புதன், 7 நவம்பர், 2018

சேதிராயர் வரலாறு - கள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்





சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி (Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.


1. சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்
2. திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
3. கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.



சேதுராயன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சேதுராப்பட்டி:- திருச்சி மாவட்டம்,  மணிகண்டம் வட்டத்தில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் மிகுந்து வாழும் சிற்றூர்.

சேதுராப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் வட்டத்தில் திருநல்லூர் ஊராட்சியில்  சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சேதுராப்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் வட்டத்தில் , சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சேதுராவயல்: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வட்டத்தில், மேலப்புதுவயல் ஊராட்சியில் சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சேதுராயன்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி வட்டம், மாங்குடி ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சேதுராயன்நத்தம்:- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம்,  மாணிக்கமங்கலம் ஊராட்சியில் கீழ சேதுராயநத்தம்/  மேல சேதுராயநத்தம் என இரு ஊர்கள் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.



சேதிராயர் பட்டந்தாங்கிய  கள்ளர்கள்,  வல்லநாடு திருக்காட்டுப்பள்ளி அருகில் (இளங்காடு), கிராமத்தில் உள்ள ராசய்யா,,ராசாத்தி அம்மனை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

தஞ்சைக்கு தெற்கே கள்ளர் பட்டப் பெயரில் உள்ள கிராமங்களில் சேதுராயர் குடிகாடும் ஒன்று. சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சேதிராயர் என்ற சுவாமி சன்னதி. அவருக்கென்று தனி பல்லக்கும் உண்டு.


கள்ளர்கள் வாழும்  சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சேதிராயர் என்ற சுவாமி சன்னதி. அவருக்கென்று தனி பல்லக்கும் உண்டு.


சோழமண்டல அரசியலில் கோலோச்சியவர்கள்

1967 ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி. முருகையா சேதுரார்.






இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினரும், திமுக வின் தலைவர்களுள் ஒருவரான 
திருச்சி நடேசன் சிவா சேதுராயர்


ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,  2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சரான ஆர். வைத்தியலிங்கம் சேதுராயர்






நற்றமிழ்ச் சங்கம்’ வளர்த்த பெரியவர் பம்பையா சேதுராயர் 

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இளங்காடு. நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்படுவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே, ‘நற்றமிழ்ச் சங்கம்’ எனும் பெயரில் தமிழ் வளர்க்கச் சங்கம் தொடங்கப் பட்டிருக்கிறது இந்த ஊரில். ஊர்ப் பெரியவர் பம்பையா சேதுராயரின் முன்னெடுப்பில், 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நற்றமிழ்ச் சங்கம்தான் இந்த ஊரில் இத்தனை பெரும் தமிழ் ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. 

1980-களிலேயே இந்த ஊரைச் சேர்ந்த 60 பேர் பல்வேறு ஊர்களிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களாக, தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர் பெரும் புலவர் ராமசாமி. ஆனால், அவருக்கும் முன்னர், கோவிந்தசாமி சேதுராயர், சிங்காரவேல் சேதுராயர், நற்றமிழ்ச் சங்கத்தின் தோற்றுநர் பம்பையா சேதுராயர் எனப் பல முன்னோடிகள் உண்டு. தி.மு.க-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், சிங்காரவேல் சேதுராயரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துப்பேட்டை பாலாவாய் கிராமத்தில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர்.

8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து மூன்று சிலைகளை கண்ணன் சேதுராயர் குடும்பத்தினரால் பாதுகாத்து வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயிலில் 62 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 1200 ஆண்டு கால பழமையான சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பதற்கு வெங்கடாசலம் சேதுராயர் தந்தை சம்பந்தம் சேதுராயர் என்பவர் 35 ஆண்டுகளுக்கு முன் தந்த புகாரின் காரணமாக நடந்தவையாகும்.




சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ராயர் எழுவராவர்

1) சேதிராயர்
2) காலிங்கராயர்
3) பாணதிரியர்
4) கொங்குராயர்
5) விசையராயர்
6) கனகராயர்
7) கொடுபளுர்ராயர்



என திரு ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது. அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.




கூத்தையப்பர் கோயிலில் சேதிராயர்





பூவத்தூர் சேதுராயர் தெரு



திருக்காட்டுப்பள்ளி குட்டைச்சேவு சேதிராயர்:



தஞ்சையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் (கள்ளர்கள்) படிப்பை முன்னிறுத்தி இலவச உணவுடன் உறைவிடமாக தஞ்சை மேல வீதியில் ஒரு பிரம்மாண்ட கட்டடத்தில் கள்ளர் மகாசங்கம் என்ற பெயரில் இலவச விடுதியை பூண்டி ராவ்பகதூர் அ.வீரையா வாண்டையார் அவர்கள் காலத்தில் தொடங்கி சில பல ஆண்டுகள் நடத்தி வந்தனர். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படித்து கல்லூரிகளுக்குச் செல்வதைப் பொறுத்துக் கொள்ள இயலாத தஞ்சை மேல வீதி காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவர் தூண்டுதலால், அந்த இலவச விடுதி மூடப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கத் தொடங்கியது. 1952-56 வழக்குரைஞர் சுயம்பிரகாசமும், திருக்காட்டுப்பள்ளி குட்டைச்சேவு சேதிராயர் போன்றோரும் இலவச விடுதி தொடங்கவேண்டும் என்று சங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடியவர்கள்.

இளங்காட்டில் உள்ள பழமையான சேதிராயர்கள் வீடு






தொண்டராம்பட்டு சேதிராயர்களின் திருப்பணியில்













சேதிராயர்கள் காசு வெளியிட்டு உள்ளார்கள்.


தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு' (சேதிநாடு) என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது.

சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும், சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.

அரையர் -> அரைசர் -> அரசர் :- இதன்படி சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது. சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.

முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதில் திருவிசைப்பாவின் ஒன்பதாம் திருமுறை, பண்-பஞ்சமம், தலம்- கோயில் (சிதம்பரம், தில்லை)" திருகடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர்.

"ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன" என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. இங்கு சேதிராயர் " சேதிபர் கோன் என விளிக்கப்பட்டுள்ளனர், இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. சேதி என்பது குல பெயர் ஆகும்.

திருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம்.

இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும். (முனையரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் செல்வ சிறப்பிலும், அரசியலில் இன்று சிறப்புப்பெற்று விளங்கிவருகிறார்கள்)

புகழ்பெற்ற மன்னனான கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர் குலத்தினரே. மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.

சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான்.

தமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

காரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும்.

சங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம்.

பாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது

கல்வெட்டுகளில்

1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.

2. "முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன், கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன் எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

3. இரண்டாம் குலோத்துங்கன் (இ.பி. 1133 - 1150) ஆட்சி காலத்தில், திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல(கோவலூர்)ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன் பெயர் காணப்படுகிறது.

4. இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன் (இ.பி. 1163 - 1179.) இவன் காலத்தில், சேதிராயர் என்பவர் சிலர், கோவலராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர்.

5. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.

6. இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.


ஆய்வு:
உயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன். 
சர்வதேச கள்ளர் பேரவை