புதன், 13 பிப்ரவரி, 2019

பொ. ஆ. 1749 இல் ஐதர் அலியின் கள்ளர் படைப்பற்று



பஞ்சாபை பூர்விகமாக கொண்ட பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஐதர் அலி.

மைசூர் மன்னர் கிருட்டிணராச உடையாரிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் குதிரைப் படைக்குத் தளபதி ஆனார். மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும் விசுவாசியான இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார். ஐரோப்பியர்களின் போர் நுட்பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.





திண்டுக்கல்லில் இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அமைத்தார்.

மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் படையில் கள்ளர் படைப்பற்று என்ற படையை தனியாக வைத்திருந்தார். தேனி,திண்டுக்கல், திருச்சி மண்டலத்தை சேர்ந்த விசுவாத்திற்கு பெயர் போன அந்த கள்ளர் படைப்பற்று ஹைதர் அலியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது.

கள்ளர்கள், ஆங்கிலேய படைகளை நேரடியாக Mathlocks என்ற துப்பாக்கியும் மற்றும் தங்களுக்கே உரித்தான ஈட்டியை வைத்து தாக்கி சிதறடித்துள்ளனர்.

மேலும் கள்ளர் படைப்பற்று ஆங்கிலேயர் படையில் ஊடுருவி அவர்களின் படைபலம்,போர் வியூகம் போண்றவற்றை உளவு பார்த்து அதனை எழுத்து வடிவில் ஆவணமாக கொடுப்பார்கள்,ஹைதர் அலி அதை வைத்து போர் வியூகம் அமைக்கிறார். கர்நாடக வரலாற்று புத்தகத்தில் “கள்ளர் பற்று” என்றே உள்ளது.


இன்றும் கர்நாடாகவில் கள்ளர் என்றால் வீரன்,உளவாளி என்று பொருள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு என்று கவியரசு' கண்ணதாசன் அவர்கள் சொல்வதை நாம் இங்கு பொருத்தி பார்க்கவேண்டும்.

அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. ஆனாலும் அயிதர் படைகள் கள்ளர் குல மன்னர் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத தொண்டைமானால் விரட்டப்பட்டது.

நன்றி : திரு.சோழ பாண்டியன்
History of Mysore by C.Hayavadana Rao