புதன், 15 மார்ச், 2023

குளித்தலை சோழகர்


குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. கடம்பவனம் எனும் சிற்றூர் "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. அன்னவாயில் கூற்றம் ஆகும்.

சோழ பேரரசில் "மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக குளித்தலை மேட்டுமருதூர் இருந்துள்ளது. இங்குள் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வரர்' கோயில் கி.பி.996ல் முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு, கோயில் கல்வெட்டில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்படுகிறார்.  இந்த புகழ்பெற்ற  ஊரில் குளித்தலையில் சோழகர் குடும்பம் என்றால் பிரசித்தி பெற்றதாகும். 



குளித்தலையில் 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற அச்சாணியாக செயல்பட்ட கள்ளர் மரபினரின் சோழகர் குடும்பம்: 

கே.ஆர். வையாபுரி சோழகர்

நான் 1957-ம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்டபோது; முதலில் என்னை வரவேற்று வாழ்த்தியவர்; அந்த ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான வையாபுரிச் சோழகர் - அவர் பழுத்த காங்கிரஸ்காரர் - அவர் மூத்த மகன் திராவிடர் கழகம் - அவருக்கு அடுத்த மகன் தி.மு.க. - அவர்களுடைய பிள்ளைகுட்டிகள், பேரன், பேத்திகள் மொத்தம் குடும்பத்தினர் பதினைந்து பேர் இருக்கும். ஆளுக்கொரு கட்சி; அப்படியும் ஒரு குடும்பம் - எல்லாப் பிள்ளைகட்கும் தி.மு.க. பற்று என்பதாக இப்படியும் ஒரு குடும்பம். :- கலைஞர் கருணாநிதி


அமரர் திரு. M.M. சந்திரகாசன் காங்கேயர் . இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள் ஆவார்.


குளித்தலையில் சோழகர் தெரு என்று தனியாகவே உள்ளது.