ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கடத்தூர் கள்ளர் கல்வெட்டு





உடுமலைப்பேட்டை - தாராபுரம் சாலையில், காரத்தொழுவு, கணியூர் கடந்து, 20 கி. மீ தொலைவில் இருக்கிறது கடத்தூர். உடுமலையில் இருந்து பேருந்து இயங்குகிறது.

இங்குள்ள கோயிலில் கள்ளர்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.

'பாண்டவர்கள் வனவாசம் போனப்போ, எங்க கிராமத்து வழியாத்தான் போயிருக்காங்க. அப்போ, அமராவதி கரையோரமா இருக்கிற இந்த மருத மர காட்டுல தங்கியிருக்காங்க. தான் மேய்ச்ச மாடுகளை, தருமன் கட்டி வைச்சிருந்த இடம்தான் இன்னைக்கு காரத்தொழுவு. இந்த மருத மரத்துக்குள்ள இருந்த சிவன், அர்ச்சுனனுக்கு காட்சி தந்ததால, எங்க சாமிக்கு பேரே அர்ச்சுனேஸ்வரர் தான்! பாண்டவர்கள் இந்த வழியா கடந்து போனதால, 'கடந்த ஊர்'ன்னு பேர்; இப்போ, இப்படி மாறிப் போச்சு!' - தங்கள் ஊரின் பெருமையை, கடத்தூர்வாசிகள் வெள்ளந்தியாய் சொல்வது கொள்ளை அழகு!

அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் இக்கிராமத்தை, தன் பசுமையால் மூடியிருக்கின்றன தென்னை மரங்கள். ஆற்றுப் பாசனத்தால் செழித்து நடக்கும் விவசாயம், இக்கிராம மக்களுக்கு பிரதான வருமானம்! இங்கிருக்கும் சோழர்கள் காலத்து கற்கோவில், தமிழர்களின் கலைத்திறமைக்கும், பழமையின் கம்பீரத்திற்கும் பிரமாண்டமான சாட்சி. கிராமத்து தேவதைகளுடன் சேர்ந்து உக்கிரமாய் அருள்பாலிக்கும் மருத காளியம்மனுக்கு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா எடுத்து சிறப்பிக்கிறது கடத்தூர்.

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்: கல்வெட்டில் அப்படிதான் இருக்கு.

கடத்தூர் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது இக்கோவில், பெரும்பாலும் சிவாலயங்கள் நீர்நிலையொட்டியே அமைந்திருக்கும், இக்கோவிலும் அமராவதி ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது.

சுமார் 750 வருடம் முன்பு கொங்கு விக்ரமசோழன் ஆட்சியில், திரிபுவனசிங்கன் எனும் அரசியல்தலைவர், "பிரமேகம்" எனும் நோய் நீங்கியதற்காக நிலம்தானம் அளித்துள்ளார்.

(சித்தமருத்துவ குறிப்பின்படி "மேகநோய்" என்றால் சிறுநீரகதொடர்பான நோய்கள் என அறியப்படுகிறது.மேலும் இருபதிற்கும் மேற்ப்பட்ட சிறுநீரக(மேக) நோய்கள் உள்ளதென சித்தமருத்துவ நிகண்டுகள் கூறுகிறது! இதில் பிரமேகம் என்பதனை நீரிழிவு நோய் என சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்)

மருத்துவர்களால் போக்கமுடியாத நோயினை இறைவன் போக்குவார் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது. தமிழகத்தில் மருந்தீஸ்வரர் என பெயரிடப்பட்ட சில கோவில்களும் உள்ளது. அப்பரின் குலைநோய் மருத்துவர்களால் நீக்கஇயலாது போய், பின் இறைவன் திருநீர்ரால் நீங்கியதனை இலக்கியத்தில் அறியலாம்.

கல்வெட்டு செய்தி:

கொங்குவிக்ரமசோழனின் ஆட்சியில், திரிபுவனசிங்கனுக்கு "பிரமேகம்"நோய்வந்து கடத்தூர் இறைவன் திருவருளால் நீங்குகிறது, இதனால் இறைவனின் இரவுவழிபாட்டிற்கோ அரிசிதானம் கொடுக்கிறான், இவ்வரிசி தொடர்ந்து கிடைக்க சில நிலங்களை தாரைவார்க்கிறான். இந்நிலம் உதயாதிச்ச சோழதேவன் என்பவன் துரோகியாய் மாறியதால், அவனிடமிருந்து பிடுங்கப்பட்ட அரசாங்க நிலம் ஆகும். இந்நிலத்திற்கான எல்லையும், வரிச்சலுகையும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த எல்லாஉரிமைகளையும் சேர்த்து, அரசின் ஆணைப்படி (திருமுகதிருவிள்ளம்) இறைவனுக்கு கொடுத்துள்ளார்.

மருந்தீஸ்வரர், என்ற கல்வெட்டு பெயர் இன்று மருவி, அர்ச்சுனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் "தென்திருமணஞ்சேரி" என Extra கதை சேர்க்கப்பட்டு, திருமணத்தடை நீக்கும் தலமாய் மாறிவிட்டது.




'..கடத்தூர் வெள்ளாளன் கள்ளன் பறையன் நரவீர கேரள சிலைசெட்டி இட்ட திருநிலை வாய்முகவனை உத்தரமும் திருகதவும் இட்டேன் ' ( சோழர் ,கிபி 1217,உடுமலைபேட்டை ,கடத்தூர் )


'..சாறுதை ஊரவரை நாவிட்டு விதனன் செய்த அளவில் இது ஒழிய வேறு கள்ளர்கள் இல்லையென்று என்று கூலி கொடுக்க வேண்டுகையில் ..' (முகமதியர் (கிபி 1320-1370),உடுமலைபேட்டை ,கடத்தூர்)



நீண்ட பிரகாரமுடைய இக்கோவிலிள் வீர ராஜேந்திர சோழதேவர், வீரசோழதேவர், விக்கரம சோழதேவரின் கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டுகளில் கள்ளரின் பட்டப் பெயர்களான தேவர் பட்டப் பெயர் மற்றும் பல்லவராயர், இருங்கோளர், விழுப்பரையர், கலிங்கராயர், தொண்டைமான், குருகுலராயன் பட்டம் உடையவர்களும், காணப்படுகின்றன. 
அவையானவை

1) அதிகாரம் செய்பவர்களில் சிங்கதேவன்

2)சாமந்தரில் தேவந் சோழநாத விலாடசிங்கதேவன்

3)அதிகாரம் செய்பவர்களில் பெருங்குடி வீரசோழ குருகுலராயன்

4) விக்ரமசோழ தேவர் (அரசன்) உரிமையரில் நாயகம் செய்பவர்களில் கண்டன் ராசராசித்த நாத முடி கொண்ட சோழப் பல்லவராயன்.

5)உடையான் சோமநாத தேவர்.

6)விக்ரம சோழ திரிபுவன சிங்கதேவன் எழுத்து.

7)வீரநாராயணத் தேவர் மகன்களில் ராஜாதிராஜதேவர்.

8)அகம்படியாரில் வீரசோழ அரங்கக் கூத்தன்.

9) மூத்தவாள் நாயகம் செய்பவர்களில் உலகலந்த தேவனான அலஞ்சியன் பல்லவராயன்.

10)வீரராஜேந்திரன் இருங்கோளன் எழுத்து.

விழுப்பரையன் எழுத்து.
கலிங்கராயன் எழுத்து.
தொண்டைமான் எழுத்து 


















கொழுமம் 


மேலும் வீர சோழனால் கட்டப்பட்ட கெழுமம் சோழீச்சுவர் கோவிளில் கையொப்பமிட்டோர் 

விடலத்தரையன்.
விழிஞத்தரையன்.
வேணாடுடையான்.
சேதிராயன்.
தொண்டமான்.
வீரநாராயண வீர சிங்க தேவன்.
விசையாலரையன்.
வைராதரயன்.
கச்சிராயன்.

கொழுமத்தில் இன்றும் வாழும் கள்ளர் குல பட்டங்கள்
மழவராயர் 
சோழகர்
சோழங்கதேவர்
நாட்டார்
கரைமீண்டார்
கொல்லந்துரையார்
சேதுராயர்
கொல்லத்தரையார்
வல்லத்தார்.
முனையதரையர்
களத்தில்வென்றார்.
அங்காளராயர்.

இவர்கள் தங்ளை சோழர்களின் பங்காளிகள் என்று சொல்லியிருக்கிறார்கள்.