வெள்ளி, 17 ஜூலை, 2020

ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்



ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள் அக்டோபர் 3 , 1945 இல்  அய்யம்பேட்டையில் பிறந்தார்.

ஓய்வுபெற்ற மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆராய்ச்சி செய்து வருகிறார். Life member INTACH,Archeological society of Tamil நாடு மற்றும் Pricipal,Star Lions Matric Hr Sec School, அய்யம்பேட்டை.

தமிழ்நாட்டின் தொல்பொருள் சமூகம், பத்திரிகை ஊடகங்களில் கண்டுபிடிப்புகள் மற்றும் கோயில்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவது, 

கலாச்சாரங்கள், மரபுகள், நமது கோயில் கலைகள் மற்றும் கட்டிடக்கலைகளை பாதுகாத்தல், கோவில்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவரது நோக்கம். 



ஐயா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 2019 ஆண்டுக்கான இராஜராஜன் விருது, சதய விழா(06.11.2019) அன்று மாலை 6.00 மணியளவில் தஞ்சை பெரிய கோவிலில் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற நடைபயணம். 
தலைமை. தஞ்சை மராட்டியர் மூத்த இளவரசர் ஶ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே.



தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி 1966-69 ...ஆண்டு விழா ..சாம்ராட் அசோகன் நாடகம்....Fine Arts Association... Secretary and Director of that drama....ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார்.



ஐயாவின் பழையநினைவுகள்

தஞ்சாவூர் பிளேக் உயர் நிலை பள்ளியில் first form ( ஆறாம் வகுப்பு) படித்து கொண்டு இருந்த நாட்கள். உணவு இடை வேளை, பள்ளிக்குப் பக்கத்தில் தஞ்சாவூர் பர்மனெனட் பேங்க். பேங்க் வாசலில் மாலையும் கையுமாக ஒரே கூட்டம். யாரோ முக்கியமானவங்க வருவாங்க போல..யாரு வராங்க. பார்த்து விட்டு போவோமே. வீடும் சாப்பாடும் மறந்து போச்சு....  வேடிக்கை பார்க்கிற புத்தி......கூட்டத்தை விட்டு தள்ளி நின்றேன்...திடீரென ஒரே பரபரப்பு..ஒரு பிளஷர் கார் .....தொடர்ந்து நாலைந்து கார்...முதலில் வந்த காரில் இருந்து ஆஜானுபாகுவான மனிதர் ,சிறுவர்கள் நின்று கொண்டு இருந்த பக்கமாக இறங்குகிறார்...மாலையெல்லாம் அந்த பக்கம்.... நான் முன்னால் ஓடிப்போய் நிற்கிறேன்.. கையை காட்டி கிட்ட வான்னு சிரித்து கொண்டே சைகையால் கூப்பிடுகிறார்.....இன்னும் பக்கமா போனேன்.. பாசமாக தோளில் கைபோட்டு தலையை கோதிக் கொன்டே "  எந்த ஸ்கூல்....என்ன கிளாஸ் படிக்கிற.....சாப்பிட்டியா....நல்லா படீன்னேன்"என்று விசாரித்தப் பின்னர் தான் மாலை மரியாதை வரவேற்பு எல்லாம்.....அவர்தான் அந்நாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். மாலை மரியாதையை விட மாணவர்களே அம் மாமனிதருக்கு VVIPs.....அவர்தான் காமராஜர்.