புதன், 24 ஜூன், 2020

தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயர்




திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு,
பூதலூர், செங்கிப்பட்டி, வல்லம், திருவெறும்பூர், கல்லனை, லால்குடி, தஞ்சாவூர் வரை உள்ள இளைஞர்களை தமிழர் விளையாட்டாம் கபாடி போட்டியில் ஈடுபடுத்தி அவர்களை நல்வழிப்படுத்தியவர் தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயர்.

இவர் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடி கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலாளராக பணியாற்றிய பொழுது குக்கிராமங்கள் வரை கபாடி விளையாட்டை ஒழுங்குபடுத்தியவர்.

ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாடு காவல்துறையிலும், இந்திய இராணுவத்திலும் இவரால் இன்று பணியாற்றுகின்றனர்.

இவர் பிறந்த ஊரான திருச்சென்னம்பூண்டியில் 2016இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினராக சேரலாதன் சோழகர், கோபு போன்ற தலைசிறைந்த கபாடி விளையாட்டு வீரர்கள். இந்திய அணியிலும், இரயில்வே மற்றும் Pro Kabaddi போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பதே இதற்கு உதாரணம்.

இவர், திருக்காட்டுப்பள்ளியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர், கல்வித்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். 



பேராசிரியர் த.செயராமன் ( தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ) அவர்கள் கூறுவது.

எங்கள் நினைவில் வாழும் திருக்காட்டுப்பள்ளி தியாக. பஞ்சாபிகேசன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகின்றோம்.

திரு. தியாக. சுந்தரமூர்த்தி அவர்களின் சகோதரர் திரு.தியாக. பஞ்சாபிகேசன் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தார், 2014 -இல் பூம்புகார் முதல் கல்லணை வரை மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு முன்னெடுத்த காவிரிபடுகைப் பாதுகாப்பு இரண்டாம் கட்ட பரப்புரைப் நிறைவு நிகழ்ச்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுடன், அனைவருக்கும் உணவளிக்கவும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.


சில ஆண்டுகளில், திரு.பஞ்சாபிகேசன் மறைவு அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்தது. சகோதரர் திரு.தியாக.பஞ்சாபிகேசன் அவர்களுக்கு, அவருடைய 5-ம் ஆண்டு நினைவு நாளில் (20.06.2020) எங்கள் நினைவஞ்சலியை அளவற்ற துயரத்துடன் பதிவு செய்கின்றோம்.

மக்களுக்கான மோண்டு செய்பவர்கள், நீதிக்கு போராடுபவர்கள், அநீதி கண்டு எதிர்பவர்களை அதிகார மையங்கள் ரவுடி, தீவரவதிகள் என்று முத்தரைக்குத்தி ஒழிக்கும். அப்படி
இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவுகள் செய்துள்ளார்கள். 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இரவு, திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில், காரில் வந்த கும்பல் ஒன்று தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயரை கொலை செய்துவிட்டுத் தப்பியது. 

கொலை செய்தவன், இவரின் ஆதரவுடன், திருசென்னம்பூண்டி பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றாவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் திருட்டு விவகாரத்தை தட்டி கேட்ட பஞ்சாபகேசன் காங்கேயர் 26.05.2015 ல் படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, வியாபாரிகள் திருக்காட்டுப் பள்ளியில் கடையடைப்பு நடத்தினர். 

தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயரை கொலை செய்த கொலைகாரர்கள், 2017 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செயல்பட்டதாக செய்தித்தாள்களில் வந்ததை, ஊர் மக்கள் கொண்டாடினர்.

போலீஸார், “பஞ்சாபகேசன் இறந்தபிறகு, ‘என் கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் செத்தால்தான், தாலியைக் கழற்றுவேன்’ எனச் சுகந்தி வைராக்கியத்துடன் இருந்தார்" என்று கூறி தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயரை கொலை செய்த கொலைகாரர்களை அழித்த மர்ம நபர்களில் ஒருவராக குற்றம் சாட்டியுள்ளாகள்.

தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயர் இறந்தபின், சுகந்தி வைராக்கியத்துடன் இருந்தது உண்மைதான். ஆனால், கொலை நடந்த இடத்தில் அவர் இல்லை. ஆசிரியரான அவரையும் அப்பாவிகளையும் இந்தக் கொலையில் சேர்த்துள்ளனர்” என்கிறார்கள் ஊர்மக்கள்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்’ எனப் தியாக. பஞ்சாபிகேசன் காங்கேயர் குடும்பத்தார் கூறுகிறார்கள்.









15.12.2019 ல் மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரம் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு

25.11.2019 ல் கரூர் மாவட்டம் பில்லூர் மேட்ச்சில் 3 வது பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு.

18.11.2019 ல் மதுரை மாவட்டம் சோழவந்தான் மேட்சில் இரண்டாம் பரிசு பெற்ற பஞ்சாபிகேசன், திருக்காட்டுப்பள்ளி கபடி குழு

02.09.2019 ல் தஞ்சாவூர் மேட்ச்சில் இரண்டாம் பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி

08.07.2019 ல் பாண்டிச்சேரி மேட்ச்சில் 4வது பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு

30.06.2019 ல் சிவகங்கை மாவட்டம் ஏரியூர் மேட்ச்சில் 4 வது பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி

06.05.2019 ல் மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் மேட்ச்சில் 3வது பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு

28.04.2019 ல் மதுரை மாவட்டம் பதினெட்டாங்குடி மேட்ச்சில் 3வது பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு

27.04.2019 ல் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி கபடி குழு


03.12.2018 ல் சிவகங்கை(மாவட்டம்) வடுகன்குளம் கிராமத்தில் நடைப்பெற்ற கபாடி போட்டியில் 102 அணிகள் கலந்து கொண்டன அதில் தியாகி.பஞ்சாபிகேசன் மெமோரியல் கிளப் திருக்காட்டுப்பள்ளி அணி மூன்றாம் பரிசு பெற்றனர்.

இதைபோல் பல சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மாவட்ட கபாடி சங்க இணை செயலாளர் பஞ்சாபிகேசன் காங்கேயர் ஆகியோர் முன்னிலையில் 29.10. 2014 ல் திருக்காட்டுப்பள்ளியில் உடல் ஆரோக்கியத்திற்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 

திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டத்தில் சுமார் 1500 கிராமப்புற மாணவ –மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 10 வயதிற்குட்பட்டோர் 3 கி.மீ. ஓட்டத்திலும், 15 வயதிற்குட்பட்டோர் 5 கி.மீ. ஓட்டத்திலும், 15 வயதிற்கு மேற்பட்டோர் 10 கி.மீ. ஓட்டத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வெற்றி கோப்பைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.