வெள்ளி, 14 ஜூன், 2019

பண்டைய தமிழனின் எச்சம், கள்ளர் வீட்டு திருப்பூட்டல்




தற்போதைய நவீன யுகத்தில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் எச்சங்களை நாம் எங்கேயாவது அரிதாக பார்ப்பதுண்டு.

அப்படி தொல்லியல் துறையை நெகிழ வைத்த பண்டைய தமிழனின் எச்சமான கள்ளர் பெருமக்களின் திருப்பூட்டல் நிகழ்வு.

கிபி1924ஆம் ஆண்டு புதுக்கோட்டை கள்ளர் இனத்தை சேர்ந்த சாத்தப்பன் மகன் முத்தையாவிற்கும், ஒடப்பிலிருக்கும் கதிர்வேல் மகள் ஆராக்கும் நடந்த திருப்பூட்டல் நிகழ்விற்காக முகூர்த்த ஓலையை தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சேர்வை பட்டம் பூண்ட கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள்.

அப்படி தொல்லியல் துறை வியக்க காரணம் என்னவென்றால். அதில் திருமணம் நிச்சயிப்பதற்காக ஒரு பனை ஓலையில் மணமகன் மற்றும் மணமகளின் நட்சத்திரம் எழுதி அவர்கள் இருவருக்கும் இந்த தேதிதியில் திருபூட்டல் நடைபெரும் என்ற உத்திரவாத முகூர்த்த ஒலையில் தீர்மானிக்கிறார்கள்.

அதில் மனமக்கள் சிவமதம் என்று குறிக்கப்படுகிறார்கள்.




இந்த முகூர்த்த ஓலையை இரு வீட்டாரும் நகல் எடுத்துக் கொண்டு திருப்பூட்டலுக்கான வேலையில் இறங்குகிறார்கள்.

இதில் திருப்பூட்டல் என்பது திருமணம் என்ற வார்த்தைக்கான பண்டைய தமிழ்ச் சொல்,அதேபோல் முகூர்த்த ஓலையில் நிச்சயிக்கப்படுவதும் பண்டைய தமிழர் மரபே.

இந்த வழக்கம் பாகனேரி,சிவகங்கை,புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் இன்றும் கடைபிடிக்கப்படுவது பண்டைய தமிழரின் பழக்கவழக்கங்களின் எச்சங்கள் வெளிப்படுகிறது.

எனது திருமணமும் இதேபோல் எனது நட்சத்திரம், நாடு, சிவமதம் என்று எழுதிய முகூர்த்த ஓலை எனது தாய்மாமனிடம் கொடுக்கப்பட்டது.

திருமணத்தில் பிராமனர்கள் இல்லாமல் இருவீட்டாரின் தாய்மாமன்கள் முன்னிலையில் தாய்மாமனின் மனைவி சங்கை எடுத்து மங்கலம் முழங்கமிட திருப்பூட்டல் முடிந்தது.


நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு