வியாழன், 31 அக்டோபர், 2019

கள்ளர் மரபினரின் இந்திய இராணுவவீரர்கள்

கள்ளர் மரபினரின் வீரமரணமடைந்த இந்திய இராணுவவீரர்கள்

இளவரசன் காளிங்கராயர்




காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டு, 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த பூமிநாதன் காளிங்கராயர் - அமுதா தம்பதியரின் மகன் இளவரசன் காளிங்கராயர்.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவர், கடந்த 2012-ல் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 51 ராஷ்ட்ரீய ராயல் படைப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குரேஷ் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து பேசிய ராணுவ அலுவலர், இளவரசன் காளிங்கராயர் பலியான தகவலை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

உயிரிழந்த இளவரசனின் தந்தை பூமிநாதன் கூறும்போது, “கடந்த 4 நாட்களுக்கு முன் தொலை பேசியில் பேசிய இளவரசன் அடுத்த வாரத்தில் வருகிறேன் என்று தெரி வித்தார். இந்த முறை வரும்போது திருமணம் செய்துவைக்கத் திட்ட மிட்டிருந்தோம். இப்படி ஆகும் என கனவிலும் நினைக்கவில்லை. என் மகன் உடலை விரைந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. உயிரிழந்த இளவரசனுக்கு சகோதரி சுதா, சகோதரர் வினோத்குமார் உள்ளனர்.

குமார்த்தேவர்




சியாச்சின் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி குமார், 36, உடல் நேற்று சொந்த ஊரான குமணந்தொழுவில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள குமணன்தொழுவைச் சேர்ந்த  சீனித்தேவர்- பஞ்சம்மாள் மகன் குமார், 36. 17ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவருக்கு சமீபத்தில் அதிகாரி நிலையிலான 'ஹவில்தார்' பதவி வழங்கப்பட்டது. 


இவருக்கு மனைவி கவிதா, 26, மகன் ரியாஸ், 5, உள்ளனர். பிப்., 3ல், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். நேற்று முன்தினம் உடல் தனி விமானத்தில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர், அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குமணன்தொழுவில் உள்ள மயானத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


கணேசன் தேவர்


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்த கணபதித்தேவர்-ரஞ்சிதம் தம்பதியின் 2-ஆவது மகன் க. கணேசன் (26). இவர், தனது 18-ஆவது வயதில் ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்தார். பனிச்சரிவில் சிக்கிய கணேசன்உயிரிழந்தார். 


சொக்கத்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த வீரர் கணேசனின் சடலத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை ரெஜிமெண்ட், கோவை ரெஜிமெண்ட்டின் முதன்மை கமாண்டர்கள் தலைமையிலான ராணுவ வீரர்கள் ராணுவ மரியாதையுடன் மயானத்துக்கு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.   தகன மேடை அருகே வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சென்னை என்சிசி பிரிவு துணை இயக்குநர் வி.கே.கார்க், காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று 21 முறை வானத்தை நோக்கி சுட்டு மரியாதைச் செலுத்தினர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


முன்மாதிரி வீரர்: மறைந்த ராணுவ வீரர் கணேசனின் உறவினர்கள் கூறியதாவது: 







சொக்கதேவன்பட்டியில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். ஆனால், பணியில் இருந்த காலத்தில் இறந்தவர் கணேசன் மட்டுமே. இந்த வீரமரணம் மூலம் இந்த ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரது தியாகம் எங்கள் ஊரைச் சேர்ந்த பல இளைஞர்களை ராணுவத்தில் சேரத் தூண்டியுள்ளது. இந்த ஊர் இளைஞர்களுக்கு அவர் என்றுமே ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றனர்.



கணேசனின் சகோதரர் சதீஷ்குமார் கூறியதாவது: கணேசனுக்கு விவசாயம் செய்வதில் அதிக ஆசை இருந்தது. ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் விவசாயம் செய்ய வேண்டும் என அடிக்கடி கூறுவார். அவர் பணியில் சேர்ந்து 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. அவருக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து வந்த நிலையில், இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்றார்.



திருமூர்த்தி புள்ளவராயர்



2020-07-24-ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ஹிராநகர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்டம் வடுவூர் சேர்ந்த ஹவில்தார் எஸ் திருமூர்த்தி புள்ளவராயர் துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்தார்.




புதன், 30 அக்டோபர், 2019

கு. தங்கமுத்து விஜயதேவர்





உலகமே போற்றி வியக்கும் அளவிற்கு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழாக் குழு தலைவராக தொடர்ந்து இருந்ததுடன், ஆண்டுதோறும் சதயவிழாவை வெகு சிறப்பாக நடத்தியவர் திரு கு.தங்கமுத்து விஜயதேவர் அவர்கள்.




அண்ணா தி.மு.க.  விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவருமான கு. தங்கமுத்து விஜயதேவர், திருவோணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், திருவோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட பால்வளத் தலைவர், மாவட்ட அறங்காவலர் தலைவர், தமிழ் நாடு பாடநூல் வாரியத் தலைவர், திருவோணம் ஒன்றிய அமைப்பாளர், ஒன்றியக் கழகச் செயலாளர், தஞ்சாவூர் மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,  திருநல்லூரை சேர்ந்த   குமாரப்பாவிஜயதேவர் -– சொர்ணத்தாம்மாளுக்கு  மகனாக கு.தங்குமுத்து  1945ம்  ஆண்டு பிறந்தார்.  இவர் ஒரத்தநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்  படிப்பை முடித்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் பட்டப்படிப்பு  பயின்றார்.

1971ல் திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும்,  1973ல் திருவோணம் ஒன்றிய பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா  தி.மு.க.வின் முதல் ஒன்றிய பெருந்தலைவர் ஆவார்.

1980, 1999, 2004  ஆகிய வருடங்களில் நாடாளுமன்ற வேட்பாளராகவும், 1984, 1989, 1991, 1996,  2006 ஆகிய வருடங்களில் சட்டமன்ற வேட்பாளராகவும் அண்ணா தி.மு.க.வின் சார்பாக  போட்டியிட்டார்.

1991ல் சட்ட மன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1993–-1999 வரையும், 2001-–2002 ஆகிய வருடங்களில்  அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். தஞ்சாவூர் பெரிய கோவிலில்  சதய விழாக்குழுவிற்கு தலைவராக இருந்தார். மேலும் தஞ்சை  மாவட்ட பால்வள தலைவராகவும், மாவட்ட அறங்காவலர் தலைவராகவும்,  2004ல்  தமிழ்நாடு பாட நூல் வாரிய தலைவராக இருந்துள்ளார்.  2013லிருந்து குடிசை மாற்று வாரிய தலைவராக இருந்தார். ஜூலை  21, 2015 ஆம் ஆண்டு தனது 70 வதாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.



மகன் மருத்துவர் கண்ணன் விஜயதேவர்

திங்கள், 28 அக்டோபர், 2019

குழந்தை வளநாடு



குழந்தை வளநாடு என்று அழைக்கப்படும் குந்தவை வளநாடு தஞ்சையிலிருந்து மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளை கொண்டுள்ளது.

ராஜ ராஜசோழன் தனது மகள் குந்தவைக்கு கொடுத்த நாடானது குந்தவை வளநாடு எனப்பெயர் பெற்றது.ராஜ ராஜசோழன் தனது மகளை குழந்தாய் என அழைத்ததின் காரணமாக குழந்தை வளநாடு என இன்றளவும் நாட்டு மக்களால் அழைகப்படுகிறது.

ராஜ ராஜசோழன் தன் குழந்தைக்கு கொடுத்த நாடு 
குன்றாத வளம் கொண்ட குத்தவை வளநாடு


குழந்தை  வள நாடானது கீழ்க் கண்ட ஊர்களை தன்னகத்தே கொண்டு சீரும் சிறப்புடன் விளங்குகிறது.

01 .சடையார் கோவில்
02 .அருமலைக்கோட்டை (தொண்டமார்)
03 .ஆர்சுத்திப்பட்டு (ஆர்சுத்தியார்)
04 .சின்ன புலிக்குடிக்கடு
05 .துறையுண்டார் கோட்டை (துறையுண்டார் பட்டம் )
06 .பனையக்கோட்டை
07 .நார்த்தேவன் குடிக்காடு ( நார்த்தேவர் பட்டம் )
08 .வடக்கு நத்தம்
09 .அரசப்பட்டு 
10 . சின்ன கொருக்கப்பட்டு
11 .பெரிய கொருக்கப்பட்டு
12 .திருவோணம்




நன்றி : திரு. அருமலைத்தென்றல் சதிஸ்.


கலைமாமணி தஞ்சை ஞானமணி இராஜாபிரியர்



திருஅருட்பா பாடகர் ,அருட்பாமணி, கலைமாமணி, கலை முதுமணி தமிழிசைக் கலைஞர் தஞ்சை ஞானமணி இராஜாபிரியர். தமிழை மட்டும் தான் பாடுவேன் என்ற உயரிய கொள்கை உடையவர்.


செவ்வாய், 22 அக்டோபர், 2019

அரசங்குடி




அந்த கோடைகால காலை வேளையில் மொத்த அரசங்குடி கிராமமும் சீயான் சாவடியில் கூடியிருந்தது.

அரசங்குடியில் இதுவரை இரண்டே முறை தான் இதுபோன்ற கூட்டம் சீயான் சாவடியில் கூடியிருக்கிறது.முதலாவது கிராம பஞ்சாயத்தாரால் வைக்கப்பட்ட ஊரின் முதல் டிவியை பார்க்க,இரண்டாவதாக நடிகர் ராமராஜன் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது.கடந்த இருபது ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சீயான் சாவடி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.

அரசங்குடியின் ஆணிவேர் இந்த சாவடி.பஞ்சாயத்தில் தொடங்கி,ஜல்லிக்கட்டு,சேவச்சண்டை,ரேக்ளாரேஸ்,கருப்புசாமி கோயில் கிடாவெட்டு,கோடைகால மதியநேர கிடை,அரசாயி கோயில் குள மீன்பிடி ஏலம் என சகலத்திற்கும் சகல விதங்களில் பயன்பட்டது பெயர்காரணம் இதுவரை தெரியாத இந்த சீயான்சாவடி.

மொத்த ஊரும் பஞ்சாயத்து தலைவர் கருப்பட்டி ஏத்தாண்டாரின் வருகைக்காக காத்துகொண்டிருந்தது.தேர்தல் இல்லாமல் இருநூற்றைம்பது குடும்பங்கள் இருக்கும் அரசங்குடியில் ஒவ்வொருமுறையும்  ஏத்தாண்டார் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தார். 

ஏத்தாண்டார்,காடுரார்,பாண்டுரார்,அயிரப்பிரியர்,சோமநாயக்கர்,முனையதிரியர் என சோழர்கால சமூகப்பிரிவுகளின் கடைசிப்பிரதியாக இருந்த அரசங்குடியில் அன்றைய பஞ்சாயத்தில் விவாதிக்க மிகமுக்கியமான விசயம் ஒன்றும் கருப்பட்டியாரின் வரவுக்காக காத்துகொண்டிருந்தது.






கருப்பட்டியார் வருவதற்கும்,தெற்கே தோகூர் கதிரேசன் ரைஸ்மில்லில் முதல் சங்கு ஊதுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.அவர் தனக்கான இடத்தில் அமர்ந்ததும் ஆரம்பமானது பஞ்சாயத்து.

பஞ்சாயத்து வழிமுறைகளின்படி தலயாரி செல்லமுத்து சேர்வை ப்ராதை ஆரம்பித்துவைத்தார்.

“ஐய்யா,நேத்து நம்ம சப்பாணிகருப்பு கோயில்ல இருந்த போலீஸ் சாமிய யவனோ களவாண்ட்டு போனதபத்தி மேற்கொண்டு என்னபண்ணலாம்னு முடிவுபண்ரதுக்குதான் பஞ்சாயத்த கூட்டிற்கம்ங்க”

கருப்பட்டி ஏத்தாண்டாரின் கொல்லுப்பாட்டனார் சுந்தரபாண்டி ஏத்தாண்டார் தான் அரசங்குடி மக்கள் கண்ணால் பார்த்து,பழகிய சப்பாணிகருப்பு இந்த போலீஸ் சாமி.வெள்ளைக்காரர்களால் அறிமுகபடுத்தப்பட்ட போலீஸ் முறையில் உருவான தோகூர் காவல் நிலையத்தின் முதல் கண்காணிப்பாளர் இந்த போலீஸ்சாமி.திருடுவதையே தொழிலாக கொண்ட ஒரு வர்க்கத்தை விவசாயம் செய்யும் சம்சாரிகளாக மாற்றியது இவர் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை.பதிலுக்கு சம்சாரிகள் நாத்திகராய் வாழ்ந்த சுந்தரபாண்டியாரை போலீஸ்சாமியாக்கி சப்பாணிக்கருப்பு கோவிலில் சாமிசிலையாக நிற்கவைத்தார்கள்.தலைமுறை தலைமுறைகளாக ஒவ்வொர்முறை ஊர்த்திருவிழாவின் போதும் கடைசிநாள் சப்பாணிகருப்பிற்கும்,போலீஸ் சாமிக்கும் ஒதுக்கப்பட்டு கிடாவெட்டு,சாராயம்,ரெக்கார்ட் டான்ஸ் என திருவிழா கலைகட்டும்.

இந்த வருட திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட நத்தம் சுந்தரி பார்டிக்கு கொடுத்த அட்வான்ஸ் வீணாகிபோய்விடுமோ என்று கூட்டத்தில் சிலர் ஆழ்ந்த கவலையில் இருந்தனர்.

“பேசாம தோகூர் போலீஸ் ஸ்டேசன்லயே புகார் கொடுத்தாயென்ன?” கேள்வியோடு பேசஆரம்பித்தார் சுப்பையா வாத்தியார்.

“போலீஸ்சாமிய திருடன் கொண்டுபோய்ட்டான்னு போலீஸ்ல புகார் கொடுத்த நம்மூர் மானம் போகாது வாத்தியாரே?” என்று எதிர் கேள்விகேட்டார் கருப்பட்டி.

“வேறென்னதான் பண்றது,அடுத்த பொளர்ணமிக்கு திருவிழாவ வச்சிகிட்டு இப்படி சாமிய திருடு குடுத்திட்டு ஒக்கார்ந்திருக்கோமே” என்றார் வாத்தியார்.

“அதுக்கில்ல வாத்தியாரே, இது வெறும் திருட்டு மட்டும் இல்லீங்களே இதில நம்மூரோட மான,மரியாதையும் சம்பந்த பட்டிருக்கில்ல,கொஞ்சம் யோசிச்சிதாங்க செய்யணும்”..என்று விவாதத்தில் கலந்துகொண்டார் வெளக்கெண்ண செட்டியார்.பரம்பரை பரம்பரையாக எண்ணெய் வியாபாரம் செய்ததால் தொழிலோடு ,பேரும் செட்டியாரோடு ஒட்டிக்கொண்டது.

“சரியாசொன்னீங்க செட்டியாரே” என்று வழிமொழிந்தார் சப்பாணிகோயில் பூசாரி புலியேறுபடியான்.

“ஒனக்கு யாருபேர்லயாவது சந்தேகமாயிருக்கா?புலியேறு” என்று வினவினார் கருப்பட்டி.

“வெறும் எறநூத்தம்பது குடும்பதான் இருக்குது,இதில எப்டி பார்த்தாலும் எல்லா பயலும் ஒருவகயில சொந்தகாரணுங்கதான்,நான் யாரெண்ணு சந்தேகப்படுரதுங்க்கைய்யா”..என்று ஏகவசனத்தில் பேசிமுடித்தார் பூசாரி.

“நீங்களாப்பார்த்து ஒரு நல்ல முடிவா சொல்லுங்க ஏத்தாண்டாரே” என்று அவசரப்படுத்தினார் சுடுதண்ணி நல்லமுத்து காடுரார்.கேள்வியிலேயே பெயர்க்காரணம் தெரியும்படி.

“பேசாம கருப்பு கோயில்லயே முட்டய மந்திரிச்சி,கோழிய அறுத்து போட்டோம்னா,திருடுனவன் ரத்தவாந்தி எடுத்து செத்துபோய்டுவான்ல,அதவச்சி போலீஸ்சாமிய கண்டுபுடிச்சிடலாம்ல?”என்று இரண்டாவது  யோசனையை கொடுத்தார் தங்கையா ஆசாரி.

வெத்தலைல மை வைச்சி பார்க்கிறது,வெட்டுடையா காளிகோயில்ல வரமொளகாய எரிக்கிறது,அய்யனாருக்கு மாட்டுக்கறி படையல் போடுறது,செம்மறி ஆட்டு ரத்தத்த ஊர சுத்திதெளிக்கிறது என அவரவர்களின் கற்பனா சக்திக்கு ஏற்ப யோசணைகள் வந்ததே ஒழிய முடிவுமட்டும் எட்டபடாமல் இருந்தது.

முடிவாக கருப்பட்டி ஏத்தாண்டார் பேச ஆரம்பித்த போது தோகூர் கதிரேசன் ரைஸ்மில்லில் இரண்டாவது சங்கு ஊதியது.

“வெளக்கெண்ண செட்டியார் சொன்னமாரி இதில நம்மூர் மான,மரியாத கலந்திருக்கதால போலீஸ்ட்ட,போலீஸ்சாமிய காணும்னு புகார்கொடுத்து நாமலே நம்ம பேரகெடுத்துக்க வேணாம்னு நெனக்கிறேன்,அதனால நாமளே நமக்குள்ள ஒரு குழுவ அமச்சு போலீஸ் செய்யவேண்டிய வேலய நாமளே செஞ்சு,திருவிழாக்குள்ள சாமிய கண்டுபுடிச்சிடுவோம்”

கருப்பட்டியார் கொஞ்சம் நாத்திகராயிருந்த காரணத்தால் அவர் முடிவு பலருக்கு அப்படியே பட்டது.

“போலீஸ்சாமிய கண்டுபுடிக்க போற போலீஸ் வேல பாக்கப்போற குழுல யார்யார போடணும்ன பொறுப்ப தலயாரி செல்லமுத்து கிட்டயும்,பூசாரி புலியேறுட்டயும் ஒப்படைக்கிறேன்”

கல்லடிபட்ட மரத்திலிருந்து பறக்கும் வெளவால்கள் போல கூட்டம் கலைந்து சென்றது.

மறுநாள் காலை கருப்பட்டியாரின் வீட்டின்முன்பு தலயாரியும்,பூசாரியும் இருகுழுக்களாக வந்திருந்தனர்.

தலயாரி செல்லமுத்து சேர்வை தலமையில் மிலிட்டெரிக்கார ஆறுமுகம்,கப்பக்காரர் பேரன் பூதலிங்கம்,சிலம்ப வாத்தியார் ராசாங்கம்,தலயாட்டி செல்வராசு என புஜபலபராக்கிரம படையும்,பூசாரி புலியேறுபடியான் தலமையில் சுப்பையா வாத்தியார்,கறிக்கட பீரான் ராவுத்தர்,கொல்லன் ஆரோக்கியம்,கருப்பட்டியாரின் கடைசி மகன் போஸ் என ஒரு மதநல்லிணக்க படையும் தயாரானது.

சக்கிலியன் சின்னக்கண்ணு முன்கதை மொத்தத்தையும் தண்டோரா போட்டு ஊருக்கே சொல்லிமுடித்தான்.

அரசங்குடி போலீஸ்படை போலீஸ்சாமி திருடனை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.ஊருக்கு புதிதாக வந்துபோனவர்கள்,சாமியே இல்லை என சொல்லித்திரியும் பெரியார் கட்சி காரர்கள்,பக்கத்து ஊரிலுள்ள பெட்டிகேசில் மாட்டிக்கொள்ளும் முன்னால் களவாணிகள் என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.திருவிழா வேறு நெருங்கிகொண்டிருக்க போலீஸ்சாமி போன திசையே தெரியவில்லை.

“தங்கத்துல செஞ்ச செலன்னலும் பரவால்ல,கல்லுல செஞ்சதுதான அதுக்குபோய் ஏன் இவ்ளோ கஷ்ட படணும்?பேசாம புதுசா ஒன்னு செஞ்சுக்களாமே தலயாரி” என்று கப்பக்காரர் பேரன் பூதலிங்கம் நக்கலாக கேட்டான்.

“எலேய்,ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி மண்ணுக்குள்ள போன கல்லத்தாண்டா இன்னைக்கு பொன்னுங்கராங்க..போலீஸ்சாமி செலயும் அந்தமாதிரி தாண்டா” என்று சூடானார் சேர்வையார்.

மொத்த ஊரும் செய்வதறியாது தவித்துகொண்டிருந்தது.போலீஸ்படையால் போலீஸ்சாமி போனதிசையை கூட கண்டுபிடிக்கமுடியவில்லை.

சப்பாணி கருப்பிடம் பூக்கட்டி போட்டு போலீஸ்சாமி கிடைக்குமா என்று பார்த்த பூசாரி புலியேறுபடியானுக்கு சாமி கிடைத்துவிடும் என்று சப்பாணி சாமி சொன்னது மிகுந்த சந்தோசத்தை அளித்தது.ஆனால் சாமிதான் கிடைத்தபாடில்லை.

ஒருநாள் மதிய பூசை முடிந்தவுடன் கோயிலை பூட்டிவிட்டு வெளியேவந்த பூசாரியின் காலில் ஏதோ குத்தியது.வலி பொறுக்க முடியாமல் போலீஸ்சாமி இருந்த மதிலருக போய் அமர்ந்த அவர் பார்வையில் பட்ட அந்த பொருள் போலீஸ்சாமி போன வழியைகாட்ட போகும் ராஜாபாட்டையாக அமைந்தது.அதை எடுத்துகொண்டு கருப்பட்டியாரின் வீட்டிற்கு அவர் மொத்த அரசங்குடி போலீஸ்படையையும் கூட்டிக்கொண்டவிரைந்தார்.

“என்ன புலியேறு இது?”

நடந்ததை சென்னார் புலியேறுபடியான்.

“அப்ப போலீஸ்சாமி கிடைச்சமாரிதான்னு சொல்லு”என்றார் வெளக்கெண்ண செட்டியார்.

“கருப்பணே சொல்லிட்டான்,கெடைக்காமலா போயிடும்” என்றார் பூசாரி.

“ஆனா இதவச்சிக்கிட்டு எப்டி கண்டுபுடிக்க” என சிலம்பவாத்தியார் கேட்க

“ஐய்யா சிலய ஒடச்சி எடுத்த சேதமாயிடும்னு,அறுத்து எடுத்திருக்காங்க,அப்ப திருடுனவன் கண்டிப்பா செலயோட மகத்துவம் தெரிஞ்சவனாதானிருக்கும்” என்று ஆரம்பித்த தலயாரியை பார்த்து அசந்துபோனார் கருப்பட்டியார்.

“அதுமட்டு இல்ல,அறுக்குறதுக்கு மரமறுக்குர திருக்க ரம்பத்தவச்சி அறுத்திருக்காங்க,அப்டி அறுக்கிறப்ப ரம்பம் ஒடயாம இருக்குரதுக்காக வண்டிமைய அப்பி அறுத்திருக்காங்க,அப்டியும் ஒடஞ்சுபோன ஒரு துண்டுரம்பம் தான் இது”என்று விவரித்தார் கறிக்கட பீரான் ராவுத்தர்.

இதைகேட்ட கொல்லன் ஆரோக்கியத்திற்கு ஒரு பொறி தட்டியது.

“ஐயா,ரண்டு வாரத்திற்கு முன்னாடி கோயிலடிலேர்ந்து ஒரு நாலுபேர் வந்து திருக்க ரம்பம் ஒன்னு செஞ்சிட்டிபோனாங்க,அவிங்க வந்துட்டு போன மூணானாளுதான் போலீஸ்சாமியும் காணபோச்சு”

பதினோறுபேர் நின்ற அந்த கூடத்தில் மிலிடெரிகார ஆறுமுகத்தின் காதருகே சென்ற கொசுவின் குரலே கேட்டது.

“நாங்கூட ஏம்பா எந்த ஊர்ல ஆலமரம் அறுக்க போறீங்க் திருக்க ரம்பம் கேட்கிறீங்கன்னதுக்கு,சரியாவே பதில்வரல,எனக்கென்னமோ அவிங்க மேலதான் சந்தேகமாயிருக்குங்க” என்ற ஆரோக்கியத்தின் துப்பில் போலீஸ்சாமி கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஒரு ஏக்கரில் எழுபத்தைந்து குடும்பங்களை கொண்ட சிற்ற்ற்ற்ற்ற்றூர்தான் கோவிலடி என்பதால் உடனே விரைந்த கொல்லனுடன் சென்ற புஜபலபராக்கிரம படை அந்த நான்கு பேருடன் அரசங்குடி திரும்ப அரைநாள்தான் பிடித்தது.

திருக்க ரம்பத்தை வாங்கிய நால்வருக்கும் தலயாரி செல்லமுத்து சேர்வை திருக்க மீன் வாலில் செய்த சவுக்கால் செய்த பூசை பலனளிக்க மீதி அரைநாள் ஆனது.வலி தாங்காமல் அவர்கள் தங்களுக்கு முருக்கூரில் சாராய வியாபாரம் செய்யும் நீலமேகம்தான் ஐயாயிரம் பணமும்,பத்து பாட்டில் சாராயமும் தந்து செலய திருடி தர சொன்னதாக உண்மையை கக்கினார்கள்.

“ஏன்டா வெறும் ஐயாயிரம் பணமும்,பத்து பாட்டில் சாராயமும் தந்தா என்னாவென்னாலும் பண்ணுவீங்களான்னு” கத்திகொண்டே ஓங்கி உதைத்த போஸ்சை சமாதானபடுத்தினார் கருப்பட்டியார்.

“இவங்கள உதச்சி என்ன ப்ரோஜனம்,மொதல்ல அந்த பயல புடிங்கடா”என்றார் கருப்பட்டி.

நீலமேகமும், தலயாட்டி செல்வராசும் ஒரு காலத்தில் ஒன்றாய் சாராய வியாபாரம் செய்தார்கள்.ஒருமுறை தோகூர் போலீஸிடம் மாட்டி வாங்கிய அடியில் கழுத்து நரம்பு ஒன்று அறுந்துபோனதில் தலை தானாக ஆடதொடங்கியது தொடர்ந்து செய்த வைத்தியத்தினால் தலை ஆடுவதிலிருந்து நடுங்க தொடங்கியது பிறகு சாராயம் விற்பதயே நிறுத்திவிட்டான் செல்வராசு.

தலையாட்டி செல்வராசு ஆள்காட்டி பறவையாகி நீலமேகத்தை பிடிக்க உதவினான்.எப்படியோ கோவிலடி ஆட்கள் பிடிபட்டதை தெரிந்துகொண்டு மெட்ராசுக்கு தப்பி ஓட இருந்தவனை பூதலூர் ரயில்வே ஸ்டேசனில் வைத்து பிடித்தது அரசங்குடி போலீஸ்படை.

பூதலூரிலிருந்து அரசங்குடி வரும்வரை நீலமேகத்திற்கு உடம்பில் அடி விழாத இடமே இல்லை எனலாம்.பசங்க என்ன தப்பு செய்தாலும் அடிக்காத சுப்பையா வாத்தியாரே,பத்தடிக்குமேல் அடித்திருப்பார்.மிலிடெரிக்கார ஆறுமுகத்தின் நான்காவது ஊமைகுத்திற்கு பலனாக நீலமேகம் சொன்ன பெயர் அந்த வண்டியிலிருந்தவர்கள் அனைவரையுமே உறையவைத்தது.

கருப்பட்டி ஏத்தாண்டாரின் மாட்டுதொழுவத்திலிருந்த மூன்றாவது தூணில் ஐந்தாவது ஆளாக கட்டப்பட்டான் நீலமேகம்.

அடிதாங்காத நீலமேகம்,அரசங்குடியின் சாமக்கோடங்கி மந்தையா தேவரின் பேரைச்சொன்னான்.எதற்கும் கலங்காத கருப்பட்டியார் செய்வதிறியாது ஊமையாய் சுவரில் சாய்ந்தார்.

மந்தையா தேவர்,கருப்பட்டி ஏத்தாண்டாரின் தகப்பனார் ஐய்யாவு ஏத்தாண்டாரின் இரண்டாவது மனைவி அங்கமுத்துவின் அண்ணன்,ஒருவகையில் கருப்பட்டியாரின் மாமா. கருப்பட்டி ஏத்தாண்டாரின் அம்மா  அவர் பிறந்தவுடனே இறந்துபோக பெரிய ஏத்தாண்டார் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள,அங்கமுத்துவுடன் இவ்வூருக்கு வந்தார் மந்தையா தேவர்.

ஐய்யாவு ஏத்தாண்டார் இறந்தவுடன் அங்கமுத்துவும் அவரும் தனியே சென்றுவிட்டார்கள்.அங்கமுத்துவும் கொஞ்சநாட்களிலேயே இறந்துபோக அவளின் ஒரே மகன் செந்திவேலுவுடனே இருந்துவிட்டார் மந்தையன்.ஏனோ தெரியவில்லை அவர்கள் கருப்பட்டியாரின் குடும்பத்தினருடன் சரியாக பழகவேயில்லை.

பஞ்சாயத்து தலைவர் பதவி,கோவில் குள மீன்பிடி ஏலம்,ஜல்லிக்கட்டு காளை,சண்டசேவல்,சண்டக்கிடா என செந்திவேலு கருப்பட்டியாருடன் போட்டி போட்டு தோர்க்காத விசயமே இல்லை எனலாம்.அத்தனைக்கும் பின்புலமாக மந்தையன் இருப்பார்.

இப்பொழுது மொத்த விசயமும் தெளிவாக புரிந்தது ஏத்தாண்டாருக்கு.

நான்காவது முறையாக சீயான் சாவாடியில் கூட்டம் கூடியது.இந்தமுறை பக்கத்து ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

விசயம் தெரிந்த அன்றே செந்திவேலு குடும்பத்தினர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.அதற்கு அடுத்த நாள் மந்தையா தேவர் அவர்கள் வீட்டு ஜல்லிக்கட்டு காளையின் கொம்பின் மீது பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கருப்பட்டி ஏத்தாண்டாரை பழிவாங்கவே போலீஸ்சாமியின் சிலையை திருடியதாகவும் அதனால் திருவிழா நடக்காமல் போனால் அது கருப்பட்டியாருக்கு பெருத்த அவமானத்தை தரும் என்று மந்தையா மாமா சொன்னதால்தான் செய்ததாகவும் செந்திவேலு பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்டார்.

அவரையும் அவர் குடும்பத்தினரையும் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து தீர்ப்பு கூறினார் ஏத்தாண்டார்.

போலீஸ்சாமியை திருடியவர்கள் ஊர்த்திருவிழா முடியும்வரை கோவில்வேலை அனைத்தையும் செய்யவேண்டும் என்று தீர்ப்பானது.

சாராயம் விற்ற குற்றத்திற்காக நீலமேகம் தோகூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

போலீஸ்சாமி செந்திவேலு கரும்புதோட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு,புது வர்ணம் பூசி சப்பாணிகருப்பின் காலடியில் நிறுத்திவைக்கப்பட்ட நான்காம் நாள் திருவிழா தொடங்கியது.

போலீஸ்சாமியை திறம்பட துப்பறிந்து கண்டுபிடித்த புஜபலபராக்கிரம படைக்கும், மதநல்லிணக்க படைக்கும் மொத்த ஊரும் மெத்த பாராட்டு தெரிவித்தது.

போலீஸ்சாமி கிடைத்துவிட்டதால் இந்த வருடம் கடைசிநாள் திருவிழாவில் நத்தம் சுந்தரி பார்டியாரின் ரெக்கார்ட் டான்சை பார்த்துவிடலாம் என்ற சந்தோசத்தில் ஒரு கூட்டம் சீயான்சாவடியிலிருந்து கிளம்பிசென்றது.




 தகவல் : குவியம்  https://kuviam.wordpress.com/

எம்.ஏ.பி. பிச்சை பாண்டுரார்


சஞ்சய் சரவணன் பாண்டுரார். சொந்த ஊர் திருச்சி. அப்பா, எம்.ஏ.பி.சரவணன் பாண்டுரார். அம்மா, லட்சுமி.  எனக்கு ரோல் மாடல் என்னோட தாத்தா எம்.ஏ.பி. பிச்சை பாண்டுரார். அவர் சுதந்திர போராட்டத்திலே கலந்துக்கிட்டவரு. 1932ம் வருஷத்திலே எங்க சொந்த இடத்திலே நாடக சபா ஒண்ணு தொடங்கி நடத்தினார். அந்த காலத்திலே இருந்த ஊமைப் படங்கள்ல அவர் நடிச்சு இருக்காரு. ”பக்த துருவன்”, ”சத்தியவான் சாவித்திரி”, ”சந்தனதேவன்” படங்கள்ல நடிச்சு இருக்காரு. அதை பட்சிராஜா பிலிம்ஸ் தயாரிச்சாங்க.


என் தாத்தாவோட போட்டோக்கள், விருதுகள், அவர் பயன்படுத்திய வீணை என பல நினைவு சின்னங்கள் என்னோட வீட்ல இருக்கு. அவரால சினிமாவிலே பெருசா சாதிக்கமுடியலே. அவர் பண்ண நினைச்சதை பேரனா இருந்து நான் எப்படியாச்சும் சாதிக்கணும்னு நினைக்கிறேன் .

இரண்டாம் உலகம்” ,”கவுரவம்” , ”பூலோகம்”, ”மீகாமன்”, இரும்புத்திரை, ”கவன்” நடிச்சிருக்கேன். “மடை திறந்தே 1945” ன்னு ஒரு படத்திலே இப்போ நடிச்சிருக்கேன். இந்த படம் தமிழ், தெலுங்குன்னு 2 மொழிலையும் எடுத்திருக்காங்க. ”ராபின்ஹுட்” படத்திலே நான் முக்கிய ரோல்ல நடிச்சிருக்கேன். இந்த படத்திலே மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு. இதுவும் ஒரு வரலாற்று படம்தான். 

சினிமாவிலே நுழைஞ்சிருக்கிற நான், எல்லா ரோல்லையும் நடிக்கிற அளவுக்கு சிறந்த நடிகரா ஆகணும்னு எனக்கு ஆசை. அதுதான் என்னோட கோல். எந்தவொரு ரோல்லையும் நடிக்க நான் தயங்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு தேவையான எல்லா பயிற்சிகளையும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வர்றேன். ரொம்ப சீக்கிரமா அந்த இலக்கை அடைஞ்சிடுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

திங்கள், 21 அக்டோபர், 2019

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் விஜயதேவர்



தமிழ், மலையாளம், இந்தி என்று கலக்கிக்கொண்டு இருக்கும், 'ஃபைவ் ஸ்டார்’, 'ஆட்டோகிராஃப்’, 'அந்நியன்’, 'வேட்டையாடு விளையாடு’, 'தசாவதாரம்’, 'வில்லு’, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட 'பர்ஃபீ’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் பிறந்து வளர்ந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிகாடு பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார். 

(பொய்யுண்டார் குடிக்காடு, பொய்யுண்டார் கோட்டை என்ற ஊர்களிலும் , பொய்யுண்டார் தெருவிலும் கள்ளர் குடியினரின் பொய்யுண்டார் பட்டம் உடையவர்கள் வாழ்கின்றனர்.)

 ''பத்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்க மூதாதையர்கள் பொய்யுண்டார்கோட்டை என்ற ஊரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தாங்களாம். அதனாலதான் எங்க ஊருக்கு பொய்யுண்டார் குடிகாடுனு பெயர்வந்து இருக்கு. எங்க ஊர்ல விவசாயிகள் அதிகம். அப்போ எல்லாம் நல்ல மழை பேஞ்சு நல்ல மகசூல் கிடைக்கும். எங்க ஊரைப் பார்க்கவே அவ்வளவு அழகா, பசுமையா இருக்கும். எங்க ஊர் மத்தியில் ஒரு காடு இருக்கும். அந்தக் காடுதான் எங்க ஊரை வடக்குத் தெரு, தெற்குத் தெருனு ரெண்டாப் பிரிக்கும். இப்போ அந்தக் காடு அழிஞ்சுடுச்சு. அதேமாதிரி எங்க ஊரைச் சுத்தியும் நாலு குளம், ஒரு ஏரி இருந்துச்சு.இப்போ அந்தச் சுவட்டையே காணோம்.


வருஷா வருஷம் 'காமன் தகனம்’ நிகழ்ச்சி வெகு விமர்சையா நடக்கும். இந்தத் திருவிழாதான் ஊர்மக்கள் எல்லாருக்குமே பொதுவான திருவிழா. 13 நாள் மண்டகப்படியா நடக்கிற திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பாட்டும் கச்சேரியுமா ஊரே அமர்க்களப்படும். திருவிழாவோட ஒரு பகுதியா மன்மதன் ரதி உருவங்களை வெச்சு நடத்துற காமன் தகனம் நிகழ்ச்சியும் கிடா வெட்டும் ரொம்ப பிரமாண்டமா நடக்கும். ஒவ்வொரு திருவிழாவின்போதும் யாராவது ஒருத்தர் ஓலைச்சுவடிகள்ல இருக்கிற காமன் கதைகளைப் படிப்பாங்க. நானும் சில திருவிழாக்கள்ல படிச்சு இருக்கேன். என்னோட படைப்பாற்றலுக்கு அந்த நிகழ்வுதான் ஆரம்பப் புள்ளி.

ஊர்ல இருந்த மூணு பிரிவினரும் மூணு வெவ்வேறு கோயில்கள்ல திருவிழா கொண்டாடுவாங்க ( விஜயதேவர், பொய்யுண்டார்)   . நாங்க பட்டவன் கோயில் திருவிழா நடத்துவோம். ஒரே ஒரு நாள் நடக்கிற திருவிழாவா இருந்தாலும், ரொம்ப விசேஷமா நடக்கும். இதுமாதிரி மத்த ரெண்டு கோயில்களான வீரணார் கோயில் திருவிழாவும் காளியம்மன் கோயில் திருவிழாவும் களைகட்டும். காளியம்மன் கோயில் திருவிழாவின் கடைசி நிகழ்வாக கரகம், கொப்பரை நிகழ்ச்சி நடக்கும். ஊர் மக்கள் தீப்பந்தம் ஏந்திக்கிட்டு வர, அவங்களுக்கு முன்னாடி எங்க ஊர் வீரய்யன் ஒரு பெரிய அரிவாளையும் சந்திரலிங்கம் தாத்தா பூக்கரகத்தையும் சின்னு பொய்யுண்டார் கொப்பரையையும் ஏந்திக்கிட்டு விடிய விடிய ஊரைச்சுத்தி வலம்வருவாங்க. இதை எல்லாம் நான் பக்தியா பார்த்ததைவிட அழகான கலையாகப் பார்த்து ரசிச்சு இருக்கேன். இதே மாதிரி ஆடி மாசத்தில ஊர்ல நடக்கிற திருமேனியம்மன் கோயில் திருவிழாவில ஊர்ப்பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி முளைப்பாரி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்போ ஒவ்வொருத்தங்க வீட்டுல இருந்தும் தவறாமல் அம்மனுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு, கீரை போன்ற உணவுகளைத் தயார்செஞ்சு எடுத்துக்கிட்டுவந்து படையல் போடுவாங்க.

ஊர்ல எப்போதும் நெல், கடலை, எள், சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் அதிகமா விளையும். அதுக்கு, அப்போ இருந்த இறவை பாசனத் திட்டம் ஒரு முக்கியக் காரணம். அப்போ முப்பது அடி ஆழத்துலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். தண்ணியை இறைக்கிற ஆளுங்களுக்கு இயற்கையாகவே சிக்ஸ் பேக் இருந்துச்சு.

எங்களுக்கும் விவசாயம்தான் தொழில். எங்க அப்பா சாமு விஜயதேவர், சொசைட்டித் தலைவரா இருந்தவரு. ஊர்ல எடுக்கவேண்டிய முக்கிய முடிவுகளை எங்க அப்பாவைக் கேக்காமல் எடுக்கமாட்டாங்க. எங்க ஊர்ல வெள்ளாடுகளை யாரும் வளர்க்கிறதில்லை. பக்கத்து வீடுகள்ல இருக்கிற செடிகளை மேய்ஞ்சு அடிக்கடி ஊருக்குள்ள சண்டை வந்துட்டு இருந்ததால ஊர்க்காரங்கள்லாம் ஒண்ணுகூடிப் பேசி இப்படி முடிவு எடுத்தோம். அதேமாதிரி ஊருக்குள்ளே யாரும் எரிசாராயம் காய்ச்சக் கூடாது. மீறிக் காய்ச்சுறவங்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.

எங்களுக்குப் பக்கத்துலேயே இருக்கிற பெரிய ஊர்னா, அது பாப்பாநாடுதான். அவசியமான பொருட்களை எல்லாம் அங்கேதான் வாங்குவோம். சின்ன வயசுல பாப்பாநாடு சாமி தியேட்டர்தான் எனக்கு எல்லாமே. பல நாள் ராத்திரி, பசங்களோட சேர்ந்து போய் படம் பார்ப்போம். அப்போ எங்க ஊர் டீக்கடை குவளைகள்ல சாதி வேறுபாடு இருந்தது. ஆனா, அந்த தியேட்டர்ல அப்படி ஒரு வேறுபாடு கிடையாது. எல்லா பிரிவினரும் ஒரே இடத்துல ஒரே மாதிரியான கிளாஸ்ல டீ குடிப்போம்.

ஒரு கார்த்திகை மாசம் ராத்திரியில நல்ல மழை. அப்போ நானும் எங்கம்மாவும் மொச்சு ஓடை பக்கத்துல இருந்த எங்க வயல்ல வேலை பார்த்துட்டு நனைஞ்சுட்டே வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்கு வந்ததும்தான் அம்மா கம்மலைக் காணோம்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் கம்மலைத் தேட வயலுக்குப் போனோம். அங்கே போனா வயல் முழுக்க வெள்ளம். என்னைக் கரையில உட்காரவெச்சுட்டு இடுப்பு வரைக்கும் ஆழம் இருக்குற அந்த இடத்துல கொட்டுற மழையில் ஒத்தைக் கம்மலை ரொம்ப நேரம் தேடினாங்க. அந்தக் கம்மல் அவங்களுக்குக் கிடைக்கலை. அந்தச் சம்பவத்தை என்னால மறக்க முடியாது.

ஒருநாள் ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருக்கும்போது, எங்க அம்மா என் போர்வையை உருவிப் போத்திக்கிட்டாங்க. கண்முழிச்சுப் பார்த்த நான், அம்மாகிட்ட சண்டை போட்டு போர்வையைப் புடுங்கிப் போத்திக்கிட்டுத் தூங்கிட்டேன். விடிஞ்ச பிறகுதான் ராத்திரி எங்க அம்மா உடம்புக்கு முடியாம இருந்தது தெரிய வந்துச்சு. அவங்களை எங்க அண்ணன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனார். ஆனா, எங்க அம்மா ஆஸ்பத்திரி போற வழியிலேயே இறந்துட்டாங்க. ஏற்கெனவே அப்பாவை இழந்திருந்த எனக்கு, அம்மாவோட இழப்பு ரொம்ப பாதிச்சது. இன்னைக்கும் நான் ராத்திரி தூங்கப் போகும்போது போர்வையை எடுத்தா அம்மா ஞாபகம் வந்துடும். ஒருவேளை அன்னைக்கு நான் போர்வையைக் கொடுத்து இருந்தேன்னா, அவங்க பிழைச்சிருப்பாங்களோ என்னவோ? அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனசுல இருக்கு.

அப்புறம் அம்மாவோட போட்டோவை என்லார்ஜ் பண்றதுக்காகப் போனப்பதான் எனக்கு போட்டோகிராஃபி அறிமுகமாச்சு. அதன் பிறகு சினிமா ஆர்வத்தால சென்னை வந்த நான் இங்கேயே தங்கிட்டாலும் இன்னும் என் ஊரை மறக்கலை.


'மருதநாயகம்' பட டிரைலர்ல கமல் சொல்வாரே... 'மருதநாயகம் என் பெயர்... என் பெயர்களில் ஒன்று!'ன்னு. அப்படித்தான் காதல் அதன் பெயர்களில் ஒன்று. அன்பு, காமம், நேசம், பாசம்னு எத்தனையோ பெயர்களைச் சூடி அலையுற ஃபீல் அது. என்னைக் கேட்டா அது பெயரிட முடியாத உணர்ச்சி. 'கடல் பார்த்தியே... எப்பிடி இருந்துச்சு?'னு குழந்தையிடம் கேட்டா, அப்படி இப்படி குதிச்சு, பெருசா முழிச்சு, கையை விரிச்சு, 'அது... அது... இப்பிடி இர்ந்துச்சு'ன்னு அந்தக் குழந்தை என்னவோ சொல்ல ட்ரை பண்ணுமே... கடலைவிட அது அழகா இருக்கும். காதல் என்கிற உணர்ச்சியும் அப்படித்தான்... சொல்ல முடியாது. சொல்லியும் தீராது. காதலிச்சா... அழகு. ஃபீல் பண்ணா... பேரழகு!

எனக்கு முதல் காதல் வந்தது எங்க டிராயிங் டீச்சர் மேல. ப்ளாக் போர்டுல வாத்தியார் எழுதிட்டுப் போன பின்னாடி, கீழே சாக்பீஸ் தூளா கொட்டிக் கிடக்குமே... அப்படி என் ஞாபகத்துல அந்தப் பிரியம் கொட்டிக்கிடக்கு. தஞ்சாவூர் பக்கத்துல உரந்தராயன்குடிக்காடுங்கிற ஊர்ல ஆறாவது படிச்சப்போ ஸ்கூலுக்கு புதுசா ஒரு டீச்சர் வந்தாங்க. அவங்களே ஒரு ஓவியம் மாதிரி வந்தாங்க. நிறைய பேருக்கு முதல் காதல் டீச்சர் மேல வருதே... அது ஏன்னு இப்போ யோசிக்கிறேன். அம்மா, அக்கா, தங்கச்சி, தோழிங்கன்னு பெண்கள் புழங்குற குட்டிப் பையனோட உலகத்துல அதிசயம் மாதிரி வர்றது ஒரு டீச்சர்தான். அவங்க கொண்டுவர்ற குடை, ஹேண்ட் பேக், பூ போட்ட கர்ச்சீப், அந்த குட்மார்னிங், ஆதுரம், கம்பீரம்... இதெல்லாம் அவங்களைத் தேவதை மாதிரி காட்டுது. அந்தக் காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை... கை, கால், காது, மூக்கு எதுவும் இல்லை. காத்து மாதிரி இருக்கும். ஒருநாள் அந்த டீச்சர் வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிட்டாங்க. இப்பவும் என்னிக்காவது, எங்கேயாவது டீச்சரைப் பார்த்து தப்பா குட்மார்னிங் சொல்லி, தலையில குட்டு வாங்கணும்னு ஆசையா இருக்கு!

ஸ்கூலுக்குப் போய் வரும்போதெல்லாம் கூடவே வந்த குட்டிப் பொண்ணோடதான் என் ரெண்டாவது காதல். எலந்தப்பழம் பொறுக்கி மடியில கட்டிட்டு வர்ற புள்ள என்னை மட்டும் தனியாக் கூப்பிட்டு, 'எவனுக்கும் குடுக்கக் கூடாது பார்த்தியா... நீ தின்னு!'ன்னு குடுத்தப்பதான் காதல் வந்திருக்கணும். சேமியா ஐஸ், நவ்வாப்பழம், ஜவ்வு மிட்டாய்னு பரிமாறிக்கிறதே பாதிக் காதல். பொசுக்குனு ஒரு முத்தம் குடுத்துட்டு ஓடிரணும்னு 'பருத்திவீரன்' ஸீன் தோணினதெல்லாம் அந்த வயசுலதான். அந்தப் புள்ள இப்போ எங்கே இருக்கும்னு தெரியாது. அங்கேயே அக்கம்பக்கத்தில் இருந்தா, இப்போ அதோட பிள்ளைங்க தஞ்சாவூர் செயின்ட் ஆன்டனிஸ்லயோ, ப்ளாக் மேக்ஸ் ஸ்கூல்லயோ படிப்பாங்க. ஐஸ்க்ரீம், சாக்லெட்னு வாழ்ற அதோட பிள்ளையைப் பார்த்தா, கை நிறைய எலந்தப்பழம் வாங்கித் தரணும்.

எட்டாவது படிக்கும்போதே, அம்மா, அப்பாவை இழந்தவன் நான். ஒரு நாள் நைட் சென்னைக்கு ஓடிவந்துட்டேன். கஷ்டப்பட்டேன்னு கதை சொல்லலை. கஷ்டப்படாம வர்றதுக்கு நாம என்ன அம்பானி குடும்பமா... எல்லாத்தையும் தாண்டி சினிமா கனவு. முட்டி மோதி மூச்சு திணறிட்டு இருந்தப்ப ஆக்ஸிஜன் மாதிரி அடுத்த காதல்.


கே.கே.நகர்ல பேச்சுலரா தங்கியிருந்தப்ப, எதிர் வீட்டில் இருந்துச்சு அந்தப் பொண்ணு. 'மரோசரித்ரா' மாதிரி ஜன்னலைத் திறந்தா, பல்பெரிய நிக்கும். நான் டீ குடிக்க இறங்கினா, அது குப்பை கொட்ட இறங்கும், நான் படிக் கட்டில் உட்கார்ந்திருந்தா, வேகமா சைக்கிள் பெல்லை அடிக்கும். நான் அசிஸ்டென்ட் கேமராமேனா அலைஞ்சுட்டிருந்த நேரம். லென்ஸ் மாத்தி, ஃபில்டர் போட்டு, ரிஃப்ளெக்டர் வெச்சுனு எப்படி லைட் பண்ணியும் நம்ம வாழ்க்கை ஹாஃப் லைட்ல இருந்த நேரம். ஒரு நாள் திடுதிப்னு வந்து, 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'ன்னு கேட்டா. என்ன சொல்றது... மொத்தக் கஷ்டத்தையும் சொல்லி வேணாம்னு அனுப்பிவெச்சேன். சிக்னல்ல, ஓட்டல்ல, தியேட்டர்ல அந்தப் பொண்ணை அம்சமா ஒரு கணவன், கொழுகொழுன்னு ஒரு குழந்தையோட பார்க்கணும். 

அடிச்சுப் பிடிச்சு ஒரு பிழைப்பைப் பிடிச்சுட்டேன். அசோஸியேட் கேமராமேனாகி கொஞ்சம் காசும் கௌரவமும் வந்த பிறகுதான் சொந்த ஊருக்குப் போனேன். பத்து வருஷம் கழிச்சுப் போய் நின்னா, பாதிப் பேர் நம்பலை, பாதிப் பேர் பேசலை. 'என்னடா இது?'ன்னு மனசு கனத்து நின்னப்ப, 'சௌக்கியமா?'ன்னு கேட்டது ஒரே ஒரு குரல்தான். அது ஷர்மிளாவோடது.



அடுத்த ஊர்ப் பொண்ணு. பக்கத்துல இருந்த வல்லம் காலேஜ்ல இன்ஜினீயரிங் பண்ணிட்டிருந்துச்சு. அப்போ அந்த ஊர்ல ஒரு பொண்ணு இவ்வளவு பெரிய படிப்பு படிக்கிறதே ஆச்சர்யம். என்னை ரொம்ப மெச்சூர்டா, ஆறுதலா விசாரிச்சு பேசுனது ஷர்மிதான். பழகப் பழக, நான் தேடின மொத்தக் காதலையும் ஷர்மிதான் இந்த பூமிக்கு எடுத்துட்டு வந்திருக்குன்னு தோணுச்சு. நான்தான் காதலைச் சொன்னேன். 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டேன். ஒரு நிமிஷம் பார்த்தது... ரெண்டு நிமிஷம் யோசிச்சது, நாலாவது நிமிஷம் நல்ல சிரிப்போட சம்மதிச்சது.

விஷயம் தெரிஞ்சு அவங்க வீட்ல பெரிய பிரச்னை. என்ன பண்றதுன்னு தெரியாம, ஒரு நாள் யாருக்கும் தெரியாம நாங்க ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு 'அலைபாயுதே' மாதிரி ஷர்மி அவங்க வீட்லேயும் நான் சென்னையிலேயும்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம். ரொம்ப கனமான காதல் போராட்டம் எங்களோடது. நான் தொழிலைத் துரத்திட்டு ஓடினேன். ஓயாம நின்னு ஒரு இடத்தைப் பிடிச்சேன். அவங்க வீட்ல சமாதானம் பண்ணி, அவங்க குடும்பத்தோட ஒரு நாள் சந்தோஷமா என் வீட்டுக்கு வந்துச்சு ஷர்மி. அந்த நாள்தான் எங்களுக்கு காதலர் தினம். இப்போ எங்க காதலுக்கு ஆசீர்வாதம் மாதிரி தர்ஷனா வர்மன், அர்ஜித் வர்மன்னு ரெண்டு பிள்ளைங்க.

இப்போ யோசிக்கும்போது நாங்க கொஞ்சம் அவசரப்பட்டோமோனு தோணுது. ரகசியமாப் பண்ணிக்காம, பொறுத்திருந்து பெத்தவங்க சம்மதத்தோட ஊர் பார்க்க, உறவு வாழ்த்த, கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு தோணுது. ஏன்னா, காதலோட பெரிய சந்தோஷம்... நம்மளைப் பெத்தவங்களோட சம்மதம்தான்.

நாளைக்கு என் பிள்ளைங்க லவ் பண்ணிட்டு வந்து நின்னா, அவங்க தலை வருடிச் சொல்வேன்... 'நல்லாயிருங்க..!'

எங்க ஊர்ல இருக்கிற எல்லாருக்குமே என்னைத் தெரியும். ஆனா, எங்க ஊர்க்காரங்கள்ல எத்தனைப் பேரை எனக்குத் தெரிஞ்சிருக்குஙம்கிற வருத்தம் இருக்கு. ஒரு அழகான ஊரையும் அங்கே இருக்கிற ரம்மியமான வாழ்க்கையையும் மிஸ் பண்ணிட்டு நாம வாழ்ந்துட்டு இருக்கோம் என்ற வருத்தமும் மனசுல இருக்கு. அதனாலேயே இப்பவும் நான் கடைப்பிடித்துவரும் கிராமத்து பழக்க வழக்கங்களும் குணங்களும் என்னோடு நின்றுவிடாமல் இருக்க, என் குழந்தைகளுக்கும் தவறாமல் கற்றுக்கொடுத்து வர்றேன்!''



இயக்குநர்கள், ரசிகர்கள் உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் போது, தமிழில் பணியாற்றுவதை குறைத்துக் கொண்டது ஏன்...?

பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். எனக்கு நதி மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அது என் இயல்பு. உங்களைப் போலவே இப்படிக் கேள்விகள் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு. அவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. அதற்குக் காரணம், என் பயணம் பெரிதாகி கொண்டே இருக்கிறது. நான் ஓர் இடத்தில் இல்லை. எனக்கு உலகத்தைச் சுற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. மொழிகள் கடந்து சுற்றி வரும் பாக்கியம் ஒரு கொடுப்பினை. அது எனக்குள் உருவாக்கும் தொடுவானங்கள் அதிகம். என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் கூட வரும். அதனால்தான் அதிகமாக இங்கே பார்க்க முடியவில்லை. நிறைய இயக்குநர்கள் பேசுகிறார்கள். பார்க்கலாம்! 

இயக்குநராகவும் வெளிப்பட்டு இருந்தீங்க.. அது குறித்த திட்டம் அடுத்து என்ன இருக்கிறது...? 

அது பெரும் அனுபவம். ஜென்மத்துக்கும் அந்த அனுபவத்தை மறக்க மாட்டேன். உள்ளுக்குள் ஒரு ஈகோ, கழுமரத்தில் ஏற்றின மாதிரி என் திமிரு... இதுவெல்லாமும்தான் அந்த தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன். வெற்றி கிடைத்திருந்தால் இன்னும் ஈகோ, திமிரு வந்து சேர்ந்திருக்கும். வெற்றி கிடைக்காதது ஒரு வகையில் நல்லதுதான். ஒரு தோல்விதான் பெரும் அனுபவங்களை அள்ளித் தந்திருக்கிறது. "மாஸ்கோவின் காவேரி' இன்னும் அழகான, தரமான படைப்பாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய படம்தான். அதற்காக இப்போது வருத்தப்பட்டு பயன் இல்லை. இனி வருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு இன்னும் பத்து ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனாலும் பரவாயில்லை. தோல்விதான் தத்துவத்தை உருவாக்குகிறது.



தமிழ் சினிமாவை கவனிக்கிறீங்களா...?

ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றிப்போய்ப் படம் செய்வது மட்டும்தான். அதைப் புரிந்து கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். "பருத்தி வீரன்', "பிதாமகன்', "ஆடுகளம்', "விண்ணைத் தாண்டி வருவாயா', "ராஜா ராணி' இந்தப் படங்கள் எல்லாம் ஒளிப்பதிவில் கவர்ந்திருந்தது. இதில் பணியாற்றிய கலைஞர்களின் பொறுப்பு பிடித்திருந்தது. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். அந்த வகையில் "ஜிகர்தண்டா', "காக்கா முட்டை', "துருவங்கள் பதினாறு' என நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. ரசிகனுடைய ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும். வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை ரசிகர்கள் புரிந்து கொள்வதும் மிக முக்கியம். ரசிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும். ஏனென்றால், சுனாமி வந்து லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்த பொழுதிலும், இங்கே அரங்கு நிறைந்த ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் சினிமாவின் பலம். 

தஞ்சாவூரில் இருந்து கிளம்பி வந்து ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட வாழ்க்கை உங்களுடையது.... இந்த சினிமா அனுபவம் எப்படி இருக்கிறது....?
ரொம்ப அற்புதமாக இருக்கிறது. யாருக்கும் கிடைக்காத ஒரு பயணம். அதில் வறுமை,  வலி, சந்தோஷம் என்று அனுபவங்கள் நிறைய உண்டு. என் சிந்தனையை மாற்றிய பல விஷயங்கள் இருக்கின்றன. நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்களும் உண்டு. இதில் என் தனித்துவத்தை உணர வைத்த, உணர்ந்த நிமிஷங்களும் உண்டு. 87-களில் சென்னைக்கு வந்து, மும்பை வரைக்கும் போவதற்கும், மும்பையிலிருந்து ஹாலிவுட் வரைக்கும் போவதற்கும் 30 வருஷங்கள் ஆகி விட்டது. இதை நினைத்துப் பார்க்கும் போது இன்னும் 30 வருடங்களுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டும் என்று 
தோன்றும். சில நேரங்களில் சோம்பேறித்தனம் கூட வரும். இப்போதும் பாதி தூக்கம்தான். சில நேரங்களில் அது கூட கை கூடி வராது. இன்னும் நேரம் இருக்கிறது.



இதுவரை தன்னுடைய வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் அனுபவங்களையும்கொண்டு 'யாவரும் கேளிர்’ எனும் புத்தகத்தை எழுதி முடித்து இருக்கும் ரவிவர்மன், விரைவில் அதை வெளியிட இருக்கிறார்.

Awards and Honours

• 23rd EME France Film Festival Best Cinematographer Award for Santham Malayalam (2000)
• Filmfare Best Cinematographer Award for Anniyan (2006)
• Tamil Nadu State Film Award for Best Cinematographer for Vettaiyaadu Vilaiyaadu (2007)
• Vikitan Best Cinematography Award (south) for Vettaiyaadu Vilaiyaadu (2007)
• ITFA Best Cinematographer Award for Dasavathaaram (2009)
• Star Guild Awards for best cinematography for Barfi! (2012)
• Screen Awards for best cinematography for Barfi! (2012)
• TOIFA Awards for best cinematography for Barfi! (2012)
• IIFA Awards for best cinematography for Barfi! (2012)
• Zee Cine Awards for best cinematographer award for Goliyon Ki Raasleela Ram-Leela (2014)
Best Cinematography : Ravi Verman for Kaatru Veliyidai(2018)
• Vijay Award for Best Cinematographer- Kaatru Veliyidai
• Siima Award for Best Cinematographer- Kaatru Veliyidai
As director

• Moscowin Kavery (2010)
• Treasure Music Video (2011) Also as Cinematographer and Lyricist
As producer

• Azhagu (2010)
• Vellaiya Irukiravan Poi Solla Maatan (2015)
Films
Year Film

1999 Jalamarmaram
2000 Sathyam Sivam Sundaram
2000 Santham
2001 Valliettan
2001 Vakkalathu Narayanankutty
2002 Five Star
2003 Yeh Dil
2003 Jai
2003 Armaan
2003 Kilichundan Mampazham
2003 Bee Busthar
2004 Five by Four
2004 Phir Milenge
2004 Autograph
2005 Anniyan
2005 Ramji Londonwale
2006 Vettaiyaadu Vilaiyaadu
2008 Dasavathaaram
2009 Villu
2010 Kandahar
2011 Badrinath
2012 Barfi!
2013 Goliyon Ki Raasleela Ram-Leela
2015 Tamasha
2017 Kaatru Veliyidai
2017 Jagga Jasoos
2017 Heartbeats
2018 Sanju
2019 Indian 2
2019 Kolaambi
As Guest Cinimatographer 

1997 Vaali
2001 Minnale
2011 7aum Arivu


வெள்ளி, 18 அக்டோபர், 2019

விஞ்சிராயர்



விண்னையும் மண்னையும் விஞ்சியவர்கள் என்பது இவர்களின் சிறப்பு. விஞ்சிராயர் என்ற கள்ளர் மரபினர் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்பாக வாழ்கின்றனர்.


விச்சியர் குடியில் வந்தோன், விச்சிமலையைத் தன்னகத்தே கொண்ட நாட்டு அரசன் மூவேந்தரையும் வென்று தம் தலைநகரான குறும்பூரில் வெற்றி விழாக் கொண்டாடினர் விச்சியர் எனப் பரணர் பாராட்டி யுள்ளார். விச்சியரை, சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொண்டான் எனப் பதிற்றுப் பத்துப்பதிகம் கூறுகிறது.



விச்சிக்கோ வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். அது புலியை எதிர்த்துச் சிறுவன் ஒருவன் போரிடுவது போல இருந்ததாகக் குறும்பூர் மக்கள் பேசிக்கொண்டனர். (குறுந்தொகை 328)

வாட்போரில் வல்லவன் விச்சிக்கோ. அவனுடைய இளவல், இளவிச்சிக்க்கோ என அழைக்கப்பட்டான். கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோவின் இனை பிரியா நண்பனாக விளங்கியவன்.

குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கியவன் விச்சிக்கோ. பாரி இறந்தானாக அவன் மகளிர்க்கு மணஞ் செய்து வைக்கும் பொறுப்பை யேற்ற கபிலர் அம் மகளிரை அழைத்துக் கொண்டு விச்சிக்கோன் அவைக்கு வந்தார். பாரி மகளிரை மணந்து கொள்ளும் மாண்புடையான் அவன் என்று எண்ணினார் கபிலர். ஆனால், மூவேந்தர்க்கும் பகை வனாய பாரியின் மகளிரை மணந்தால். அப் பேரரசர் பகைப்பர் என அஞ்சி விச்சிக்கோன் அம் மகளிரை மணக்க ஒப்பவில்லை.


ச், ஞ் என்னும் இரண்டும் நாக்கின் நடு மேல்வாயின் நடுவைப் பொருந்த உருவாவதால் ச், ஞ் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.

விஞ்சைப்பதி விஞ்சை வேந்தர் (சீவக. 816)



ஏடு எடுத்து தந்த ஏந்தல், முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி இரகுநாத ராசாளியார் தனது இளமை காலத்தில், பச்சைக்கோட்டையில் விஞ்சிராயர் என்பவரிடம் 8 ஆண்டுகள் குருகுலவாசம் இருந்து பயின்றார். வள்ளல் ராசாளியாரின் 99ம் ஆண்டு புகழ்அஞ்சலி நிகழ்ச்சியில் (06.04.2019 ) நீலலோசனி இதழ் ஆசிரியர் சதாசிவ விஞ்சிராயர் ராசாளியாரை இவ்வாறு புகழ்கிறார்.



நிலந்தனிலே ராசாளி, நிதிதனந்தினலே ராசாளி;
குலம் தனிலே ராசாளி கோபாலசாமி ரகுநாத ராசாளி




பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயர் வீட்டில் விருந்தோம்பல்

பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயருடன் கணேசன் கருப்பூண்டார், சோமசுந்தர தேவர், கிருபாகரண் இராசகண்டியர், கோபூ வல்லுண்டார் மற்றும் மதன்மோகன் விஞ்சிராயர்

கள்ளர் சமுதாய பணி செய்துவரும் சு.தட்சிணாமூர்த்தி விஞ்சிராயர்,    தெற்குத் தெரு, பூண்டி. பாபனாசம் தாலுக்கா.    தஞ்சாவூர்  பகுதியில் வாழ்கின்றார். சொந்த ஊர் பூண்டி, தந்தை பெயர் சுந்தரம் விஞ்சிராயர். பணி :விவசாயம், கட்டிட கட்டுமானம் மற்றும் சினிமா திரைப்பட துறை.


உணவு துறை அமைச்சர் திரு இரா.காமராஜ் காளிங்கராயர்

 



ஆர். காமராஜ் காளிங்கராயர்  2011 ஆண்டு சட்டப்பேரவைக்கு நன்னிலம் தொகுதியில் தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். திருவாரூர் மாவட்ட கழக செயலாளர். 2016 ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மன்னார்குடி மிசா கு.பாலகிருஷ்ணன் ஆர்சுத்தியார்



அரசு பணியை துறந்து பொதுவாழ்வில் ஈடுபட்ட மிசா கு. பா, 1948ல் திராவிட இளைஞர் குழுவில் தொடங்கியது பொது வாழ்வு பயணம். 1950ல் மாணவர் தி.மு.க. 1954 - 1959 கழகத்தின் மன்னை நகர கழக செயலாளர், தொடர்ந்து 1969வரை வட்ட செயலாளராக நம் பகுதி கழக வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பத்து ஆண்டுகள் வட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்று கிளை கழகங்களை உருவாக்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாராட்டையும் பெற்றவர்.

1964ல் மன்னை நகர்மன்ற முதல் ஒரே திமுக உறுப்பினராக வெற்றி பெற்றவர். 1969 தொடங்கி 1983 வரை பொதுக்குழு உறுப்பினர். 1970 - 1978 வரை கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். மன்னை சட்டமன்றத்தின் முதல் திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1976 வரை சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். ஒருங்கிணைந்த தஞ்சையின் மாவட்ட திமுக பொருளாளர். ஆரூர் மாவட்ட கழக அவைத் தலைவராக பணியாற்றியவர். 1962 ல் விலைவாசி உயர்வு போராட்டத்திற்காக மூன்று மாதங்கள் கடுங்காவல், 1969 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காகவும் சிறை.

1976ல் மிசா சட்டத்தில் ஓராண்டு சிறை.

இயக்கம் வளர்த்த தீரர் ஆகஸ்ட் 05, 2013, தனது 80 வது வயதில் காலமானார். 



















கு. பா . தமிழழகன்



கு.பா. பாபு


கு. பா. தமிழ் அழகரசன்