தஞ்சை மாவட்டம் நாகூரில் தியாகராசதேவர், வேலுமணியம்மாள் இணையரின் தலைமகனாக 22/7/1932ல் பிறந்தார். தனது 14ஆம் வயதினில் திராவிடர் வாலிபர் சங்கம் என்ற அமைபினை தொடங்கி சக நண்பர்களுடன் இணைந்து தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.
நாகூர் தேசிய உயர்நிலைப்பள்ளியின் இறுதி வகுப்பினை 1950ல் முடித்த தேவர் அன்றைய ஒருங்கிணைந்த ஒரே கல்லூரியான குடந்தை அரசினர் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டமும் பெற்றார். பி.ஏ. பயிலும் போதே தேர்வாணையத் தேர்வும் பெற்றதால் 1956ல் கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளாராக அரசுப்பணியில் சேர்ந்தார்.
அறந்தாங்கியில் பணியாற்றும் போது அரசு அலுவலர் கிராமிய வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் கௌரவ செயலாளராகவும், திருவிலிப்புத்தூரில் பணியாற்றும் போது அரசு அலுவலர் ஒன்றியம், மற்றும் கூட்டுறவு நடுநிலை அலுவலர் சங்கம் இரண்டுக்கும் இராமநாத மாவட்ட தலைவராகவும் செயலாற்றியுள்ளார். 34 ஆண்டுகள் கூட்டுறவு துறையில் பணியாற்றி கூட்டுறவுத் துணைப்பதிவாளராக 31/7/1990ல் பணி ஓய்வு பெற்றார்.
சந்திராகாசன் காங்கேயர், தியாகராச காடுவெட்டியார் போன்றோரின் சமுதாய பணிகளின் பேரில் ஈர்ப்புக்கொன்டு 25/11/1990ல் தன்னை இராசராசன் கல்விப் பண்பாட்டுக்கழகத்தில் இணத்துக்கொண்டு கள்ளர்குல வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். 14/4/1991ல் காங்கேயர் தலைமையில் ஆரம்பித்த கள்ளர் பேரவையின் முதல் பொதுச்செயாலாளராக பொறுப்பேற்ற பெருமை சோமசுந்தர தேவரையே சேரும்.
1998ல் மூத்த இராசராசனாகிய இராம சுப்பிரமணிய காடுவெட்டியாரால் பதிவுசெய்யப்பட்ட கள்ளர் இனமுழக்கம் என்ற திங்கள் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று கடந்த 14 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். நமது பழம் பெருமையை சரித்திர சான்றுகளுடன் இளைய தாலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் ஒரு விழிப்புனர்ச்சியை ஏற்படுத்திவருபவர் சோமசுந்தர தேவராகும்
செம்மொழிப் போராளி,
தமிழ்ச்சுடர்,
செம்மொழிப்புரவலர்,
செம்மொழிப்போராட்டச்செம்மல்,
என்ற விருதுப்படங்களையும் சமூக சேவைகளுக்காக பெற்றுள்ளார்.
பொற்காலத்தலைமுறை என்ற நூலை இளைய தலைமுறையினருக்காக எழுதியமைக்கும் மற்ற பரவலான தமிழ்பணிக்குமாக பூண்டி வாண்டையார் விருது இவருக்கு 2007ல் வழங்கப்பட்டுள்ளது.