இராஜராஜ வளநாட்டுச் செங்காட்டு நாட்டு இரண்டு வகையில் அரையர்கள் இந்தநாட்டுக் குளக்குடி (களக்குடி)க் கள்ளர் பற்றில் சிவப்பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கியுள்ளனர் (425). செங்காட்டு நாட்டில் வாழ்ந்த இரு கள்ளர் பிரிவுகளின் தலைவர்களான அரையர்களே இங்கு இரண்டு வகையில் அரையர்கள் எனக் கூறப்படுவதாகப் பொருள் கொள்ளலாம். கள்ளரின் கூட்டுரிமையான கள்ளர்பற்றில் இக்கள்ளர் தலைவர்களால் பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. 
பல்லவராயர், தொண்டைமான் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.
- குழந்தைவிநாயகர் கோட்டை
 - கோவிலூர்
 - நெம்மக்கோட்டை
 - புதுக்கோட்டைவிடுதி
 - கரும்பிரான்கோட்டை
 - பாத்தம்பட்டி
 - மேலக்கோட்டை
 - குப்பகுடி
 
என எட்டு ஊர்கள் சேர்ந்ததே செங்காட்டு நாடு என்ற செங்கவளநாடு.
கிழக்கு  சேதுவாசத்திரம் கடற்கரை  வரை பறந்து விரிந்த நாடு.
முதல் ஊர் குழந்தைவிநாயகர் கோட்டை ஆகும். செங்கவள கள்ளர் நாட்டில் அம்பலமுறை இல்லை,  நாட்டிற்கு என்று தனி அம்பலம் கிடையாது தலைவர் மட்டுமே இரண்டு வருடத்திற்கு ஒரு முறை  ஒவ்வொரு ஊரில் இருந்து வரிசை படி தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.
செங்காட்டு நாடு கள்ளர் பட்டங்கள்:
- வேம்ப(ர்)ன்
 - காரியார்
 - பெத்தாச்சி
 - களரி
 - மணியன்
 - கிழண்டன்
 - வாண்டையார்
 - நரியன்
 - ஆவாண்டையார்
 - சரபோஜி
 - சாத்தனார்
 - அச்சம்பூரியார்
 - ஆரிச்சுத்தியார்
 - ராங்கியார்
 - தொண்டைமான்
 
மற்றும் பல பட்டங்கள் உள்ளன
கோவிலூர் 
செங்கவள கள்ளர் நாடு கோவிலூர் சிவன் கோயில் இராஜராஜன் சோழனால் கட்டப்பட்டது.
கோவிலூரின் பழம்பெயர் குலக்குடி என வழங்கப்பெற்றுள்ளது. கிபி-1288 ம் ஆண்டுக்குரிய பழங்கால கல்வெட்டு கோவிலூரில் உள்ள பாலபுரீஸ்வரர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
செங்காட்டுநாட்டு அரையர்கள், அருகில் உள்ள நாட்டு அரையர்கள் குறிப்பாக கலசமங்கலம் நாட்டு கள்ளர்குல அரையர்களாலும்  இக்கோவில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியின் கீழ் சிலகாலமும், வைத்தூர்/பெருங்களூர் பல்லவராயர்கள் ஆட்சியின் கீழ் நெடுங்காலம் கோவிலூர் ஆளப்பட்டுள்ளது.
பாலபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கிபி-1352 ஆம் ஆண்டு கல்வெட்டொன்றில் அருகில் உள்ள கள்ளர்நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு கலவரங்களை குறைக்க விஜயநகர மன்னரின் தளபதி வீர சாவன்ன உடையார் தலைமையில் அரையர்கள்/குறுநில மன்னர்களின் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோவிலுரில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில். செங்கவள நாட்டார்களின் முக்கிய கோவில், இப்பொழுது சிதிலமடைந்து பார்க்கவே மிகவும் வருந்தமாக உள்ளது.
கோவிலூர் மாரியம்மன் 
செங்கவள நாடு கோவிலூர் தேரோட்டம் 
செங்கவள நாட்டு ஜல்லிக்கட்டு. கோவிலூர் ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு.
செங்குட்டுவன் மழவராயர்
குழந்தைவிநாயகர் கோட்டை:
அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயம், நெம்மக்கோட்டை
நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் தோரண நுழைவுவாயில் மகா கும்பாபிஷேகவிழா
சித்திவிநாயகர் உற்சவர் ஊர்வலம்
நெம்மக்கோட்டை வினாயகர் கோவில் தேர் திருவிழா
நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் தோரண நுழைவுவாயில் மகா கும்பாபிஷேகவிழா
சித்திவிநாயகர் உற்சவர் ஊர்வலம்
நெம்மக்கோட்டை வினாயகர் கோவில் தேர் திருவிழா
புதுக்கோட்டைவிடுதி :
கரும்பிரான்கோட்டை :
பாத்தம்பட்டி :
மேலக்கோட்டை :
குப்பகுடி :
தாடி முனிஸ்வரர்
குப்பகுடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் 
உப்பிலிக்குடி ஊரில் இருந்து 300 வருடங்களுக்கு முன்னாள் பெத்தாச்சி பட்டம் தாங்கிய கள்ளர்கள் ஆலங்குடி தாலுக்கா புதுக்கோட்டை விடுதி செங்கவள நாட்டில் வசிக்கிறார்கள். பெத்தாச்சி பட்டத்தார் குல தெய்வம் ஸ்ரீகாத்தாயி அம்மன் ஆகும்.
நன்றி:
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் குமார் கூழாக்கியார்
திரு. கார்த்தி வேம்பன்
நன்றி:
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் குமார் கூழாக்கியார்
திரு. கார்த்தி வேம்பன்




























































