 வரை குன்றியூர்நாடு அதன் நாட்டு அமைப்பால் ஆளப்பட்டுவந்துள்ளது.

தற்பொழுதும் வடமலைநாட்டிற்கு அம்பலக்காரராக தெம்மாவூரில் வாழும் நரங்கியர் பட்டந்தாங்கிய கள்ளரே விளங்குகிறார். வடமலைநாடு + தென்மலைநாடு =
இருமலைநாடு என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.


பிறமலை நாட்டுப்பகுதியில் கொக்குளநாட்டின் ஆதி பாட்டன் நரங்கித்தேவர் என்பது குறிப்படத்தக்கது.

நரங்கியர் பட்டம் பூண்ட கள்ளரின் பெயரிலே தற்பொழுதும் இயங்கும் தெம்மாவூர் ஊராட்சிமன்ற அலுவலகம்
.