சனி, 30 மார்ச், 2019

கட்டலூர், பெரம்பூர் நரசிங்க தேவர் மற்றும் அழகியமணவாளத்தேவர்





ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு கூறும் பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது...  உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் - என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.




இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின.


வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. இப்பகுதியில் 1391இல் வடகோநாட்டு நாட்டவர், பேராம்பூர் அரசு என்ற ஆட்சி தலைவரான நரசிங்கதேவர்க்கு அரசு சுவந்திரம் என்ற ஆளும் உரிமையினை வழங்கியுள்ளனர். இதனால் இவ்வாட்சியர் தம் ஆளுகைக்கு உட்பட்ட புறகுடி மக்களிடமிருந்து வரியினைப் பணமாக வசூலிக்கும் அதிகாரத்தினைப் பெற்று உள்ளார். விளிம்புநிலையிலிருந்த புறகுடிமக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்க, உள்குடிமக்கள் பற்றிய குறிப்பு இல்லை.


சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர், கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர், பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர், பாண்டியர் காலம் முதல் ஆங்கிலேய ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்தவர்கள் நரசிங்க தேவர்கள்.

இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.

இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.

இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர்.

பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார்.

தஞ்சாவூர் ஜில்லாவில் நரசிங்க மங்கலம், நரசிங்கம்பேட்டை என்ற கிராமங்கள் இருக்கின்றன மேலும் நரசிங்கதேவர், நரங்கியதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர். மயில்ராயன் கோட்டை நாட்டு கள்ளர்கள் மன்னத்தேவர், பொன்னத்தேவர், சீவிலித்தேவர், வல்லாளத்தேவர், நரசிங்கத்தேவர் ஆகியோரின் வழி வந்தவர்கள் என்று தங்களை பதிவு செய்கின்றனர்.


இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர்.


இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது.

பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது.


பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும்,குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி, தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று மீண்டும் தேவாலயம் கட்ட இடமும், அனுமதியும் அளிக்கிறார்.

இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

அன்றும், இன்றும், என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது. மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது.



பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர் கோவில்

கல்வெட்டு அரசு:வாணாதிராயர்; ஆண்டு: 14-ஆம் நூற்றாண்டு

செய்தி: செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........

செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.....

கள்ளர் மரபை சேர்ந்த பஞ்சவராயர்


கள்ளர் மரபை சேர்ந்த பல்லவராயர்


கள்ளர் மரபை சேர்ந்த சோழகர்






(அழகியமணவாளத்தேவர்)

இடம்: விராலிமலை,முருகன் கோவில் (கோயில் முகப்பில் புதுக்கோட்டை மன்னர் குடமுழக்கு நடத்திய கல்வெட்டும் உள்ளது)

விராலிமலை சுப்பிரமணியர் கோயில் உருவாக்கத்தில் பங்களிப்பு உடையவர்கள். விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிட மாக கொண்டு ஆண்டுள்ளான். 


நரசிங்க தேவருக்குப்பிறகு வந்த அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது. இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்தான். அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்த முருகன் விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.

அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

இவ்வரசர்களைக்குறித்த செய்திகளில் இவர்கள் மறவரென்றும் கள்ளரென்றும் குறிப்புகள் காணப்படுகிறது. 

நரசிங்க தேவர்,  அழகியமணவாளத்தேவர் வகைறாக்கள் இன்றும் அதே பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.



விராலிமலை முருகன் கோயில் கல்வெட்டு

விராலிமலையில் மலைமேல் உள்ள முருகன் கோயிலைச் சுற்றி வரும் போது சண்டீசர் சந்திக்கு எதிரே  இந்த கல்வெட்டு உள்ளது.

இது விஜயநகரப் பேரரசின் வழிவந்த இரண்டாம் தேவராயர் (கி.பி. 1422 - 1446 )  காலத்தில் வெட்டப்பெற்றது என்றும், இவர் ‘அழகிய மணவாள தேவர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் பெரம்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார் என்றும் கூறினர்.

கல்வெட்டில்  விஜய நகர அரசர் பற்றிய வரிகள் இல்லை. நிலக்கொடை பற்றிய பகுதிச் செய்தி மட்டுமே உள்ளது. நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலத்தின் வருவாய் கொண்டு கோயிலில் கறியமுது படைக்கப்படுகிறது. தூணி அளவு நெல், கணியர் குடி (எல்லைப்பகுதி) வேம்பனூர் (எல்லைப்பகுதி)  ஆகிய தொடர்கள் உள்ளன. 

கல்வெட்டின் பாடம்:

1  . . . .ருளிச்செய்ய. . . . . . . . . .    டை
2  . . . . . .   மே . . . .  குடியு. . . .   தினப்ப குடிக்காபக
3 . . . வேம்பனூர் எல்லைக்கு மே(க்)கும் தெ
4 லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை (சோ0
5 கெல்லை கணியர்குடி எல்லைக்கும் ஆல
6 கெல்லைக்கு உள்ப்பட்ட நிலம் கொண்டு 
7 னாழிக்கு நெல் (தூணி) யும் கறியமிர்தும்

அதே கல்வெட்டின் வேறு படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.



இந்தக் கல்வெட்டு உள்ள இடத்திற்கு அருகே உள்ள சிற்பங்களின் படங்கள் இவை.




நன்றி

Saints,Goddess and kings by Dr.Susan Bally 
Gazetteer of Tamilnadu Pudukottai 
Tamilnadu archaeological department


திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு.முனிராஜ் வாணாதிராயர் 
திரு. பரத் கூழாக்கியார் 
திரு.சுதாகர் சம்பட்டியார்
திரு. காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திரு. துரை.சுந்தரம்


ஆய்வு : சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு