திங்கள், 19 ஜூன், 2023

ஆங்கிலேயருக்கு அஞ்சலகம் திறக்க அனுமதி மறுத்த புதுக்கோட்டை மன்னர்:-





இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது புதுக்கோட்டை சமஸ்தானம் தனி நாடாக விளங்கியது. ஆங்கிலேய அரசாங்கத்தின் சட்டங்கள் புதுக்கோட்டையில் நடைமுறையில் வரவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தனி சட்ட திட்டங்கள் இருந்தன. புதுக்கோட்டை மன்னரின் அதிகாரத்தை கூறும் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை காணலாம்:-

" 1838 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முதன்முதலாக அஞ்சலகம் தொடங்கப்பட்டது. 1866 ல் ஆங்கிலேய அரசின் சார்பாக புதுக்கோட்டையில் அஞ்சலகம் தொடங்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் தனது சமஸ்தானத்தில் ஆங்கிலேய அரசு சார்பாக அஞ்சலகம் திறப்பது, தனது அதிகாரத்தை குறைக்கும் செயல் என எண்ணிய மன்னர் ராமச்சந்திர தொண்டைமான், ஆங்கிலேய அரசின் அஞ்சலகத்திற்கு தடை விதித்தார். ஆங்கிலேய அரசின் சார்பாக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனால் மன்னரோ ' தனது சமஸ்தானத்தில் ஆங்கிலேய அரசின் செலவில் அஞ்சலகம் அமைப்பது சமஸ்தான விதிகளுக்கு எதிரானது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனையடுத்து பிரிட்டீஷ் அரசு அஞ்சலகம் திறக்கும் திட்டத்தை கைவிட்டது. 1873ல் மீண்டும், அஞ்சலகம் திறக்க முயற்சித்தது. ஆனால் மன்னரின் அனுமதி கிடைக்காததால் அஞ்சலகம் தொடங்கும் திட்டத்தை மீண்டும் கைவிட்டனர்.





புதுக்கோட்டை சமஸ்தானத்தில், தர்பாரின் சட்டதிட்டங்களே செயல்பாட்டில் இருந்ததையும், பிரிட்டீசாரின் சட்டதிட்டங்கள் சமஸ்தானத்தில் செல்லுபடியாகவில்லை என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரிட்டீஷ் அரசாங்கித்திற்கு செலுத்தவில்லை என்பது பிரிட்டீசாரின் அறிக்கை மூலம் உறுதியாகிறது. ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்பட்ட சமஸ்தானமாக இருந்தாலும் , சமஸ்தானத்தின் உள் விவகாரங்களில் மன்னர் முழு சுதந்திரத்துடன் விளங்கியுள்ளார் 

--Manual of pudukkottai state vol 1 ---

** சியாம் சுந்தர் சம்பட்டியார் **