ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

முனையரையர் / முனையதிரியர் / முனையதரையர் மரபினர்



முனையரையர் / முனையதிரியர் / முனையதரையர் கள்ளர் மரபினரின் பட்டங்களில் ஒன்று.

பல்லவர் காலத்தில் தென் ஆர்காடு . மாவட்டத்திலுள்ள திருமுனைப்பாடி நாட்டை ஆண்டோர் முனையரையர் . சுந்தரரை  வளர்த்தவர் நரசிங்கர் முனையரையர். முனையரையர் பட்டமுடைய கள்ளர் இவன் வழியினராவர். இன்றும் சோழமண்டலத்தில் செல்வச் செழிப்புடனும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதார நூல்: ஆய்வு கோவை - பக்கம் 482  -நூல் ஆண்டு 1977


இந்திய விடுதலைப் போராளிகள்


முனையரையர் / முனையதிரியர் / முனையதரையர் மரபினரில் தொழில், அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

1) மக்கள் செல்வர் TTV தினகரன் முனையரையர்
2) முனைவர் ராமநாதன்  முனையரையர்
3) மாமன்னன் ராசராசன் விருது பெற்ற தஞ்சை வெற்றி பிரஸ் திரு.பக்கிரிசாமி முனையதிரியர்
4) T. K. தங்கவேல் முனையதரையர்


திருச்சி கூத்தாப்பல் கள்ளர்நாடு
 
தலைமை கிராமம்:  கூத்தைப்பார், 

பொதுகோவில்: ஆனந்தவள்ளி உடனுறை மத்யாச்சுனேஸ்வரர் கோவில். 

மொத்தம் ஐந்து கரைகள் உள்ளன. 

நான்காம் கரை: முனையதிரியர், கார்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்.

கெடிலக்கரை சார்ந்த திருமுனைப்பாடி நாட்டைப் பல்வேறு காலங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். பல்வேறு மரபுகளைச் சேர்ந்த பேரரசர்கள் நேரடி ஆட்சி புரிந்திருப்பதன்றி, பேரரசர்களின் கீழ்ப் பல்வேறு மரபுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் செங்கோல் செலுத்தியுள்ளனர்; அவர்களுள் ஒருவர் நரசிங்க முனையரையர் என்பவர். இவர் நரசிங்க முனையர் எனவும் அழைக்கப்படுவதைப் பெரிய புராணத்தில் காணலாம்.

நரசிங்க முனைரையரின் குலமரபின் பெயர் 'முனைய தரையர்' என்பதாகும்; 

இது, 'முனையரையர்” எனவும், 'முனையர்’ எனவும் முனையதிரியர் பின்னர் மருவிற்று. இம்மரபு குறுநில மன்னர் மரபாகும்

கொடி - இலச்சினை. சிங்கம்; 

நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி என்னும் நாட்டுப் பகுதியை அரசாண்டதாகச் சேக்கிழார் தெரிவித்துள்ளார்:

"தேடாத பெருவளத்தில் சிறந்த திரு முனைப்பாடி நாடுஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்' என்பது பெரிய புராணப் பாடல். 

‘முனைப்பாடி என்ற நாட்டின் பெயருக்கும் முனையரையர்' என்னும் அரச மரபின் பெயருக்கும் பெரிய புராணம் - நரசிங்க முனையரையர் - சொல் அளவிலேகூட மிக்க தொடர்பு இருப்பதைக் காணலாம். முனையரையர்கள் ஆண்டதால் 'முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் அல்லது, முனைப்பாடி நாட்டை யாண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். 

சோழர்களால் கட்டப்பெற்ற, முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் திருப்பணிகள் செய்யப்பட்ட திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் டிரஸ்டி  T. K. தங்கவேல் முனையதரையர்


மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் அறங்காவலர் கதிவேல் முனையதிரியர்





மக்கள் செல்வர் TTV தினகரன் முனையரையர் அவர்கள் முனையராயர் மரபில் வந்தவர்.


பாண்டியர் வழி மன்னர் பூஞ்சோலை தம்பிரான் கட்டிய கோயில் "கூடல் அழகிய பெருமாள் கோயில்" ஆகும்.இந்த கோயிலை 2004-ல் மறு சீரமைப்பு செய்தார்கள். இதற்கு TTV. தினகரன் 4 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து உள்ளார். 








1026 வது சதயவிழாவில் மாமன்னன் ராசராசன் விருது பெற்ற தஞ்சை வெற்றி பிரஸ் திரு.பக்கிரிசாமி முனையதிரியர்







முனையராயர் என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்று . இன்றும் சோழமண்டலத்தில் புகழோடும் , செல்வ செழிப்புடன் வாழ்கின்றனர். 


முனையந்திரியர் வகையறா




நரசிங்க முனையரையர், திருநாவலூரில் பிறந்த நம்பியாரூரர் என்னும் சுந்தரரைத் தம் செல்லப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார் எனப் பெரியபுராணம் தெரிவிக்கிறது.




சுந்தரருங்கூட, தமது தேவாரத்தில் திருநாவலூர்ப் பதிகத்தின் இறுதிப் பாடலில், நரசிங்க முனையரையர் திருநாவலூரில் இருந்து இறைபணி புரிந்தார்’ என்னும் செய்தியைத் தெரிவித்துள்ளார். அப் பாடல் வருமாறு:

"நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன் ஆதரித்தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூரென் றோதநற் றக்கவன் றொண்டன் ஆரூரன் உரைத்ததமிழ் காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினைக் கட்டறுமே.”

'திருநாவலூர், இறைவன் எழுந்தருளியுள்ள ஊராகும்;

என்னுடைய ஊருமாகும்; நரசிங்க முனைய ரையன் இறைவனுக்கு ஆட்செயும் ஊருமாகும்’ எனச் சுந்தரர் கூறியுள்ளார். இதன் வாயிலாக, திருநாவலூர்க்கும் நரசிங்க முனையரையர்க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புலப்படும்.

பண்டு நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக அடிபடுகிறது. நதிருநாவலூரோடு நரசிங்க முனையரையர்க்கு இருந்த தொடர்பினை, திருநாவலூர்க் கோயிலில் அவருக்குச் சிலை இருப்பதைக் கொண்டும் அறியலாம். 


மற்றும், முனையரையர் மரபினர் நரசிங்கன் முனையரையர், இராமன் முனையரையர் என்னும் இரு பட்டப் பெயர்களையும் மாறி மாறி வைத்துக் கொண்டு நரசிங்க முனையரையர், இராம முனையரையர் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 


இச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என நுனித்துணரலாம். 

திருநாவலூரில் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள சிறிது மேடான நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் கச்சேரி மேடு என அழைக்கின்றனர். 'கச்சேரி” என்பது அரசனது திருவோலக்க அவையைக் குறிப்பதாகும். அவ்விடத்தில் அரசவை கூடி அரச வினைகள் ஆராயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கே அரசவை கூடிற்றென்றால், அதுதானே அரசனது தலைநகராய் இருந்திருக்கக்கூடும்! எனவே, நரசிங்க முனையரையர் சுந்தரரைப் பிள்ளையாக எடுத்து வளர்த்த செய்தியைக் கொண்டும், கச்சேரி மேடு என்னும் பழைய வழக்காற்றுப் பெயரைக் கொண்டும், திருநாவலூர் நரசிங்க முனையரையரின் தலைநகராயிருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். 

கெடிலத்தின் வடகரையில் உள்ள திருநாவலூருக்குத் தென் மேற்கே 4 கி.மீ. தொலைவில் - கெடிலத்தின் தென்கரையில் சேந்த மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. நரசிங்க முனையரையருக்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்ட கோப்பெருஞ் சிங்கன் என்னும் வலிய மன்னனுக்குத் தலைநகராக விளங்கிய ஊர் இது. பாழடைந்த கோட்டை ஒன்றை இன்றும் இவ்வூரில் காணலாம். இந்த ஊர் தான் நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. திருநாவலூர்க் கோயிலில் பூசனை புரியும் பெரியார் ஒருவர் இந்தக் கருத்துப்பட என்னிடம் சில கூறினார். சேந்த மங்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருத்தலானும், திருநாவலூருக்கு மிக அண்மையில் இருத்தலானும், இந்தக் கருத்தில் உண்மையிருக்க முடியும். அடுத்தடுத்துள்ள சேந்த மங்கலத்தில் அரசரது அரண்மனையும், திருநாவலூரில் அரசவை கூடும் மாளிகையும் இருந்திருக்கலாம். சேந்த மங்கலம் திருநாவலூர் உட்பட 10 கி.மீ. பரப்புக்குத் தலைநகரப் பகுதி விரிந்திருக்க வேண்டும் அவ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்த போதிலும், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகரப் பகுதி என்று பொதுப்படையாகக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.


நரசிங்க முனையரையர் சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்ததாக அறியப்படுவதால், இவரது காலம் சுந்தரர் காலம் என்பது புலனாகும். சுந்தரர் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இக் கால ஆராய்ச்சி குறித்து, ‘சுந்தரர்’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாகக் காணலாம். எனவே, நரசிங்க முனையரின் காலம், எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அரசர்க்கு அரசராய், அடியார்க்கு அடியாராய்த் திகழ்ந்து கெடிலக்கரை யீன்றளித்த செல்வமாய் விளங்கிய நரசிங்க முனையரையரைப் பற்றி, "இவர் காலம் ஒளவையார் காலம்; தந்தை தெய்வீக அரசன், தாய் பாண்டியன் குமரியாகிய காஞ்சனமாலை” என அபிதான சிந்தாமணியாசிரியர், கூறியிருப்பது ஆராயற்பாவது. மேலும் அந் நூலாசிரியர், 'சுந்தரரை எடுத்து வளர்த்த நரசிங்க முனையரையர் வேறு, சிவனடியார்க்குப் பொன் வழங்கிய நரசிங்க முனையரையர் வேறு என்று கூறியிருப்பதும் ஆராயத்தக்கது. மற்றும், 'நரசிங்கர்’ என்னும் பெயரைக் கொண்டு, இவர் பல்லவ மரபினரா யிருக்கலாம்.



திருநாவலூர்ச் சிவன் கோயிலின் பெயர்கள்: பக்த சனேசுவரர் கோயில், திருத்தொண்டீச்சுரம் என்பன. இறைவன் பெயர்: நாவலேசுரர்; அம்மன் பெயர், சுந்தரநாயகி, மனோன்மணி, மரம்; நாவல். பத்தாம் நூற்றாண்டின் நடுவில் (கி.பி. 935), முதல் பராந்தக சோழன் ஆண்டு கொண்டிருந்தபோதே அவன் மூத்த மகன் இராசாதித்த சோழன் திருநாவலூர்க் கோயிலின் உட்பகுதியைக் கருங்கல்லால் கட்டுவித்தான். அவனது திருப்பணியைப் பெற்றதனால் இக் கோயிலுக்கு இராசாதித் தேசுரம்' என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று திருநாவலூர் இராசாதித்தனது மேற்பார்வையில் இருந்ததால் இராசாதித்த புரம்' எனவும் அழைக்கப்பட்டது. 

பராந்தகன் சிறந்த அரசியல் நிபுணன் ஆதலின், தன் பேரரசைக் காக்க முன் ஏற்பாடு செய்திருந்தான். நடு நாட்டில் ஒரு நாடான திருமுனைப் பாடிநாட்டில் திருநாவலூரை அடுத்த ‘கிராமம்’ என்னும் இடத்தில் பராந்தகன் முதல் மகனான இராசாதித்தன் பெரும் படையுடன் இருந்து வந்தான். அப்படைக்கு ‘வெள்ளங்குமரன்’ என்னும் சேர நாட்டுத் தானைத் தலைவன் தலைமை பூண்டிருந்தான். அவன் கி.பி.943-இல் பெண்ணையாற்றங்கரையில் சிவனுக்குக் கோவில் ஒன்றைக் கட்டினான். திருநாவலூர் ‘இராசாதித்தபுரம்’ எனப் பெயர் பெற்றது. இராசாதித்தனுக்கு உறுதுணையாக அவன் தம்பி அரிகுல கேசரியும் உடன் இருந்தான்

இராசாதித்தன் 949ஆம் ஆண்டில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணதேவனைத் தக்கோலம் என்னுமிடத்தில் பொருது முறியடித்தான். ஆனால், முறியடித்த அன்றிரவே, இராட்டிரகூட மன்னனின் மைத்துனனாகிய கங்க குலத்துப் பூதுகன் என்னும் பூதராசன், சூழ்ச்சியினால் இராசாதித்தனைக் கொன்று விட்டான். இந்தச் செய்தி கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இராசாதித்தனுடன் தக்கோலம் வரை போர் புரியச் சென்ற படை மறவர்களும் - தலைவர்களும் மன்னனையிழந்து திரும்பி வருகையில் இராசாதித்தனால் கட்டப்பட்ட திருநாவலூர்க் கோயிலில் இறந்துபோன அவன் பெயரால் பல திருவிளக்குகள் ஏற்றுவதற்கு அறக்கட்டளைகள் ஏற்படுத்திச் சென்றதாகப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. 

திருநாவலூர்க் கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்களும் பலர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. தட்சணாமூர்த்தி இங்கே.நின்ற கோலத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.


சோழர் கால கல்வெட்டுகளில் முனையரையர் / முனையதிரியர் / முனையதரையர் மரபினர்  





நன்றி : கெடிலக்கரை நாகரிகம் - பேராசிரியர் புலவர் சுந்தர சண்முகனார்