செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஆண்டாங்கோவில் காத்தையா வாயாடியார்

இரா. குப்புசாமி வாயாடியார் அவர்களும்  
உ. காத்தையா வாயாடியார் அவர்களும்


தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகிலுள்ள ஆண்டாக்கோயில் என்ற ஊரில் காத்தையா வாயாடியார் என்பவரின் மூதாதையர் களால் பேணிக் காக்கப்பட்ட ‘மனுநீதிச் சோழ மகாராசா நாடகம்’ பதிவு செய்யப்பட்டுள்ள ஓலைச் சுவடியொன்று இன்றும் உள்ளது. அந்தத் தமிழ் இசை நாடகம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அந்த ஊரில் 5 நாட்கள் இன்றைக்கும் நடிக்கப்பட்டுவருகிறது என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்

குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது. சொர்ணபுரீசுவரர் கோவில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.