திங்கள், 12 மார்ச், 2018

சுந்தர வளநாடு - சுந்தர பாண்டியன் வளநாடு - கள்ளர் நாடு


கள்ளர் நாட்டில் ஒன்றான சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள் : 


வாளமர் கோட்டை/ வாளமிரான்கோட்டை
வரவுக்கோட்டை
காட்டூர்
கரைமீன்டார் கோட்டை
வாண்டையார் தெரு
வாண்டையார் இருப்பு
வாண்டையார் இருப்பு வடக்கு
வாண்டையார் இருப்பு தெற்கு
கொட்டைன்டார் இருப்பு
திருநா இருப்பு
நாயக்கன்கோட்டை
மடிகை
தென்கொண்டார் இருப்பு
பெரண்டாக்கோட்டை
துறையூர்

இங்கு முதன்மையன கள்ளர் பட்டங்கள் வாண்டையார், கரைமீன்டார், தென்கொண்டனர்.

சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் 


சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி  தேவர்களால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை  என்றும் பெயர் வழங்கப்பட்டது.

ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர் வாளமீரன் கோட்டை என்றனது.பிறகு அம்மன்னன் மகன் சுந்தரபாண்டியன் இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காண்லாம்.















பெரண்டாக்கோட்டை





கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதியாக இருந்தது. தலையில் தீச்சுடர் உடைந்த நிலையில் காணப்பட்டது. நெற்றியில் திலகக்குறி உள்ளது. இந்த புத்தரைச் சாம்பான் என்று கூறி வழிபட்டு வருவதைக் காணமுடிந்தது. இந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி உள்ள இடத்தினை சாம்பான் கோயில் என்று கூறுகின்றனர். உடற்பகுதி அருகில் இருந்ததாக முன்னர் பேசிக்கொண்டதாகவும் உள்ளூரில் கூறினர். உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறிவிட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

புத்தரின் தலைப்பகுதி அய்யம்பேட்டை அருகே வையச்சேரி என்னுமிடத்தில் , பட்டீஸ்வரம் அருகே முழையூர்,  குடவாசல் அருகே சீதக்கமங்கலம் ஆகிய இடங்களில் புத்தரின் த்லைப்பகுதி உள்ளன. அய்யம்பேட்டை, முழையூர் மற்றும் சீதக்கமங்கலம் ஆகிய இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறவில்லை. பெரண்டாக்கோட்டையில் மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது.