ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

இராமநாதபுர இராணி திருமதி.லட்சுமி நாச்சியார்



இலட்ச்மி காடாச்ச முகம், நேர்த்தியான பார்வை, கம்பீர நடை, கரந்த பாலின் மனம், மதுரை மீனாட்சியின் குனம் என ஒரு சேர கிடைத்த பாண்டி நாட்டு தங்கம் அம்மா சேதுபூமியின் இராணியான மதிப்பிற்குரிய அம்மா திருமதி. லட்சுமி நாச்சியார் அவர்களின் தமிழ் தொண்டும், ஆன்மீகத் தொண்டும் தமிழ் சமூகத்திற்கு அளப்பரியது.

இராமநாதபுர ராமநாதபுர மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மனைவி திருமதி.லட்சுமி நாச்சியார் பாண்டி நாட்டில் கள்ளர் சமூகத்தில் பிறந்தவர்.

தனது படிப்பான Msc MPhill முடிந்தவுடன் கிபி1994ல் இராமநாதபுர மன்னரான மதிப்பிற்குரிய திரு.குமரன் சேதுபதியை திருமணம் நடந்தது.

திருமதி.லட்சுமி நாச்சியாரின் தந்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவின் முதல் முக்குலத்தோர் வகுப்பின் (senior council advocate) யான மதிப்பிற்குரிய திரு.ரி.ஸி நடராஜரின் புதல்வியாவார்.

அரசியல் செல்வாக்கு,பண பலம் என இருந்தாலும், அனைவரையும் இயற்கையிலே அரவணைக்கும் குனம் படைத்தவர்.


மிக இளவயதிலே அவர் ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் பிரம்மிக்க வைக்கிறது வைக்கிறது.

1.மதுரை தமிழ்ச் சங்கத்தின் துனை தலைவர்
2.தமிழுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் கலைக்கல்லூரியின் செயலாளர்
3.கங்கை நீர் புனிதப்படுத்தும் திட்டத்தின் இந்திய அளவிலான 11உறுப்பினரில் ஒருவர்
4.சேதுபதி நினைவு அறக்கட்டளையின் செயலர்


இதுபோக அவரது வாழ்நாள் குறிக்கோளாக கருதுவது மொழி சார்ந்தும், மக்கள் சார்ந்தும் வாழ்வதே குறிக்கோளாக கொண்டுள்ளார்.


மதிப்பிற்குரிய அம்மா திருமதி.லட்சுமி நாச்சியாரின் எண்ணங்கள் நிறைவேற கொற்றவை நாச்சியாரை பிராத்திக்கிறேன்.

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு