“அண்ணா” என்ற புனைப்பெயர் கொண்ட தர்மராஜ் சேரலாதன் சோழகர் ஏப்ரல் 21, 1975 ஆம் ஆண்டு தஞ்சாவூர் , திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள திருச்சினம்பூண்டி கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரும் விவசாயத்தினையே, முதனமைத் தொழிலாக செய்து வருகிறார். சேரலாதனின் சகோதரர் டி. கோபுவும் புரோ கபடி லீக்கில் விளையாடியுள்ளார் மற்றும் சீசன் 6இல் தமிழ் தலைவாஸ் அணியின் களத் தடுப்பு வீரராக இருந்தார்.
2016இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினராக இருந்தார். சீசன் 4இல் பாட்னா பைரேட்ஸ் அணியில், புரோ கபடி லீக்கில் கலந்து கொண்டார். மேலும் விவோ புரோ கபடி வரலாற்றில் அதிக முறை எதிரணி வீரர்களை பிடித்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் வலது மற்றும் இடது மூலையில் இருந்து விளையாடும் திறன் கொண்டவராக அறியப்படுகிறார். சேரலாதன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விளையாடிய அனுபவம் உள்ளது.
தொடக்க பருவத்தில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடிய சேரலாதன் 39 நிறுமக் கைப்பற்று புள்ளிகளையும் 13 தடுப்பு புள்ளிகளையும் பெற்றார். இவரின் தடுப்பு புள்ளிகளின் சராசரி 56.52% விகிதமாக இருந்தது. 42 தடுப்பு புள்ளிகளுடன், இரண்டாவது பருவத்தில் பெங்களூரு புல்ஸ் பாதுகாப்புக்கு சேரலதன் தலைமை தாங்கினார். அவர் 19 கைப்பற்று புள்ளிகளுடன் தாக்குதலில் பங்களித்தார். அவரது தடுப்பு புள்ளிகளின் வீதம் 61.76% என்பதன் மூலம் இவர் சிறந்த கைப்பற்று வீரராக கருதப்படுகிறார். இந்தப் பருவத்தில் இவர் சிறந்த கைப்பற்று வீரராகக் கருதப்பட்டார் இவரை அடுத்த பருவத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது.ஐதராபாத்தில் இருந்து 31 கைப்பற்று புள்ளிகளை பெற்றார். இவரது களத்தடுப்பு விகிதத்தில் இந்தப் பருவத்தில் சிறிது சரிவு இருந்தபோதிலும், சேரலாதன் 50% க்கும் அதிகமான தடுப்பு, வீதத்தை சராசரியாகக் கொண்டிருந்தார். பாட்னா பைரேட்ஸ் நான்காவது பருவத்தில் இவரை 29 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் அந்த அணியின் தலைவராகவும் நியமித்தது. அவர் 39 கைப்பற்றுப் புள்ளிகளைப் பெற்றார் மற்றும் பைரேட்ஸ் அதை பின் லீக் பட்டங்களை வென்றது. இந்தப் பருவத்தில் அதிக களத்தடுப்பு வீரர்களைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார். ஐந்தாவது பருவத்தில் இவர் புனே அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐந்தாவது பருவத்தில் இவர் மொத்தமாக 25 தடுப்புப் புள்ளிகளைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் புரோ கபடி லீக் தொடரில் இவரை யு மும்பா அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. யு மும்பாவில் சேர்ந்த பிறகு, சேரலாதன் நாற்பது தடுப்பு புள்ளிகளைப் பெற்றார். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜியண்ட்ஸை எதிர்த்து, யு மும்பா வெற்றி பெற்றபோது அவர் 57.97% கைப்பற்று ஸ்ட்ரைக் வீதத்தைக் கொண்டிருந்தார்.