வெள்ளி, 5 ஜூன், 2020

காடுவெட்டியார் வரலாறு



இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் சென்னை துறைமுக கழகத்தில் உதவிக் கிடங்கு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பின்னர் அரசியல் மற்றும் சமுதாய பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

முக்குலத்தோர் சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார், தற்போது அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலாளராகவும், மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தின்  மாநில பொதுச் செயலாளராகவும், இராஜராஜன்  கல்வி பண்பாட்டுக் கழகத்தின் மாநில ஆலோசகராகவும் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

‘கள்ளர் இன முழக்கம்’ எனும் மாத இதழையும் நடத்தி வந்தார். பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார்.  ஏராளமான சமூக, அரசியல் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவருடைய மனைவி ராஜலெட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார். இவருடைய வளர்ப்பு மகன் சதாசிவம் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலாளர்  இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 06.05.2020 காலை அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83.