வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு (கோயில்குடி)


"நத்தம்" கள்ளர் படைப்பற்று மூலமாக கோயில் சிலையை மீட்டதை பார்த்தோம். நத்தம் தாக்குதல் அந்த கோயிலின் இறைவன் யார், அந்த கோயிலில் கள்ளர்களுக்கான மரியாதை என்ன என்று பார்ப்போமயானால்

திருமோகூர் (கோயில்குடி) மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுக் கல் தொலைவிலுள்ளது. மதுரை- மேலுனர் நெடுஞ்சாலை வழியே ஒற்றைக்கடைவரை சென்று, அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும்.

அசுரர்களை ஏமாந்த சோணகிரிகளாக்க எடுக்கப்பெற்றதே மோகனாவதாரம். இந்த அவதாரம் எழுந்த தலமே மோகனுர்; அதுவே மோகூர்’ எனக் குறுகி திரு' என்ற அடையுடன் சேர்ந்து 'திருமோகூர்' என்றாயிற்று என்பதாக அறிகின்றோம்.

இந்த திவ்விய தேசத்தைத் திருமங்கை யாழ்வாரும் நாம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர்’ என்பது சிறிய திருமடல். நம்மாழ்வார் ஒரு திருவாய் மொழியால் (பதிகத்தால்) மங்களசாசனம் செய்துள்ளார். மருத நிலப் பகுதியைச் சார்ந்த இவ்வூர் நீர்வளம் நிலவளம் மிக்கதாகத் திகழ்கின்றது.

ஆழ்வார் காலத்தில் நான் மறைகளை நன்கறிந்தவர்களும், அவற்றை அநுட்டிப்பவர்களும் ஆன வைதிகர்கள் வாழும் இடமாக இருந்த்து.


திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதில் அமைந்துள்ளது. மதிலுக்கு வெளியே புஷ்கரிணி உள்ளது.


கிழக்கு நோக்கிய திருவாயிலை உடையது. வாயிலைத் தாண்டி யதும் நாம் வந்தடைவது கம்பத்தடி மண்டபம். இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருப்பதைக் அடுத்த வாயிலைக் கடத்து கருட மண்டபம்’ என வழங்கும் ஒரு மண்டபமும். அங்குக் கண்கவர் வனப்புடைய மூன்று தான்கு நல்ல சிலைவடிவங்கள் தூண்களை அணி செய்வதையும் காண்கின்றோம். 







ஒரு தூணில் மிதிலைச் செல்வியை அனைத்தவண்ணம் உள்ள கோதண்டராமன் சிலையும், அதனையடுத்து இன்னொரு துணில் இலக்குவன் சிலையும் காணப்பெறு கின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின் சிலையும் இரதிதேவியின் சிலையும் உள்ளன. இந்தச் சிலைகளுக்கிடையில் பெரிய திருவடி ஒரு சிறிய கோயிலில் நின்று காட்சி தருகின்றார். மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்திற்கு வந்து, அங்கிருந்து பார்த்தாலே கிழக்கே திரு முக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் என்ற இருவருடன் மூலவர் காளதேகப் பெருமாள் சேவை சாதிக்கின்றதைக் காணலாம்.



தாயாரின் திருநாமம் மோகனவல்லி, இவர் திருமோகூர் வல்லி நாச்சியார்', மேகவல்லி நாச்சியார்' என்ற திருநாமங்களாலும் வழங்கப் பெறுகின்றார்.






மதுரைக் காஞ்சி பழையன் என்ற குறு நிலமன்னன் திருமோகூரை ஆண்டதாகக் குறிப்பிடுகின்றது. பழையனுடைய நியாயசபையில் கோசர் என்ற வீரர்கள் இருந்தனர்.

மோரியர் வடுகரை முன்னர் அனுப்பி அவர்களைத் தொடர்ந்து தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தபொழுது பழையன் அவர்கட்குப் பணியாமல் கோசரின் துணையால் அவர் ஆலம்பலத்தில் வென்றதாக அகநானூறு பேசும். இதனால் மெளரியர் காலத்துக்கு முன்ன தாகவே மோகூர் பழம் பெருமையுடன் சிறப்புற்றிருந்தது என்பதை அறிகின்றோம்.

நாம் கள்ளர்களின் பட்டங்களான கூசர், மொரியர் பட்டங்கள் இதனுடன் தொடர்புடையதக இருக்க வேண்டும்.

இத்திருக்கோயிலில் இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இத் திவ்விய தலத்தில் பழையனின் பலத்த கோட்டையும் இருந்ததாகச் சான்றுகள் உள்ளன. திருமோகூர் தென்பறம்பு நாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்ந்திருந்த தையும் அறிக்கின்றோம்.

கோயில்குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருப்பதையும் அறிகின்றோம்.


கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள், ஆங்கிலேயன் ஹிரானை விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி முதலியவற்றை கடும் யுத்தத்தின் மூலம் மீட்டு வந்து சேர்த்தனர். இதற்காக திருமோகூர் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக் கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.
1.திருமோகூர்
2.பூலாம்பட்டி
3.கொடிக்குளம்
4.சிட்டம்பட்டி
5.வௌவ்வால்தோட்டம்
6.ஆளில்லாங்கரை 
ஆகியவையாகும்

முதல் ஐந்து கிராம கள்ளர்களும் ஆறாவது கரைக்குரிய மரியாதையை ஆளுக்கொரு ஆண்டாக பகிர்ந்து கொள்வர், தவிரவும் ஆண்டுதோறும் நடைபெறும் கஜேந்திரமோட்சம் திருவிழாவிற்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு திருமோகூர் காளமேகப்பெருமாள் சாமி வரும்போது கொள்ளையடிக்கப்பட்ட விக்கிரகங்களை கள்ளர்கள் மீட்ட செயலுக்கான மரியாதையாக இன்றுவரை இறைவன் கள்ளர் வேடம் புனைந்து வருகின்றார்.

கள்ளர்களுக்கு திருமோகூர் கோவிலில் இன்றும் பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது அம்மரியாதையை 2021 ஆம் ஆண்டு வௌவால் தோட்டம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தேவராமன்(உரிமையாளர் எஸ்.எஸ்.மகால் ஒத்தக்கடை) அவர்களின் புதல்வர் வழக்கறிஞர் சுதர்சனுக்கு வரலாற்று சிறப்பு மிக்க அந்த தேரோட்ட பட்டுபரிவட்ட மரியாதை இந்த வருடம் 29.3.2021 அன்று வழங்கப்பட்டது.






திருமோகூர் 8ம் நாள் திருவிழா அன்று காளமேகப்பெருமாள் சுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் பொழுது சூரக்குண்டு செட்டித்தாழையன் வம்சாவளியினருக்கு பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது.




அழகர்கோயில் , திருமோகூர் ஆகிய இரண்டு கோயில்களிலும் திருமால் “கள்ளர்”வேடமிட்டு வந்தாலும் அழகர்கோயில் கள்ளர்வேடமே காலத்தால் முந்தையதாக இருக்க வேண்டும் என ஆங்கிலேயர் ஆவணக்குறிப்புகள் கூறுகின்றன.

நன்றி : 
திரு வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம், மேலூர்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்