ஞாயிறு, 11 மார்ச், 2018

மீசெங்கிள / கீழ்செங்கிளி கள்ளர் நாடு


மீசெங்கிள / கீழ்செங்கிளி கள்ளர் நாடு, கள்ளர் பெருங்குடியைச்சார்ந்த அம்பலக்காரர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

பாரிலை நாட்டார்கள் (Two Endogamous Kalla Clans (மீசெங்கிளிநாடு+கீழ்செங்கிளிநாடு):-

வீர ராஜேந்திர சோழ தேவர் (கிபி-1086-87) ஆட்சிக்காலத்தில் திருஆலத்துறை அகத்தீஸ்வரர் சிவாலயத்திற்கு மீ செங்கிளிநாட்டு "கள்ளக்குடி" தேவதான கிராமமாக அளிக்கப்பட்டு அதிலிருந்து கடமை வரியும், கிராமத்திலிருந்து 3 களம் நெல்லை ஒவ்வொரு மாவிற்கும் "திருக்கொட்டாரம்" அளவிற்கு பாசனவசதியுள்ள நஞ்சை நிலத்திலிருந்து ஆயமாக வருடத்திற்கு இரண்டு முறை வழங்க, சூரியனும், சந்திரனும் உள்ளவரை அளிக்க கள்ளர் குடியின் நாட்டார்கள் ஒத்திசைந்துள்ளனர்.



திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இரு மாவட்ட எல்லையிலுள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயத்தில் கி.பி. 800ல் தொடங்கி 1,600ஆம் ஆண்டு வரையுள்ள பல ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சாசனங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மூன்று சாசனங்கள் முழுமையாகவுள்ளன. கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் அரிய தமிழ்ப் பாடல்களிலுள்ள புள்ளி பெற்ற மெய்யெழுத்துகள் காணப்படுகின்றன.

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி பட்டம் புனைந்த ஆதித்த கரிகால் சோழனின் (இராஜராஜ சோழனின் அண்ணன்) 4ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 960ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சாசனத்தில், புதுக்குடி என்னும் அவ்வூரின் பழம்பெயர் “நாங்கூர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜேந்திர சோழனின் சாசனங்களும் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இவ்வூரின் பெயர் மீசெங்கிளி நாட்டுப் புதுக்குடி என குறிக்கப்பட்டுள்ளது. “மீசெங்கிளி நாடு,” தற்போதைய தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியாகும்.

திருக்குரங்காடுதுறை ஆழ்வார், திருக்குரங்காடுதுறை மகாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இக் கோயிலில் மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் விஸ்வேசரை எழுந்தருளுவித்து அவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு உடலாக விக்கிரமசோழவளநாட்டு, அண்டாட்டுக் கூற்றத்து இன்னம்பரான சோழகேரளநல்லூரில் விஸ்வேஸ்வரமயக்கல் என்று பேர் கூவப்பெற்ற மூன்றுவேலி நிலத்தை அளித்தவன் ஜெயசிங்க குலகாலவளநாட்டு மீசெங்கிளி நாட்டு ஆலங்குடையான் வேளான் பொன்னார் மேனியனான அனபாய விழுப்பரையன் ஆவன்.

இத்திருக்கோயிலின் திருநடை மாளிகைத் திருப்பணி எழுபத்தொன்பது வளநாட்டுப் பெரிய நாட்டாரும், பதினெண் விஷயத்தாரும் வரி வசூலித்துக்கட்டியதாகும்.