செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கள்ளரின் கடற்படை

 

அருமொழிதேவ பரிவாரத்தார் வீரகள்ளர் ( கல்வெட்டு எண் ARE 41900 of 1929-30 ) சோழ கப்பற்படை


தென் கடல்கடந்து தெற்க்காசிய நாடுகளை வென்றவர்கள் மும்முடிச் சோழமன்னர்கள் கப்பற்படை பிரிவில் கள்ளர்கள் உண்டா என்றால், அதற்கு ஆதாரமாக களப்படையும், கப்பற்படையுமாக போரிட்டு பல்வேறு நாடுகளை வென்ற கள்ளர் படைபற்றின் தலைவர்களின் விருது பெயர்களுடன் இன்றும் விளங்கி வருகிறது. கள்ளர்களுக்கும் கடலுக்கும் தொடர்பு 2000  ஆண்டுக்கு முன்பே உள்ளன.

கள்ளர்களின் வங்கார், நாயக்கர், செட்டி, பட்டங்கட்டியார், சீனத்தரையர் போன்ற பட்டங்கள் கடலின் தொடர்பால் ஏற்பட்ட பட்டங்கள் ஆகும்.

பாண்டிய மன்னர்களின் வணிகத்தைப் பற்றி பண்டைய யாழ்பாண புத்தகத்தில் கிபி 1   ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 2000  ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கும், கிரேக்கர்கள், சீனர்களுக்கும் இடையேயான வணிகம் குறித்து தாலமி அவர்கள் சற்று விரிவாக குறிப்புகள் கொடுத்துள்ளார்.


அதில் பாண்டிய மன்னன் கள்ளர் பெருக்குடி மக்களுடன் முத்து எடுத்தல், மீன் பிடி தொழில் செய்ததாக நேரில் பார்த்த periplus புத்தகத்தின் ஆசிரியரும், கிரேக்க தாலமியும் குறித்துள்ளார்கள். இந்த கருத்துக்கு வழுசேர்க்கும் விதமாக ஏழுகோட்டை நாட்டில் உள்ள அனுமந்தகுடியில் முத்து வணிகம் நடைபெற்றதற்கன ஆதாரம் கிடைத்ததாக மானுட மற்றும் வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் தனது நூலில் விளக்கியுள்ளார்.

மேலும் முத்தூற்றுகூற்றம் தான் பாண்டியர்களின் முத்து தொழில் மற்றும் வாணிகத்திற்குகான நகராக இருந்துள்ளது. இந்த முத்தூற்கூற்றம் என்பது இன்று முத்து நாடு, கப்பலூர் நாடு என்ற கள்ளர் நாடுகளாக உள்ளது, மேலும் இந்த கள்ளர் நாடுகள் கடற்கரை வரை பரவியுள்ளது. இந்த முத்தூற்றுகூற்றத்தின் கடல் பகுதிகள் முழுவதும் பாண்டிய மன்னர்கள் அழியும் வரை, பாண்டிய தளபதி கப்பலூர் அம்பலம் கருமாணிக்க தொண்டைமானிடம் தான் இருந்தது. பிற்காலத்தில் அன்னிய படையெடுப்பில் பாண்டியர் அழிவிற்கு பின்பு கை நழுவிபோனது. மேலும் இன்றும் இராமேஸ்வரம், இராமநாதபுரம் உள்ள மீனவர்கள் தங்களது மீனவ தலைவர்களை பட்டங்கட்டியார் என்று அழைக்கின்றனர்.

அதேபோல் நாகப்பட்டின கடற்கரை மாவட்டத்தில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் இன்றும் கள்ளர் பெருங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா குமிளங்காடு, வளவம்பட்டி, புத்தூர் பகுதியில் பட்டங்கட்டியார் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பாவூர்சத்திரம் வெள்ளி மலை கோயிலில், பட்டு பரிவட்டம் மரியாதை இன்றும் நடைபெற்று வருகிறது. 

கள்ளர் நெல்லையில் இன்றும் பட்டங்கட்டியார் என்ற ஜாதியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தாய்வழி மரபை போற்றுகிறார்கள். பிறமலைக்கள்ளர்கள் உப்பை சாட்சியாக வைத்தே திருமணம் செய்கிறார்கள்.  உப்பு பிறமலை கள்ளர் சடங்குகளில் முக்கியமான ஒன்று. புதுமனை புகும் போதும் உறவுகள் உப்பும் மஞ்சள் இவற்றை முக்கியமாகத் தருகின்றனர். உப்பை சாட்சியாக மேல் நின்று திருமணம் செய்யும் முறை புதுக்கோட்டை கள்ளரும் கடைபிடித்துள்ளனர்.

கிபி 1881ல் மக்கட்தொகை கணக்கெடுப்பில் இடுவகயல் கள்ளர்கள் என்ற பரதவ சாயல் கொண்ட கள்ளர் பிரிவு இருந்துள்ளது.