திங்கள், 3 ஜூன், 2019

கீழக்குயில்குடி தொட்டையத்தேவன்

கீழக்குயில்குடி தொட்டையத்தேவன் - தன்னுடைய நேர்மைக்காக வீழ்த்தப்பட்டு
விதைக்கப்பட்ட ஒரு வீரனின் வரலாறு 



தான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளி என ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் தண்டனைக்கான அபராத தொகையை செலுத்திவிட்டு வெளியேற சொன்னார்களாம்.

அது சிறிய தொகையேனும் அவர் கட்ட மறுப்பு தெரிவித்துவிட்டார்.

செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று காவல் துறையை நோக்கியே கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மைக்காக உயிரே போனாலும் அபராதம் செலுத்தமாட்டேன் என்று உறுதியாக நின்று பின் காவல் துறையின் சூழ்ச்சியால் தண்டிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.

அவரின் நினைவாக மதுரை நாகமலைப்புதுக்கோட்டை, கீழக்குயில்குடி கிராமத்தில் நினைவாலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளளது.

இடம் : கீழக்குயில்குடி சமணர்மலை அருகில்

முழுமையான வரலாறு அறிய முடியவில்லை. இது ஒரு வாய்வழி வரலாறாக , அந்த கிராமத்தில் கூறப்படுகின்றது. 

ஆய்வு: திரு. கு. சுந்தரபாண்டிய தேவர்