புதன், 30 அக்டோபர், 2019

கு. தங்கமுத்து விஜயதேவர்





உலகமே போற்றி வியக்கும் அளவிற்கு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழாக் குழு தலைவராக தொடர்ந்து இருந்ததுடன், ஆண்டுதோறும் சதயவிழாவை வெகு சிறப்பாக நடத்தியவர் திரு கு.தங்கமுத்து விஜயதேவர் அவர்கள்.




அண்ணா தி.மு.க.  விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவருமான கு. தங்கமுத்து விஜயதேவர், திருவோணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், திருவோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட பால்வளத் தலைவர், மாவட்ட அறங்காவலர் தலைவர், தமிழ் நாடு பாடநூல் வாரியத் தலைவர், திருவோணம் ஒன்றிய அமைப்பாளர், ஒன்றியக் கழகச் செயலாளர், தஞ்சாவூர் மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,  திருநல்லூரை சேர்ந்த   குமாரப்பாவிஜயதேவர் -– சொர்ணத்தாம்மாளுக்கு  மகனாக கு.தங்குமுத்து  1945ம்  ஆண்டு பிறந்தார்.  இவர் ஒரத்தநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்  படிப்பை முடித்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் பட்டப்படிப்பு  பயின்றார்.

1971ல் திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும்,  1973ல் திருவோணம் ஒன்றிய பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா  தி.மு.க.வின் முதல் ஒன்றிய பெருந்தலைவர் ஆவார்.

1980, 1999, 2004  ஆகிய வருடங்களில் நாடாளுமன்ற வேட்பாளராகவும், 1984, 1989, 1991, 1996,  2006 ஆகிய வருடங்களில் சட்டமன்ற வேட்பாளராகவும் அண்ணா தி.மு.க.வின் சார்பாக  போட்டியிட்டார்.

1991ல் சட்ட மன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1993–-1999 வரையும், 2001-–2002 ஆகிய வருடங்களில்  அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். தஞ்சாவூர் பெரிய கோவிலில்  சதய விழாக்குழுவிற்கு தலைவராக இருந்தார். மேலும் தஞ்சை  மாவட்ட பால்வள தலைவராகவும், மாவட்ட அறங்காவலர் தலைவராகவும்,  2004ல்  தமிழ்நாடு பாட நூல் வாரிய தலைவராக இருந்துள்ளார்.  2013லிருந்து குடிசை மாற்று வாரிய தலைவராக இருந்தார். ஜூலை  21, 2015 ஆம் ஆண்டு தனது 70 வதாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.



மகன் மருத்துவர் கண்ணன் விஜயதேவர்