திங்கள், 12 மார்ச், 2018

தஞ்சை கள்ளர்நாடு ஒரத்தநாடு - கள்ளர் நாடு





ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது. இதனை முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. 

இத்தொகுதியில் "தி.மு.க., காங்கிரஸ் & அ.தி.மு.க" என பல கட்சிகள் போட்டியிட்டு அதில் கள்ளர் குடியில் பிறந்த வெற்றி வேட்பாளர்கள்.


திரு எல்.கணேசன் கண்டபிள்ளை (1967, 1971 & 1989),

திரு டி.எம்.தைலப்பன் மல்லிகொண்டார் (1977),

திரு த.வீராசாமி அதியமான் (1980, 1984),

திரு அழகு.திருநாவுக்கரசு சேண்டப்பிரியர் (1991),

திரு பி.ராஜமாணிக்கம் தேவர் (1996),

திரு ஆர்.வைத்திலிங்கம் சேதுராயர் (2001, 2006 & 2011)"

திரு. எம். ராமச்சந்திரன் சாளுவர் (2016)
ஆகியோர்கள் "சட்டமன்ற உறுப்பினர்களாக" வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்களில் திரு எல்.கணேசன் கண்டபிள்ளை அவர்கள் மூன்றுமுறையும்,

திரு ஆர்.வைத்திலிங்கம் சேதுராயர் அவர்கள் தொடர்ச்சியாக மூன்றுமுறையும் இத்தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளனர்.