புதன், 17 ஜூன், 2020

குச்சிராயர்கள் மரபினர்





குச்சிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் இன்று சோழ தேசத்தில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இடையிருப்பு, உடையார் கோயில் , சாக்கோட்டை, ஒரத்தநாடு, புலியக்குடி, அம்மாப்பேட்டை ,மாரியம்மன் கோயில், சாலியமங்கலம், சூலமங்கலம், ரிசியூர் கொரடாச்சேரி உள்ளிட்ட பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

குச்சிராயர் என்பது கள்ளர் பட்டப்பெயர்களில் ஒன்று என கிபி 1923ல் வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் பக்கம் 103 ல் குறிப்பிட்டுள்ளார். 

குச்சிராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்து வருவதாக மத்திய அரசின் Central institute of indian languages வெளியிட்ட கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு பார்வை எனும் நூலில் பக்கம் 96ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை மண்ணின் வட்டார இலக்கிய எழுத்தாளர் சி.எம்.முத்து குச்சிராயர்



சக்திவேல் குச்சிராயர்



பேட்டை, அண்ணாத்தை படங்களில் நிர்வாக தயாரிப்பு – R . ரமேஷ் குச்சிராயர்





கிபி 1048 ம் ஆண்டை சேர்ந்த ராஜாதிராஜ தேவரின் புதுக்கோட்டை கல்வெட்டு(IPS 108), சோழ மன்னர்களின் போர் வெற்றியை குறிக்கும் வகையில் , அவர்கள் பூண்டிருந்த பல பட்டங்களை பட்டியலிடுகிறது. 

கன்னக்குச்சி காவலன்:- 

இக்கல்வெட்டில் " கன்னக்குச்சி காவலன்" என சோழ மன்னர் போற்றப்படுகின்றார். கன்னக்குச்சி எனும் ஊர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள kannauj எனப்படும் இடமாகும். இவ்வூர் பழங்காலத்தில் Kanya kubja என அழைக்கப்பட்டுள்ளது. 













ராஜேந்திர சோழனின் படையெடுப்பில் முதன்மை தளபதியாக செயல்பட்ட ராஜாதிராஜ தேவர் வட இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னக்குச்சி எனும் நகரை கைப்பற்றி சோழ தேசத்துடன் இணைத்துள்ளனர். இதனால் கன்னக்குச்சி காவலன் எனும் பட்டமும் பூண்டுள்ளனர். 


 



ராஜாதிராஜ தேவரின் காலத்திய (172/1894) மற்றொரு கல்வெட்டு , காந்தளூர் சாலை வெற்றியை தொடர்ந்து ராஜாதிராஜன் ஈழத்தின் மீது படையெடுத்தார் என்றும், இலங்கை மன்னன், மாலைசூடிய வல்லவன் மற்றும் கன்னக்குச்சியின் மன்னன் ஆகியோரது தலைகளை சாய்த்தார் என்றும் கூறுகிறது.

சோழ கன்னக் குச்சிராயர்:- 

கிபி 1056ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு(IPS 112)ல், இரண்டாம் ராஜேந்திர சோழனின் போர் வெற்றிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் சோழ மன்னரின் உடன்பிறந்தவர்கள் பெற்றிருந்த பட்டங்களும் தரப்பட்டுள்ளது. அவற்றில் " புவியாளும் சோழ கன்னக் குச்சிராசன்" என கன்னக்குச்சி படையெடுப்பு தொடர்பான புகழ்மொழி தரப்பட்டுள்ளது. 





தமிழ்ச் சுவடிகளின்  நடராச குச்சிராயர் விளக்கம 






சோழப் பேரரசர் ராசாதிராசன் மேற்கொண்ட படையெடுப்புகளில் பங்கு கொண்டு வடக்கில் உத்தர பிரதேசம் வரை சென்று கன்னக் குச்சி எனும் நகரை கைப்பற்றிய போர்ப்படை தளபதிகள் " குச்சிராயர்" எனும் புகழ்மொழியை பெற்று இன்றும் சோழப் பேரரசின் சாதனைகளுக்கு வாழ்வியல் சான்றாக வாழ்ந்து வருகின்றனர். சோழப்பேரரசின் உருவாக்கத்தில் குருதி சிந்திய குச்சிராயர்களின் வீரத்தை போற்றி வணங்குவோம்!



புவியாளும் சோழக் கன்ன குச்சிராயர்கள் புகழ் ஒங்குக!!!!!

தொகுப்பு:- சியாம் சுந்தர் சம்பட்டியார்