செல்லூர் ராஜூ தேவர் கொக்குளம் ஆதிசிவன் கோயிலை குலக்கோயிலாக கும்பிடுபவர். 7 October 1952 வைரவி அம்மாபட்டியில் பிறந்தார். பெற்றோர் K. ஒச்சம்மாள் , காமாட்சி தேவர் . மனைவி ஆர்.ஜெயந்தி, மகன் R தமிழ்மணி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். 2011 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து 2016 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.