செவ்வாய், 27 மார்ச், 2018

சுதந்திர போராட்ட வீரர் கருப்பையா அம்பலம்


சிவகங்கைசீமை பட்டமங்கல நாடு பண்ணைதிருத்தி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் K.R.P.அம்பலம் என்ற கருப்பையா அம்பலம் அவர்கள் 15.9.1918-ம் ஆண்டு ஓர் விவாசாயக் குடும்பத்தில் பிறந்து எளிமைமிக்கவராகவும் அனைத்துதரப்பு மக்களிடமும் ஏற்ற தாழ்வு இன்றி இணக்கமாக வாழ்ந்தவர்.

வங்கத்து சிங்கம் நேதாஜி அவர்களால் ஈர்க்கப்பட்ட ஐயா KR.P அம்பலம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றவர். 

ஆங்கிலேய அடக்குமுறையை அனைவரிடமும் எடுத்துரைத்து போராட்டம் பல கண்டவர். ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு சிறை தண்டனை வழங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 
தன்னுடைய சுய உழைப்பில் ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

ஐயா KR.Pஅம்பலம் 27.6.1996-ம் ஆண்டு மண்ணை விட்டு மறைந்தார். ஆனால் 2004-ம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதற்க்காக பதக்கம் வழங்கப்பட்டது.


ஐயா KR.P அம்பலம் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.